search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The old man died"

    • சாலையை கடக்க முயன்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த வன்னிவேடு கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வன் (வயது 62). இவர் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    இந்த நிலையில் கலைச்செல்வன் நேற்று இரவு வீட்டிற்கு செல்வதற்காக சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றார். அப்போது சாலையை கடக்க முயன்றார்.

    வாலாஜா நோக்கி வந்த ஆட்டோ கலைச்செல்வன் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

    அங்கிருந்தவர்கள் கலைச்செல்வனை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலைச்செல்வன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பலத்த காயமடைந்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பறவைகுட்டை கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி (வயது 60). இவர் கடந்த 18-ந் தேதி இரவு மிட்டூரில் இருந்து பறவைகுட்டை நோக்கி சென்றார்.

    அப்போது அவர் நிலைத்தடுமாறி பைக்கில் இருந்து தவறி விழுந்து, பலத்த காயமடைந்தார்.

    இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் மாசிலாமணியை மீட்டு சிகிச்சைக்காக, வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பயனின்றி மாசிலாமணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமசாமி (வயது 73). இவர் கடந்த மாதம் 26 -ந் தேதி சேலம் அரியானூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஜே.கே. கே. ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 73). இவர் கடந்த மாதம் 26 -ந் தேதி சேலம் அரியானூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த அவரை கொண்டலாம்பட்டி போலீசார் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று இரவு ராமசாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வெளியூருக்கு சென்று சங்கு ஊதி பொதுமக்களிடம் பணம் பெற்று வாழ்க்கை நடத்தி வந்தார்.
    • சம்வத்தன்று வழக்கம் போல் சங்கு ஊதிக் கொண்டு சாலையில் சென்றபோது பின்னால் வந்த வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட குழந்தைகவுண்டர் படுகாயம் அடைந்தார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகில் உள்ள குண்டுராமபாளையம் பகுதியை சேர்ந்தவர் குழந்தைகவுண்டர் (வயது 75).

    இவர் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வெளியூருக்கு சென்று சங்கு ஊதி பொதுமக்களிடம் பணம் பெற்று வாழ்க்கை நடத்தி வந்தார்.

    வாகனம் மோதியது

    இந்த ஆண்டும் புரட்டாசி மாதத்தில் சங்கு ஊதுவதற்காக பாப்பம்பாடி அருகில் உள்ள கொண்டக்காரனூர் பகுதியில் வந்து தங்கியுள்ளார். சம்வத்தன்று வழக்கம் போல் சங்கு ஊதிக் கொண்டு சாலையில் சென்றபோது பின்னால் வந்த வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட குழந்தைகவுண்டர் படுகாயம் அடைந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    வழக்கு

    இது குறித்து குழந்தை கவுண்டரின் மகள் மாதம்மாள் (45 )என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர்
    • வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள அல்லி முத்து நாயக்கர் தெருவை சேர்ந்தவர் லட்சு மணன் (வயது 61). இவர் இன்று காலை அப்பகுதியில் உள்ள சோமநாதர் ஈஸ்வரன் கோவில் குளகரை வழியாக நடந்து சென்றார்.

    அப்போது கால் தவறி குளத்தில் விழுந்தார். உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் காவேரிப்பா க்கம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையி னருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் அங்கு விரைந்த காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் ராணிப்பேட்டை தீயணைப்பு துறை வீரர்கள் உயிரிழந்த நிலையில் முதியவரை மீட்டனர்.

    இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக உடலை வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • குளிக்க சென்றபோது பரிதாபம்
    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்

    சேத்துப்பட்டு:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், ஈருடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தனிஷ்லாஸ் (வயது 60). திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த செய்யானந்தல் மதுரா கர்ணாம்பாடி ஏரியில் ஒருவர் மீன் பிடிப்பதற்காக குத்தகை எடுத்துள்ளார்.

    அதில் தனிஷ்லாஸ் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று குளிப்பதற்காக அவர் ஏரியில் இறங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக சேற்றில் சிக்கி கொண்டு நீரில் மூழ்கினார்.

    இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து சேத்துப்பட்டு தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினரும், போலீசாரும் ஏரியில் படகு மூலமும், தண்ணீரில் இறங்கியும் தனிஷ்லாசை தேடினர்.

    இரவு 8 மணி வரையும் தேடியும் அவர் கிடை க்கவில்லை . இதனால் தேடும் பணி கைவிடப்பட்டது. இன்று காலை தீயணைப்புத் துறையினர் தனிஷ்லாசை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேர தேடலுக்கு பின்பு அவரை பிணமாக மீட்டனர்.

    போலீசார் தனிஷ்லாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் குளிக்க சென்ற முதியவர் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • தண்டவாளத்தில் இறந்து கிடந்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த பச்சூர்- மல்லானூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதனைகண்டவர்கள் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் ேபரில் ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கயிறு கருப்பண கவுண்டரின் காலில் சுற்றி எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார்.
    • இதில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் ஆலு குழி காசியூர் நரியன் தோட் டத்தைச் சேர்ந்தவர் கருப்ப ணகவுண்டர் (வயது 76). இவருக்கு சுப்பாயாள் என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவர் விவசாய வேலை செய்து வருகிறார்.மேலும் சொந்தமாக 2 மாடு களை வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று கருப்பணகவுண்டர் மாடுகளை மேய்த்து விட்டு பின்னர் மாட்டு தொழு வத்திற்கு வரும்போது மாட்டின் கயிறு கருப்பண கவுண்டரின் காலில் சுற்றி எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை கோ பியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகி ச்சைக்காக அைழத்து சென்றனர். பின்னர் அங்கு முத லுதவி பெற்று மேல்சிகி ச்சைக்காக ஈரோடு மருத்து வக் கல்லூரி மருத்துவமனை க்கு கொண்டு சென்றனர்.

    இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த கரு ப்பணகவுண்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து அவ ரது மகன் மாரிமுத்து (43) கடத்தூர் காவல் நிலைய த்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுப்ரமணி சாலையோரம் தங்கி குப்பை, காகிதங்களை சேகரித்து விற்று பிழைப்பு நடத்தி வந்தார்.
    • குப்பை சேகரித்துக் கொண்டிருந்த சுப்பிரமணி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் தூக்கணாம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (60). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். சுப்ரமணி சாலையோரம் தங்கி குப்பை, காகிதங்களை சேகரித்து விற்று பிழைப்பு நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று மாதையன்குட்டையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி அருகே குப்பை சேகரித்துக் கொண்டிருந்த சுப்பிரமணி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் சுப்பிரமணி தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் மேட்டூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா மூலம் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சென்றனர்.
    • திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    புதுவை நகர பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 65). இவரது மனைவி அம்பிகா (60). இருவரும் மோட்டார் சைக்கிளில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சென்றனர். அப்போது திண்டிவனம் அடுத்த தீவனூர் அருகே சென்றபோது, சாலையில் இருந்த விநாயகர் கோவிலை கண்டனர். அங்கு சென்று சாமி கும்பிட மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சாலையை கடந்தனர்.

    அப்போது திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் இவர்கள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வெங்கடாசலம், மனைவி கண்முன்னே துடி துடித்து உயிரிழந்தார். லேசான காயங்களுடன் உயிர்தப்பிய அம்பிகாவை, அவ்வழியே சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த ரோசனை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெங்கடாசலத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனநலம் பாதிக்கப்பட்டவர்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை பஜார் தெருவை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 66) இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இதற்காக சிகிச்சை பெற்று சில மாதங்களாக மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த

    14-ந் தேதி அதிகளவில் மாத்திரைகளை ஜெகதீசன் சாப்பிட்டுள்ளார். இதனால் மயக்கமடைந்த ஜெகதீசனை அவரது குடும்பத்தினர் வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெகதீசன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது தொடர்பாக ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சண்முகம் (வயது 66). இவர் இன்று காலை சைக்கிளில் சேலம் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா பகுதியில் சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.
    • டேங்கர் லாரி எதிர்பாராத விதமாக சண்முகம் ஓட்டி வந்த சைக்கிள் மீது மோதியது.

    சேலம்:

    சேலம் அம்மாணி கொண்டலாம்பட்டி அரசமரத்து கரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 66). இவர் இன்று காலை சைக்கிளில் சேலம் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா பகுதியில் சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.

    அப்போது, ஆத்தூரில் இருந்து கொண்டலாம்பட்டி நோக்கி வந்த டேங்கர் லாரி எதிர்பாராத விதமாக சண்முகம் ஓட்டி வந்த சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சண்முகத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சண்முகம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் அன்னதானபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து டேங்கர் லாரியை ஓட்டி வந்த, தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பொம்மிடியை சேர்ந்த இளமுருகன் (62) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×