என் மலர்
உள்ளூர் செய்திகள்

இறுதி ஊர்வலத்தில் வெடி விபத்தில் முதியவர் பலி
- பட்டாசு மூட்டையை தூக்கி வீசியபோது விபரீதம்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த ஆசனாம்பட்டு கிராமத்தில் கடந்த 14-ந் தேதி ஜானகி என்பவர் உடல்நலக்கு றைவால் உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வ லத்தின் போது உறவினர்கள் பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர்.
அப்போது பெரிய சாக்கு மூட்டையில் இருந்த பட்டாசில் தீப்பொறி விழுந்துள்ளது.
இதனால், சாக்கு மூட்டை வைத்திருந்தவர்கள் அதனை தூக்கி வீசியுள்ளனர். அப்போது, சாலையோரம் நின்றிருந்த அதே கிராமத்தை சேர்ந்த முனுசாமி(60), சிவாஜி(60) மீது பட்டாசு மூட்டை விழுந்துள்ளது.
இதில், பட்டாசு வெடித்ததில் 2 பேருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்த வர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக இருவரையும் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி முனுசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
சிவாஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, முனுசாமியின் மனைவி முனியம்மாள் வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.






