அதிக மாத்திரைகளை சாப்பிட்ட முதியவர் பலி

மனநலம் பாதிக்கப்பட்டவர்போலீசார் விசாரணை
அதிக மாத்திரைகளை சாப்பிட்ட முதியவர் பலி
Published on

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை பஜார் தெருவை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 66) இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இதற்காக சிகிச்சை பெற்று சில மாதங்களாக மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த

14-ந் தேதி அதிகளவில் மாத்திரைகளை ஜெகதீசன் சாப்பிட்டுள்ளார். இதனால் மயக்கமடைந்த ஜெகதீசனை அவரது குடும்பத்தினர் வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெகதீசன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com