என் மலர்
உள்ளூர் செய்திகள்

பைக் மீது கார் மோதி முதியவர் பலி
- ஒருவர் படுகாயம்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த பூட்டு தாக்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுந்தரம் (வயது 65) மற்றும் ரவி (45). ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் ஜதர்புரத்தில் உள்ள உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது க கிருஷ்ணகிரியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கிச் சென்ற கார் இருசக்கர வாகனம் மீது எதிர் பாராதவிதமாக மோதியது.
இதில் பைக்கில் வந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்து மயங்கி கிடந்தனர். பின்னர் அந்த வழியாக வந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சுந்தரம் பரிதாபமாக இறந்தார். ரவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் விபத்து குறித்து பள்ளிகொண்டா போலீசில் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






