search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "govt bus hit"

    • மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சென்றனர்.
    • திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    புதுவை நகர பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 65). இவரது மனைவி அம்பிகா (60). இருவரும் மோட்டார் சைக்கிளில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சென்றனர். அப்போது திண்டிவனம் அடுத்த தீவனூர் அருகே சென்றபோது, சாலையில் இருந்த விநாயகர் கோவிலை கண்டனர். அங்கு சென்று சாமி கும்பிட மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சாலையை கடந்தனர்.

    அப்போது திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் இவர்கள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வெங்கடாசலம், மனைவி கண்முன்னே துடி துடித்து உயிரிழந்தார். லேசான காயங்களுடன் உயிர்தப்பிய அம்பிகாவை, அவ்வழியே சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த ரோசனை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெங்கடாசலத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
    • விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சீர்காழி:

    கும்பகோணத்திலிருந்து சிதம்பரம் நோக்கி நேற்றிரவு ஒரு அரசு பஸ் சீர்காழியிலிருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

    எருக்கூர் தூய சிந்தாத்திரை மாதா ஆலயம் அருகே சென்ற போது புத்தூரிலிருந்து சீர்காழி நோக்கி சென்று கொண்டிருந்த காரின் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற புத்தூர் மேல தெருவை சேர்ந்த சிவபாலன்(வயது 38) என்பவர் காருக்குள்ளேயே உடல் நசுங்கி இறந்தார்.

    காரில் பயணம் செய்த புத்துரை சேர்ந்த சக்தி வேல்(28), பாலமுருகன்(27) ஆகிய இருவரும் சிறு காயத்துடன் உயிர் தப்பினர. அரசு பஸ் சாலை ஓரம் சென்று நின்றது.

    இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் இறந்த சிவபாலன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    விபத்தில் இறந்த சிவபாலன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தநிலையில் புத்தூருக்கு வந்து ஒரு மாத காலம் ஆகிறது.

    இவருக்கும் ஓவியா (32) என்பவருக்கும் திருமணம் நடைபெற்று 3 வருடம் ஆன நிலையில் 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    கோவையில் இன்று காலை மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் வங்கி உதவி மேலாளர் பலியானார்.

    கோவை:

    கோவை கணபதி அருகே உள்ள மணியகாரம்பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் சஞ்சய் (வயது 30). இவர் பீளமேட்டில் உள்ள தனியார் வங்கியில் உதவி மேலாளராக வேலை பார்த்து வந்தார்.

    இன்று காலை இவர் வீட்டில் இருந்து வங்கிக்கு தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். மோட்டார் சைக்கிள் காந்திபுரம் 100 அடி ரோட்டில் சென்ற போது அந்தவழியாக கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற அரசு பஸ் மோதியது. இதில் சம்பவஇடத்திலேயே சஞ்சய் பரிதாபமாக இறந்தார். 

    இந்த தகவல் கிடைத்ததும் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் வீரம்மாள் தலைமையிலான போலீசார் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் சஞ்சயின் உடலை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரசு பஸ் மரத்தில் மோதிய விபத்தில் டிரைவர்-கண்டக்டர் உள்பட 12 பேர் படுகாயமடைந்தனர்.

    மேலூர்:

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு பஸ் இன்று அதிகாலை சிவகாசி நோக்கி புறப்பட்டது. காரைக்குடியை சேர்ந்த ஜெய்சன் சாமுவேல் பஸ்சை ஓட்டிவந்தார். பாலசுப்பிரமணியன் கண்டக்டராக இருந்தார்.

    காலை 7 மணிக்கு மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள புறாக்கூடு என்ற இடத்தில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த பார்சல் லாரி பஸ் மீது மோதுவது போல் வந்தது. அரசு பஸ் லாரி மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பஸ்சை லேசாக திருப்பினர். எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த பஸ் நிலை தடுமாறி சாலையோர புளியமரம் மீது மோதியது.

    மோதிய வேகத்தில் பஸ்சின் பெரும்பகுதி சேத மடைந்தது. இந்த விபத்தில் டிரைவர் ஜெய்சன் சாமுவேல், கண்டக்டர் பால சுப்பிரமணியன், பயணிகள் மனோஜ்குமார் (வயது 27), சுகந்தி (37), கார்த்திக்குமார் (32) உள்பட 12 பேர் படுகாயமடைந்தனர்.

    விபத்து நடந்த உடனே அப்பகுதி மக்கள் திரண்டு வந்து பஸ்சில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்சு மூலம் மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு ஜெய்சன் சாமுவேல், பால சுப்பிரமணியன் உள்பட சிலரின் நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்து குறித்து கீழவளவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செண்பகவேலன், தனிப்பிரிவு ஏட்டு பரசுராமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×