என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • தற்போது எருமப்பட்டி வட்டாரத்தில் மயில்களால் பல்வேறு வேளாண்மை பயிர்கள் சேதம் அடைகின்றன.
    • இவற்றை தடுப்பதற்கு ஹெர்போலிவ் என்ற மூலிகை பூச்சி விரட்டியை பயன்படுத்தி ஈச்சவாரி கிராமத்தில் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி வேளாண்மை உதவி இயக்குநர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தற்போது எருமப்பட்டி வட்டாரத்தில் மயில்களால் பல்வேறு வேளாண்மை பயிர்கள் சேதம் அடைகின்றன. இவற்றை தடுப்பதற்கு ஹெர்போலிவ் என்ற மூலிகை பூச்சி விரட்டியை பயன்படுத்தி ஈச்சவாரி கிராமத்தில் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. ஹெர்போலிவ் தெளிப்பதன் மூலம் மயில்கள், காட்டு பன்றிகள், மான்கள், முயல்கள், எலிகள், காட்டுப்பறவைகளை அண்டவிடாமல் பயிர்களை பாதுகாப்பது மட்டுமல்லாமல் பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகின்றது.இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டு உள்ளது. மேலும், நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல் வல்லுநர் சங்கர், எருமபட்டி பகுதி விவசாயிகளுக்கு இதுகுறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்து விவசாயிகள் கேட்ட சந்தேகங்களுக்கு விரிவாக விளக்க மளித்தார். வேளாண்மை உதவி இயக்கு நர் கவிதா முன்னிலையில் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • மறைமுகமாக மது பாட்டில்களை வைத்து க்கொண்டு சிலர் விற்பனை செய்து வருவதாக பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • பரமத்திவேலூர் கல்லூரி சாலை பகுதியை சேர்ந்த மாரியப்பன் (56), கந்தநகர் பகுதியைச் சேர்ந்த கனகராஜ்( 61) ஆகிய 3 பேரும் திருட்டுதனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் வெங்கமேடு பகுதியில் மறைமுகமாக மது பாட்டில்களை வைத்து க்கொண்டு சிலர் விற்பனை செய்து வருவதாக பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது, நெட்டையாம்பாளையம் சின்னாம்பள்ளிமேடு பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 47), பரமத்திவேலூர் கல்லூரி சாலை பகுதியை சேர்ந்த மாரியப்பன் (56), கந்தநகர் பகுதியைச் சேர்ந்த கனகராஜ்( 61) ஆகிய 3 பேரும் திருட்டுதனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்து, அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 35 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • பரமத்திவேலூர் சுல்தான் பேட்டை, மோகனூர் பிரிவு சாலையில், வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக் கோழி சந்தை கூடுகிறது.
    • இந்த நிலையில், கடந்த வாரத்தைவிட இந்த வாரம், வரத்து குறைந்ததால் நாட்டுக்கோழி விலை உயர்ந்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான் பேட்டை, மோகனூர் பிரிவு சாலையில், வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக் கோழி சந்தை கூடுகிறது.

    இங்கு, பரமத்தி, கீரம்பூர், பாலப்பட்டி, பாண்ட மங்கலம், பொத்தனூர் மற்றும் பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்த விவசாயி கள், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளை விற்ப னைக்காக கொண்டு வருவர். அவ்வாறு கொண்டு வரப்படும், நாட்டுக்கோழி களை வியாபாரிகள் பலரும் போட்டி போட்டி வாங்கிச் செல்வர்.

    இந்த நிலையில், கடந்த வாரத்தைவிட இந்த வாரம், வரத்து குறைந்ததால் நாட்டுக்கோழி விலை உயர்ந்தது. கடந்த வாரம், ஒரு கிலோ நாட்டுக் கோழி, 350 ரூபாய்க்கு விற்பனை யானது. ஆனால், நேற்று ஒரு கிலோ நாட்டுக்கோழி 400 ரூபாய்க்கு விற்பனை யானது. விலை உயர்ந்ததால், நாட்டுக்கோழிகளை கொண்டு வந்து வியாபாரம் செய்த பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • மோகனூர் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதை கண்காணிக்க, எஸ்.ஐ., இளையசூரியன் தலைமை யிலான போலீசார், பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கள்ளத்தன மாக டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி, இரவு நேரத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன், ஏ.டி.எஸ்.பி. ராஜூ (மதுவிலக்கு) ஆகி யோர் உத்தரவின் பேரில், மோகனூர் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதை கண்காணிக்க, எஸ்.ஐ., இளையசூரியன் தலைமை யிலான போலீசார், பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், மோகனூர் காவிரி ஆற்றின் கரை யில் உள்ள, செங்கத்துறை ரெயில்வே பாலம் அருகில், சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில், அவர் மோகனூர் உப்பிலியர் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் லோகநாதன் (வயது 37) என்பது தெரியவந்தது. மேலும், அவர் கள்ளத்தனமாக டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி, இரவு நேரத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.

    தொடர்ந்து, அவரிடம் இருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து சோதனை செய்தனர். அப்போது, 2 குவாட்டர் பாட்டில்களில், விஷநெடியுடன் கூடிய வாசம் வீசியதை அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து, லோக நாதனிடம் விசாரணை நடத்தியதில், போதை அதிகரிக்க ஊமத்தை சாறை மதுபானத்தில் கலந்ததாக அவர் கூறினார். போலீசார் லோகநாதனை கைது செய்து மேலும் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

    மேலும், அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை நீதிமன்ற பரிசோதனைக்கும், ரசாயன பகுப்பாய்வுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    கள்ளத்தனமாக விற்கும் மதுபானங்களில், போதை அதிகரிக்க, இது போன்ற விஷத்தன்மை கொண்ட ஊமத்தை செடியின் சாறைக் கலந்து விற்பதால், அந்த மதுபானத்தை குடிப்ப வர்களின் உடல்நிலை பாதிக்கும் அபாயம் உள்ளது.

    மேலும், தனி நபருக்கு அதிக அளவில் மது பாட் டில்களை விற்பனை செய்த டாஸ்மாக் விற்பனையாளர் குறித்தும் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன், அரசாயி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    • பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன், அரசாயி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன், அரசாயி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது.

    பின்னர் சிறப்பு அலங்கா ரத்தில் அங்காள பர மேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன், அரசாயி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் பக்தர்களுக்கு காட்சிய ளித்தனர். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    இதேபோல் பரமத்தி வேலூரில் உள்ள மாரியம்மன், பேட்டையில் உள்ள புதுமாரியம்மன், பகவதி அம்மன், கரூர் மெயின் ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன், நன்செய் இடையாற்றில் உள்ள மாரியம்மன், பாண்ட மங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மாரியம்மன், சேளூர் மாரி யம்மன், அய்யம்பாளையம் மாரியம்மன், பகவதி அம்மன், ஆனங்கூர் மாரி யம்மன், பகவதி அம்மன், செல்லாண்டியம்மன், வட கரையாத்தூர் மாரியம்மன் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்க ளில் சிறப்பு அபிஷேக ஆரா தனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபா ராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்த னர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம் நடை பெற்றது.
    • கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெயக்கு மார் தலைமை வகித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெயக்கு மார் தலைமை வகித்தார். பரமத்தி ஒன்றிய செயலாளர் சேகர் வரவேற்றார். மாநில பொருளாளர் முருக செல்வராசன், மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    மாவட்ட செயலாளர் சங்கர் வேலை அறிக்கையை வாசித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    மத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், தமிழ்நாட்டின் சாதாரண நிலை, இடைநிலை ஆசிரி யர்களுக்கும் வழங்கிட வேண்டும். புதிய தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தினை முற்றிலுமாக ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை தொடர வேண்டும்.

    பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட உயர்கல்விக் கான ஊக்க ஊதிய உயர்வுகள் தொடர்ந்து அனுமதிக்கப்பட வேண்டும். மாணவர்களின் கல்வி நலன் கருதி காலியாக உள்ள இடைநிலை ஆசிரி யர், பட்டதாரி ஆசிரியர், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட காலி பணியிடங்களை விரைந்து நிரப்பிட வேண்டும்.

    தொகுப்பூதிய முறையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் வடிவேல் நன்றி கூறினார். கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மத்திய அரசின் பிட் இந்தியா இயக்கம், சுற்றுலா அமைச்சகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக் கழகம் சார்பில், மருத்துவ மதிப்பீட்டு சுற்றுலா, இசை மற்றும் யோகா திருவிழா, நாமக்கல்லில் நடைபெற்றது.
    • 2 ஆண்டுகளுக்கு முன், கொரோனா தொற்று ஏற்பட்ட நேரத்தில், பிரதமரால் யோகா கலையின் மீது நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நாமக்கல்:

    மத்திய அரசின் பிட் இந்தியா இயக்கம், சுற்றுலா அமைச்சகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக் கழகம் சார்பில், மருத்துவ மதிப்பீட்டு சுற்றுலா, இசை மற்றும் யோகா திருவிழா, நாமக்கல்லில் நடைபெற்றது.

    கோவை பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நாமக்கல் எம்.பி. சின்ராஜ் முன்னிலை வகித்தார். தேசிய விருதாளர் கரகம் துர்கா, கின்னஸ் உலக சாதனையாளர் யோகா வைஷ்ணவி ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள், சுபாஷினி முத்துக்குமாரின் வாய்ப்பாட்டு ஆகியவை இடம்பெற்றன.

    மத்திய அரசின், இந்திய சுற்றுலா மற்றும் பயண மேலாண் நிறுவன தென் மண்டல சிறப்பு அலுவலர் மோனிகா பிரகாஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையால், இந்தியாவின் பாரம்பரிய யோகா கலை இன்று உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. 2 ஆண்டுகளுக்கு முன், கொரோனா தொற்று ஏற்பட்ட நேரத்தில், பிரதமரால் யோகா கலையின் மீது நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    கடந்த ஆண்டுகளில் ஒப்பிடுகையில், சுற்றுலா வருபவர்களில், தேசிய அளவில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. வரும், 3, 4 ஆண்டுகளில், தமிழகம் ஆரோக்கிய சுற்றுலா மையமாக மாறும்.

    தமிழகம் மருத்துவ சுற்றுலாவில் மேம்பாடு அடைந்து வரும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில், மத்திய அரசின் உதவியுடன், தனியார் பங்களிப்புடன், 50 ஏக்கர் பரப்பளவில், மருத்துவ மதிப்பீட்டு சுற்றுலா மையம் அமைய உள்ளது.

    விரைவில் அதற்கான அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்மூலம், தமிழகம் மட்டும் இன்றி, மற்ற மாநில மக்களும் பயன்பெறு வார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

    நேரு யுவகேந்திரா சங்கத்தின் தலைவர் சேவக் விஜய், நிர்வாக இயக்குனர் கார்த்திக் சோமசுந்தரம், விரிவுரையாளர் ஹரிணி பிரியா உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

    • நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் தலைமையில் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், சிறப்பு மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது.
    • மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துக் கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது.

    நாமக்கல்:

    தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி, நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் தலைமையில் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், சிறப்பு மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது.

    நாமக்கல் ஒருங்கிணைந்த வளாக அமர்வில் நீதிபதிகள் கிருஷ்ணனுன்னி, விஜய்கார்த்திக், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்குகளை விசாரணை செய்தனர்.

    இச்சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் சிறப்பு வழக்காக அறிவுசார் சொத்துரிமை நுகர்வோர் வழக்குகளும் மற்றும் ஏற்கனவே கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில், சமரசம் செய்து கொள்ளக் கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கி கடன், கல்வி கடன் தொடர்பான வழங்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவகாரத்து தவிர்த்த மற்ற குடும்ப பிரச்சினைகள் தொடர்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள் (நிலம் சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகாரங்கள்), விற்பனை, வருமான வரி, சொத்து வரி பிரச்சனைகள் போன்ற வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டு, விரைவாக தீர்ப்பளிக்கப்பட்டது.

    மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துக் கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. மக்கள் நீதிமன்றம் மூலம் முடித்துக்கொள்ளும் வழக்கு களுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழு மையாக திருப்பி தரப்படும் வாய்ப்பு உள்ளது.

    இச்சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 93 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. அதில், 62 வழக்குகளுக்கு ரூ.2 கோடியே 90 லட்சத்து 33 ஆயிரத்து 349 மதிப்பில் தீர்வு காணப்பட்டது.

    சிறப்பு மக்கள் நீதிமன்ற ஏற்பாடுகளை தலைமை நீதிபதி தலைமையில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் விஜய்கார்த்திக் செய்திருந்தார்

    • கவியரசனும், கார்த்திகாவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
    • நேற்று முன்தினம் திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, காட்டுப்புத்தூர் அருகே உள்ள மாயனூர் செல்லாண்டியம்மன் கோவிலில் காதல் ஜோடியினர் திருமணம் செய்து கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சேளூர் செல்லப்பம்பா ளையத்தை சேர்ந்தவர் பூபதி. இவரது மகன் கவியரசன் (வயது 22). இவர் என்ஜினீயரிங் முடித்துள்ளார்.

    அண்ணா நகர் அருகே உள்ள நெட்டையாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் கார்த்திகா (21). இவர் பி.சி.ஏ பட்டதாரி.

    இவர்கள் இருவரும் உற வினர்கள் என்பதால், இவர்க ளுக்குள் பழக்கம் ஏற்பட்டு கடந்த 4 ஆண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதல் இரு வீட்டாருடைய பெற்றோருக்கும் தெரிய வந்ததால், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் கவியரசனும், கார்த்திகாவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். நேற்று முன்தினம் திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, காட்டுப்புத்தூர் அருகே உள்ள மாயனூர் செல்லாண்டியம்மன் கோவிலில் காதல் ஜோடியினர் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் பெற்றோருக்கு பயந்து நேற்று பரமத்திவேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இரு தரப்பு பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இருதரப்பு பெற்றோரும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே கார்த்திகா தனது பெற்றோருடன் செல்ல மறுத்து, காதல் கணவருடன் செல்வதாக கூறியதால் அவரை கவியரசனுடன் மகளிர் போலீசார் அனுப்பி வைத்தனர்.

    • பரமத்தி வேலூர் தாலுகா கீழ் சாத்தனூர் அருகே பெருமாபாளையம் பகுதியில் திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை ஒருவர் விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசருக்கு தகவல் கிடைத்தது.
    • இதையடுத்து அவரை போலீசார் கைது செய்த னர். அவர் விற்ப னைக்கு வைத்திருந்த 10 மதுப்பாட்டில்களையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கீழ் சாத்தனூர் அருகே பெருமாபாளையம் பகுதியில் திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை ஒருவர் விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். இதில், கொண்டரசம்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடா சலம் (வயது 37) என்பவர் மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்த னர். அவர் விற்ப னைக்கு வைத்திருந்த 10 மதுப்பாட்டில்களையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பரமேஸ்வரர் ஆலயத்தில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    • அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பால் ,தயிர், இளநீர், பன்னீர் ,சந்தனம், விபூதி ,மஞ்சள் ,திருமஞ்சனம் , தேன்,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர் , பரமேஸ்வரர், மாசாணி அம்மன், அரசாயி அம்மன் , அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதேபோல் நன்செய் இடையாரில் உள்ள திருவேலீஸ்வரர் கோவில் ,பரமத்திவேலூர் காவிரி ஆற்றங்கரையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் கோவில், ஜேடர்பாளையம் ஈஸ்வரன் கோவில் ,வடகரையாத்தூர் ஈஸ்வரன் கோவில், பாண்டமங்கலம் ஈஸ்வரன் கோவில்மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு கால பைரவரை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    • குடும்ப அட்டையில் உள்ள குறைகளை திருத்தம் செய்யும் பொருட்டு குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 18 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகத்தில் குடும்ப அட்டை திருத்த சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.

    பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகத்தில் பொது வினியோகத் திட்டத்தின் மூலம் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், முகவரி திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், செல் போன் எண் பதிவு, செல்போன் எண் மாற்றம் மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் படி மேற்கொள்ள பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், குடும்ப அட்டையில் உள்ள குறைகளை திருத்தம் செய்யும் பொருட்டு குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு பரமத்திவேலூர் வட்ட வழங்கல் அலுவலர் சித்ரா தலைமை வகித்தார். சிறப்பு முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 18 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    முகாமில் தனி வருவாய் ஆய்வாளர் பூபாலன் மற்றும் முதல் நிலை வருவாய் ஆய்வாளர் சசிகலா ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×