என் மலர்
நாமக்கல்
- பிரசாந்த் (வயது 29). இவர் பவானியில் ஸ்டேட் வங்கியில் கிளை மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
- லாரியை முந்தி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், கலையரசன் முன்னால் வேகமாக வந்தார். அப்போது எதிர்பா ராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
குமாரபாளையம்:
பள்ளிபாளையம் அக்ர ஹாரம் பகுதியில் வசிப்பவர் பிரசாந்த் (வயது 29). இவர் பவானியில் ஸ்டேட் வங்கி யில் கிளை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 12-ந் தேதி பணி முடிந்து இரவில் தனது மோட்டார் சைக்கி ளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.
அதே நேரம், எதிர் திசை யில் சித்தோடு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கலையரசன்(22) மோட்டார்சைக்கிளில் வந்தார். அவருக்கு முன்னால் ஒரு லாரி வந்தது. லாரியை முந்தி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், கலையர சன் முன்னால் வேகமாக வந்தார். அப்போது எதிர்பா ராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் பிரசாந்த், கலையரசன் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்த னர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனும திக்கப்பட்டடு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது பற்றி குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- தேவராஜன் (வயது 42). இவர் சொந்தமாக போர்வெல் அமைக்கும் ரிக் வண்டி வைத்து தொழில் செய்து வருகிறார்.
- கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மத்திய பிரதேசத்தில் ஓடிக்கொண்டிருந்தபோது, இவருக்கு சொந்தமான ரிக் வண்டி விபத்துக்குள்ளானது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜன் (வயது 42). இவர் சொந்தமாக போர்வெல் அமைக்கும் ரிக் வண்டி வைத்து தொழில் செய்து வருகிறார்.
கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மத்திய பிரதேசத்தில் ஓடிக்கொண்டிருந்தபோது, இவருக்கு சொந்தமான ரிக் வண்டி விபத்துக்குள்ளா னது. இது சம்மந்தமாக, மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாய்ம்பூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விபத்துக்குள்ளான ரிக் வண்டிக்கு இழப்பீடு கேட்டு அவர், வாகன இன்சூரன்ஸ் செய்திருந்த யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு விண்ணப்பம் செய்துள்ளார்.
ஆனால் அனுமதிக்கப்பட்ட நபர்களை விட கூடுதலாக வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் சென்றதாக கூறி இழப்பீடு தர முடியாது என இன்சூரன்ஸ் நிறுவனம் மறுத்துவிட்டது. இதனால் வாகன உரிமையாளர் இழப்பீடு கேட்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து, நாமக்கல் நுகர்வோர் கோர்ட் உறுப்பினர் ரத்தினசாமி முன்னிலையில் நீதிபதி டாக்டர் ராமராஜ் தீர்ப்பு வழங்கினார். வாகனத்தில், கூடுதலாக 2 நபர்களை அழைத்துச் சென்றதால்தான் விபத்து நடந்தது என்று இன்சூரன்ஸ் நிறுவனம் கோர்ட்டில் நிரூபிக்கவில்லை. ரிக் வண்டி உரிமையாளருக்கு, வாகனத்தை ரிப்பேர் செய்ததற்கான செலவு ரூ.2 லட்சத்து 77 ஆயிரத்தை, 2016 முதல் 6 சதவீத வட்டியுடன் வழங்கவும், சேவை குறைபாட்டால் ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ. 50 ஆயிம் வழங்கவும் நுகர்வோர் கோர்ட், இன்சூரன்ஸ் கம்பெனிக்கு உத்தரவிட்டுள்ளது.
- நாமகிரிப்பேட்டையில் ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ் சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது.
- இந்த ஏலத்தில் 1350 மஞ்சள் மூட்டைகள் ரூ.56 லட்சத்திற்கு விற்பனை ஆனது.
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டையில் ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ் சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது.
இதில் நாமகிரிப் பேட்டை, அரியாக் கவுண்டம்பட்டி, ஒருவன்குறிச்சி, தொப்பபட்டி, புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மஞ்சளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
அதேபோல் ஒடுவன் குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ஈரோடு, சேலம், ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சளை ஏலம் எடுத்தனர்.
இந்த ஏலத்தில் 1350 மஞ்சள் மூட்டைகள் ரூ.56 லட்சத்திற்கு விற்பனை ஆனது. இதில் விரலி ரகம் 1000 மூட்டைகளும், உருண்டை ரகம் 300 மூட்டைகளும், பனங்காலி ரகம் 50 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டிருந்தன.
விரலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.5,689-க்கும், அதிகப்பட்சமாக ரூ.7,939-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.2,689-க்கும், அதிகபட்சமாக ரூ.6,609-க்கும், பனங்காலி ரகம் குறைந்த பட்சம் ஒரு குவிண்டால் ரூ.10,102-க்கும், அதிகபட்சமாக ரூ.14,022-க்கும் ஏலம் விடப்பட்டது.
- பரமத்திவேலூரில் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை 6 மணிக்கு மேல் சாரல் மழை பெய்ய ஆரம்பித்து தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது.
- சாலையோரங்களில் போடப்பட்டிருந்த சிற்றுண்டி கடைகள், பலகாரக்கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், பாலப்பட்டி, மணப்பள்ளி, மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், சேளூர், பிலிக்கல்பாளையம், அய்யம்பாளையம், ஆனங்கூர், வடகரையாத்தூர், கபிலக்குறிச்சி, பெரிய சோளிபாளையம், இருக்கூர், கோப்பணம் பாளையம், தி.கவுண்டம் பாளையம், சிறுநல்லிக்கோவில், கொத்தமங்கலம், சுள்ளிப்பாளையம், சோளசிராமணி, குரும்பலமகாதேவி, ஜமீன்இளம் பள்ளி, பெருங்குறிச்சி, மணியனூர், நல்லூர், கந்தம்பாளையம் கூடச்சேரி, பில்லூர், பரமத்தி, கபிலர்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை 6 மணிக்கு மேல் சாரல் மழை பெய்ய ஆரம்பித்து தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது.
இதன் காரணமாக சாலையோரங்களில் போடப்பட்டிருந்த சிற்றுண்டி கடைகள், பலகாரக்கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். சாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள், நடந்து சென்றவர்களும் நனைந்தபடியே சென்றனர்.
கடந்த 2 மாதத்திற்கு மேலாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் வெப்ப காற்று வீசி வந்த நிலையில், நேற்று மாலை பெய்த மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
கிராமப் பகுதிகளில், கடும் வெயிலின் தாக்கம் காரணமாக பயிர்கள் வாடிய நிலையில் இருந்தது. மழையின் காரணமாக வாடிய பயிர்கள் துளிர்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
7 மின்கம்பங்கள் சேதம்
இந்த நிலையில், நேற்று மாலை பெய்த மழையின் போது நல்லூர், கந்தம்பாளையம் பகுதிகளில் சூறாவளி காற்றும் வீசியது. இதில் மாரியம்மன் கோவில் மற்றும் ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் உள்ள 7 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தது.
இந்த சூறாவளி காற்றால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. மின்கம்பங்கள் சாய்ந்ததால் அப்பகுதி முழுக்க மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து மின்சார வாரிய ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மழையை தொடர்ந்து மாவட்டத்தில் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- கோடைகாலத்தில் பெய்த இந்த மழை பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நாமக்கல்:
கேரளாவில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதையொட்டி தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சேலம் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
இதில் வீரகனூர், நங்கவள்ளி, கரியகோவில், ஏற்காடு உள்பட பல்வேறு பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
186.6 மி.மீ மழை
மழையை தொடர்ந்து மாவட்டத்தில் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோடைகாலத்தில் பெய்த இந்த மழை பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக வீரகனூரில் 56 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கெங்கவல்லி -30, கரிய கோவில் -26, ஏற்காடு -25, ஓமலூர் -11, பெத்தநாயக்கன்பாளையம் -10.5, சேலம் -8, தம்மம்பட்டி -7, காடையாம்பட்டி -5, சங்ககிரி 3.1, ஆத்தூர் -2, ஆனை மடுவு -2, எடப்பாடி -1 என மாவட்டம் முழுவதும் 186.6 மி.மீ மழை பதிவானது. இன்று காலை மாவட்ட முழுவதும் வெயில் அடித்தபடி இருந்தது.
நாமக்கல்
நாமக்கல்லில் நேற்று மாலை 5 மணிக்கு மேல் 1 மணி நேரமாக கனமழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
சேலம் சாலை சந்திப்பு, குட்டை தெரு உள்பட பல இடங்களில் அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் குட்டை தெருவில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் அவற்றை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மரங்கள் சாய்ந்தன
வெண்ணந்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. அளவாய்ப்பட்டி, நடுப்பட்டி, அத்தனூர், நாச்சிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் பெய்த மாலையால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. மழையை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- இருக்கூர், வலசுப்பாளையம் பிரிவு சாலையில் உள்ள ஒரு கிணற்றில் அடையாளம் தெரியாத வாலிபர் சடலம் ஒன்று மிதப்பதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- கிணற்றில் சடலமாக மிதந்தவர் சுமார் 26 வயது நிரம்பிய வட மாநில வாலிபர் என்பது தெரியவந்துள்ளது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை அருகே இருக்கூர், வலசுப்பாளையம் பிரிவு சாலையில் உள்ள ஒரு கிணற்றில் அடையாளம் தெரியாத வாலிபர் சடலம் ஒன்று மிதப்பதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் உள்ள தீயணைப்பு துறையி னருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படை யில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து, சுமார் 25 அடி ஆழமுள்ள கிணற்றில் மிதந்த வாலிபரின் உடலை மீட்டனர்.
பின்னர் ஆம்பு லன்ஸ் மூலம் பிரேதத்தை பரமத்தி வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தினர். இதில், கிணற்றில் சடலமாக மிதந்த வர் சுமார் 26 வயது நிரம்பிய வட மாநில வாலிபர் என்பது தெரியவந்துள்ளது.
இவர் எங்கு வேலை பார்த்து வருகிறார்? எதற்காக இப்பகுதிக்கு வந்தார்? எப்படி கிணற்றில் விழுந்தார்? எந்த மாநிலத்தை சேர்ந்தவர்? என்பது குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- திருச்செங்கோடு செல்லும் சாலையில் நேற்று நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
- சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்குவதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சிறப்புத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தியில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் நேற்று நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்குவதாக வந்த புகாரின் அடிப்ப டையில் இந்த சிறப்புத் தணிக்கை மேற்கொள்ளப் பட்டது. இதில் 2 ஆம்னி வேன்கள் முறையான ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்டது கண்ட றியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து பரமத்திவேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவல கத்தில் நிறுத்தி வைத்தனர்.
மேலும் 4 ஆண்டுகளாக வரி செலுத்தாத பொக்லைன் எந்திரம் மற்றும் தகுதிச் சான்று புதுப்பிக்காமல் இயக்கிய ஒரு கனரக வாகனமும் கண்டறியப்பட்டு, ரூ.50 ஆயிரம் வரி செலுத்தவும், ரூ.25 ஆயிரம் அபராத தொகை வசூலிக்கவும் சோதனை அறிக்கை வழங்கப்பட்டது.
தொடர்ந்து இதுபோன்ற வாகன தணிக்கை மேற்கொள்ளப்படும் என நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் கூறினார்.
- நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பவித்திரத்தில் திங்கள்தோறும் வாரச்சந்தை கூடுகிறது.
- அதிகாலை, 5 மணிக்கு துவங்கும் இந்த சந்தை இரவு 8 மணி வரை நடக்கிறது.
சேந்தமங்கலம்:
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பவித்திரத்தில் திங்கள்தோறும் வாரச்சந்தை கூடுகிறது. இங்கு, கோம்பை, அப்பாயிபாளையம், வரகூர், பண்ணைகாரன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் வெள்ளாடு, செம்மறி ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதிகாலை, 5 மணிக்கு துவங்கும் இந்த சந்தை இரவு 8 மணி வரை நடக்கிறது.
துறையூர், திருச்சி, கொளக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள், போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கிச் செல்கி ன்றனர். நேற்று நடந்த வாரச்சந்தைக்கு, பல்வேறு கிராமங்களில் இருந்து ஆடுகள் வரத்து அதிகரித் திருந்தது. இதனால் ஒரே நாளில், 15 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- குமாரபாளையம் சேலம் சாலையில் கத்தேரி பிரிவு முதல் பழைய காவேரி பாலம் வரை சாலையின் இருபுறமும் வியாபாரிகள் பாதையை ஆக்கிரமிப்பு செய்து, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வந்தனர்.
- ஸ்டேட் வங்கி எதிரில் சாலையோர துணிக்கடைகள் இருப்ப தால், பஸ், லாரி உள்ளிட்ட கன ரக வாகனங்கள் வரும்போது, இருசக்கர வாகனங்கள், பாதசாரிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சேலம் சாலையில் கத்தேரி பிரிவு முதல் பழைய காவேரி பாலம் வரை சாலையின் இருபுறமும் வியாபாரிகள் பாதையை ஆக்கிரமிப்பு செய்து, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வந்தனர்.
இது குறித்து பல தரப்பி னர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நெடுச்சா லைத்துறையினர் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சரவணா தியேட்டர் எதிரில் பழைய இருசக்கர வாக னங்கள் விற்பனை செய்யும் நபர்கள், நடைமேடை முழுதும் ஆக்கிரமிப்பு செய்து வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தனர். அவைகளை எடுக்க சொல்லி அறிவுறித்தினர்.
மேலும் ஸ்டேட் வங்கி எதிரில் சாலையோர துணிக்கடைகள் இருப்ப தால், பஸ், லாரி உள்ளிட்ட கன ரக வாகனங்கள் வரும்போது, இருசக்கர வாகனங்கள், பாதசாரிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இத னால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பலரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.
இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், பலர் சாலை யினை ஆக்கிரமிப்பு செய்து துணிக்கடைகளை வைத்துள்ளனர். இது தவறு என சுட்டிக்காட்டி அகற்ற வேண்டிய நகராட்சி நிர்வா கத்தினர் வரி வசூல் செய்வதை காரணமாக காட்டி, கடை உரிமையா ளர்கள் கடைகளை அகற்ற மறுக்கின்றனர். மிக குறுகலான சாலையில் இந்த கடைகள் இருப்பதால் போக்குவரத்து பாதிப்பு, விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது என்றனர். அந்த துணி கடைகளின் ஆக்கிர மிப்புகளை அகற்றவும் பொதுமக்கள் நெடுஞ்சாலை துறையினரிடம் கோரிக்கை வைத்தனர்.
மேலும் சாலைகளில் வைக்கப்பட்ட ஸ்டாண்டிங் விளம்பர போர்டுகள், பிளெக்ஸ் போர்டுகள் உள்ளிட்டவைகள் அகற்றப்பட்டன. இந்த பணி யில் நெடுஞ்சாலைத்துறை யினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
- நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக கொல்லிமலை திகழ்கிறது.
- இங்குள்ள வனப்பகுதியில் இருக்கும் மரங்களை வெட்ட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக கொல்லிமலை திகழ்கிறது. இங்கு பலா, சில்வர் ஓக், தேக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியில் இருக்கும் மரங்களை வெட்ட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பட்டா நிலங்களில் உள்ள பல வருடங்கள் ஆன மரங்களை வெட்டி விற்க , நில உரிமையாளர்கள் விண்ணப்பித்தால் கலெக்டர், வன அலுவலர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து, குறிப்பிட்ட மரங்களை மட்டும் வெட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
ஆனால், மரங்களை வெட்ட ஒரு பகுதியில் மட்டும் அனுமதி வாங்கிக்கொண்டு, கொல்லிமலையில் பல இடங்களில் சட்ட விரோதமாக வியாபாரிகள் மரங்களை வெட்டி கடத்திச் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு கொல்லிமலை பகுதியில் பல்வேறு இடங்களில் வெட்டப்பட்ட மரங்களை 6 லாரிகளில் லோடு ஏற்றி, உள்ளே உள்ள மரங்கள் இருப்பது தெரியாமல், தார்பாய் போட்டு மூடி அடிவாரத்தில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடி அருகே நிறுத்தி வைத்திருந்தனர். பின்னர் நேற்று அதிகாலை, எவ்வித சோதனையுமின்றி எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டதாக சமூக ஆர்வலர்கள், பொதுமக்க ள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா கூறுகையில், இது தொடர்பாக மாவட்ட வன அலுவலரை உடனடியாக விசாரித்து, தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் போலீசார் மூலம் கொல்லிமலையில் இருந்து வரும் வாகனங்களை சோதனையிட நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
- மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளையப்பட்டி, ஆண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசின் சார்பில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது.
- பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து சிப்காட் எதிர்ப்புக்குழு அமைத்து, தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளையப்பட்டி, ஆண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசின் சார்பில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது.
இதற்குத் தேவையான நிலங்களை அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளிடம் கருத்துக்கேட்காமல், சிப்காட் அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து சிப்காட் எதிர்ப்புக்குழு அமைத்து, தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதைக் கைவிடக்கோரி, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் அன்புமணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செல்வராஜ், பொருளாளர் சிவகுமார், ரவீந்திரன், லோகநாதன், ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தளி எம்.எல்.ஏ ராமச்சந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் குணசேகரன், பொது செயலாளர் மாசிலாமணி, துணைத்தலைவர் லகுமையா, துளசிமணி, கொ.ம.தே.க தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், ஒருங்கிணைந்த மாவட்ட விவசாயி அணி செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் போராட்டம் குறித்து விளக்கி பேசினர்.
திரளான கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்கள், கொ.ம.தே.க. நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு, மோகனூர் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிடவேண்டும், நாமக்கல் நகராட்சி கழிவுநீர் தூசூர் வழியாகச் சென்று காவிரியில் கலப்பதை தடை செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
- அங்கன்வாடி மையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், குழந்தைகளுக்கு தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல் இருவார கால சிறப்பு முகாம் தொடக்க விழா நடை பெற்றது.
- ஒவ்வொரு ஆண்டும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் சுமார் ஒரு லட்சம் பேர் வயிற்றுப்போக்கு நோயால் உயிரிழக்கின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் அருகே உள்ள, பொரசபாளையம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், குழந்தைகளுக்கு தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல் இருவார கால சிறப்பு முகாம் தொடக்க விழா நடை பெற்றது. மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா முகாமை தொடங்கி வைத்து, குழந்தை களுக்கு மருந்து, மாத்தி ரைகளை வழங்கிப் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கை கட்டுப் படுத்துதல் தொடர்பாக பொது சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் பள்ளிக்கல்வித் துறை இணைந்து இரு வார விழிப்புணர்வு முகாம் 12.6.2023 முதல் 25.6.2023 வரை மாவட்ட முழுவதும் நடத்தப்படுகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் சுமார் ஒரு லட்சம் பேர் வயிற்றுப்போக்கு நோயால் உயிரிழக்கின்றனர். இந்த நோயால், ஊட்டச் சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளும் 2 வயதிற்கு கீழ்பட்ட குழந்தைகளும் மிகவும் பாதிப்புக்குள் ளாகின்றனர்.
வயிற்றுப்போக்கு நோய் சுலபமாக தடுக்கக் கூடியதும், குணப்படுத்தக் கூடியதாகும்.
சுத்தமான குடிநீர், சுற்றுப்புற சுகாதாரம், குழந்தைகளுக்கு 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது மற்றும் 2 வயது வரை இணை உணவுடன் தாய்ப்பால் கொடுப்பது, சரியான ஊட்டச்சத்து கொடுப்பது, கைகளை முறையாக சோப்பு கொண்டு கழுவுவது போன்றவற்றின் மூலம் வயிற்றுப்போக்கு வராமல் தடுக்கலாம் என்பதை அனைத்து தாய்மார்களும் தெரிந்துகொண்டு அவற்றை கடைபிடிக்க வேண்டும்.
வயிற்றுப்போக்கு கண்ட குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் மற்றும் துத்தநாக மாத்திரைகள் 14 நாட்களுக்கு வழங்குவதன் மூலம் நீர்ச்சத்து குறைவதை தடுப்பதுடன் உயிரிழப்புகளை சுலபமாக தவிர்க்கலாம்.
இது அனைத்து அங்கன் வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவ சமாக வழங்கப்படுகிறது என கூறினார்.
நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பூங்கொடி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் (பொறுப்பு) கீதா, டாக்டர்கள் ராஜேந் திரன், புவேனேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






