என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • உற்பத்தி செய்யப்படும் துணியின் விலை 20 முதல் 25 சதவீதம் அதிகரிக்கிறது.
    • கடந்த 3 மாதங்களில் ஜவுளி ரகங்கள் விற்பனை இன்றி தேங்கி கிடக்கின்றன.

    நாமக்கல்:

    தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஜவுளி உற்பத்தியில் அதிகம் பேர் ஈடுபட்டுள்ளனர். இந்த தொழிலில் ஒரு கோடிக்கு மேற்பட்டவர்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்ப ரில் ஒரு கேண்டி பஞ்சு ரூ.54 ஆயிரத்துக்கு விற்றது. பருத்தி விளைச்சல் குறைந்த தால் பஞ்சு தட்டுப்பாடு ஏற்பட்டது. அந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது ஒரு கேண்டி பஞ்சு ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம் வரை சென்றது.

    இதனால் நூல்களின் உற்பத்தி குறைந்ததால் மார்க்கெட்டுக்கு வரத்து சரிந்தது. இதன் காரணமாக ஜவுளி உற்பத்தி 50 முதல் 60 சதவீதம் சரிந்தது. பஞ்சு விலையை குறைக்க வேண்டும் என்று ஜவுளி உற்பத்தியாளர்கள், நூல் வியாபாரிகள் மில் அதிபர்கள் மத்திய அரசை வலியுறுத்தினர்.

    ஆனால் அதற்கு மாறாக பஞ்சு விலை மீண்டும் ஏறியது. பின்னால் பருத்தி விளைச்சல் அதிகரிப்பால் கடந்த ஆண்டு பிப்ரவரியில் மீண்டும் பஞ்சு விலை குறை தொடங்கியது. அப்போது ஒரு கேண்டி பஞ்சு ரூ.80 ஆயிரம் ஆனது.

    தற்போது மார்க்கெட்டில் ஒரு கேண்டி பஞ்சு ரூ. 72 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. பஞ்சு விலை சரிந்து வருவதால் கடந்த சில மாதமாக தமிழகத்தில் பல பகுதிகளில் ஜவுளி உற்பத்தி சற்று அதிகரித்துள்ளது. ஆனால் உற்பத்திக்கு ஏற்ப விற்பனை இல்லாததால் ஜவுளிகள் தேக்கம் அடைந்து, தொழில் முடங்கி உள்ளது.

    இதனால் ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும் என்பது உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மட்டும் 150 கோடிக்கு மேல் ஜவுளிகள் தேங்கியுள்ளதாகவும், ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் விசைத்தறி துணி உற்பத்தியாளர் சங்க முன்னாள் பொருளாளர் சிங்காரம் கூறியிருப்பதாவது,

    சேலம், நாமக்கல், கரூர், கோவை, ஈரோடு, திருப்பூர், விருதுநகர் உள்பட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் விசைத்தறி தொழில் பிரதானமாக உள்ளது. இத்தொழில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர்.

    தமிழகத்தில் உற்பத்தியாகும் விசைத்தறி ஜவுளிகளின் காட்டன் ரகங்கள் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, லண்டன், ஆஸ்திரேலியா நாடுகளுக்கும், இந்தியாவில் டெல்லி, மேற்கு வங்காளம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மாநிலங்களுக்கும் துண்டு லுங்கிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

    இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டு ஜவுளி ஏற்றுமதியும் முடங்கியுள்ளது. ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் விசைத்தறி நெசவு தொழில் ஈடுபட்டுள்ளவர்கள் மாற்று தொழிலை தேட தள்ளப்பட்டுள்ளனர்.

    பல பகுதிகளில் விசைத்தறி கூடங்கள் பூட்டி கிடக்கின்றன. விசைத்தறி நெசவு தொழில் மீண்டும் புத்துயிர் பெருமா? என்பது சந்தேகமாக உள்ளது.

    உலக நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி 4 சதவீதம் என்பது வேதனை அளிக்கிறது. இந்தியாவில் ஜவுளி ஏற்றுமதி உச்சத்தில் இருந்தது. அதன்பின் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி பருத்திக்கு வரி, நூலுக்கு வரி, உற்பத்தி செய்யப்படும் ஜவுளிக்கு வரி என பல அடுக்கு வரி வசூல் செய்யப்படுகிறது.

    அதனால் உற்பத்தி செய்யப்படும் துணியின் விலை 20 முதல் 25 சதவீதம் அதிகரிக்கிறது. மேலும் நூல் விலை அடிக்கடி உயர்ந்து வருவதால் விசைத்தறியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த 3 மாதங்களில் ஜவுளி ரகங்கள் விற்பனை இன்றி தேங்கி கிடக்கின்றன. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மட்டும் 150 கோடி ரூபாய் அளவுக்கு ஜவுளிகள் தேக்ககமடைந்துள்ளன.

    தமிழகத்தின் ஒரு கோடி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகளின் கடமை. ஜவுளி துறைக்கான தனி அமைச்சர் நியமித்து ஜவுளி ஏற்றுமதி ஊக்குவிக்க வேண்டும். பஞ்சு ஏற்றுமதி செய்வதை தவிர்த்து ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்க செய்ய வேண்டும்.

    தற்போதைய நிலை தொடர்ந்தால் விசைத்தறி ஜவுளி தொழில் பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடும். மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஜவுளி தொழிலை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாமக்கல்லில் உள்ள சேலம் ரோட்டில் ஒரு மசாஜ் சென்டர் இயங்கி வருகிறது.
    • நாமக்கல் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அதிரடியாக மசாஜ் சென்டரில் நுழைந்து சோதனை நடத்தினர் .

    நாமக்கல்:

    நாமக்கல்லில் உள்ள சேலம் ரோட்டில் ஒரு மசாஜ் சென்டர் இயங்கி வருகிறது. இந்த மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து விபசாரம் செய்வதாக புகார்கள் எழுந்தது. அதன் அடிப்படையில் நாமக்கல் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன் மற்றும் போலீசார் நேற்று அதிரடியாக மசாஜ் சென்டரில் நுழைந்து சோதனை நடத்தினர் .

    அப்போது மசாஜ் செய்வதாக கூறி ஆசையை தூண்டி சில பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதை அடுத்து மசாஜ் சென்டரின் உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள யாக்கோபுரத்தை சேர்ந்த ராஜேஷ் குமார் (வயது 27) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாமக்கல் சிறையில் அடைத்தனர்.

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • இங்கு வாரந்தோ றும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோ றும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகு திகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடை பெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமா நிலங்களை சேர்ந்த வியா பாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    தேங்காய்

    இந்த வாரம் நடந்த ஏலத்தில் 90.31½ குவிண்டால் எடை கொண்ட 23 ஆயி ரத்து 930 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.21.65-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.16.55-க்கும், சராசரி விலையாக ரூ.20.59-க்கும் என மொத்தம் ரூ. 1 லட்சத்து 68 ஆயிரத்து 656-க்கு விற்பனையானது.

    தேங்காய் பருப்பு

    அதேபோல் 166.25 குவிண்டால் எடை கொண்ட 372 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.90-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.73.69-க்கும், சராசரி விலையாக ரூ.75.49-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.74.19-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.75-க்கும், சராசரி விலையாக ரூ.71.85-க்கும் என மொத்தம் ரூ.11லட்சத்து92 ஆயிரத்து 828-க்கு விற்பனையானது.

    எள்

    அதேபோல் 172.78 குவிண்டால் எடை கொண்ட 232 மூட்டை எள் விற்ப னைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.147.11-க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ.140.99-க்கும், சராசரி விலையாக ரூ.145.59-க்கும், சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.148.29-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.126.39-க்கும், சராசரி விலையாக ரூ.144.59-க்கும் என மொத்தம் ரூ.23லட்சத்து 56ஆயிரத்து 326-க்கு விற்பனையானது.

    இதன்படி, சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 37லட்சத்து17 ஆயிரத்து 810-க்கு விற்பனையானது.

    • விவசாயிகளுக்கு காய்கறி பயிர்கள் சாகுப டியை ஊக்குவிக்க 75 சதவீத மானியத்தில் விதைகள் அல்லது நாற்றுகள் மற்றும் இயற்கை உரங்கள் வழங்கப்பட உள்ளது.
    • 5 வகையான செடிகள் அடங்கிய பழச்செடி தொகுப்பு விவசாயிகள் மற்றும் விவசாயி அல்லாத பயனாளிகள் 75 சதவீத மானியத்தில் ரூ.50 செலுத்தி பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் 2023-24-ம் ஆண்டு கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கூடச்சேரி, பிராந்தகம், வீரணம்பாளையம் மற்றும் சுங்ககாரன்பட்டி ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகளுக்கு காய்கறி பயிர்கள் சாகுப டியை ஊக்குவிக்க 75 சதவீத மானியத்தில் விதைகள் அல்லது நாற்றுகள் மற்றும் இயற்கை உரங்கள் வழங்கப்பட உள்ளது.

    மேலும் மா, பலா, கொய்யா, எலுமிச்சை, நெல்லி, சீத்தா போன்ற 5 வகையான செடிகள் அடங்கிய பழச்செடி தொகுப்பு விவசாயிகள் மற்றும் விவசாயி அல்லாத பயனாளிகள் 75 சதவீத மானியத்தில் ரூ.50 செலுத்தி பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

    பல்லாண்டு பழப்பயிர் சாகுபடி செய்ய பழச்செ டிகள் மற்றும் இயற்கை உரங்கள் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவ சாயிகள் தங்களது கணினி சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், ரேசன்கார்டு நகல் மற்றும் பாஸ்ப்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் பரமத்தி வட்டார தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

    மேலும் சொட்டுநீர் பாசனம் அமைக்க விருப்ப முள்ள அனைத்து கிரா மங்களை சேர்ந்த விவசாயி களும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று பரமத்தி தோட்டக்கலை உதவி இயக்குநர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

    • பாண்ட மங்கலத்தில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமணசாமி கோவிலில் வைகாசி மாத ஏகாதசியை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி இலை மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்ட மங்கலத்தில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமணசாமி கோவிலில் வைகாசி மாத ஏகாதசியை முன்னிட்டு, சாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்க ளால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி இலை மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பிரசன்ன வெங்கட்ரமணசாமி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரசன்னசிறப்பு அபிஷேகம்வெங்கட்ரமணசாமி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

    • 2006-2007-ம் நிதி ஆண்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் செலவில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் குளம் அமைக்கப்பட்டது.
    • பாகம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரி நீர், ஓடை வழியாக சென்று இந்த குளத்தில் கலக்கிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் ஆனங்கூர் ஊராட்சி. ஆனங்கூரிலிருந்து பாகம்பாளையம் செல்லும் தார்சாலை அருகே கடந்த 2006-2007-ம் நிதி ஆண்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் செலவில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் குளம் அமைக்கப்பட்டது.

    பாகம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரி நீர், ஓடை வழியாக சென்று இந்த குளத்தில் கலக்கிறது. இந்நிலையில் கடந்த 17 ஆண்டுகளாக இந்த குளம் நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது.

    குளம் நிரம்பி இருப்பதன் காரணமாக, அந்த சுற்று வட்டார பகுதியில் உள்ள கிணறுகளில் ஊற்று ஏற்பட்டு எப்போதும் தண்ணீர் இருப்பதால் விவ சாயிகள் முப்போக விவ சாயம் செய்து வருகின்றனர்.

    அதேபோல் நாமக்கல் மாவட்ட கலெக்டராக பணியாற்றிய சகாயம், இந்த குளத்தை பயிற்சி நீச்சல் குளமாக அறிவித்து இந்த குளத்தில் நீச்சல் பயிற்சி கொடுக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் இந்த குளத்திற்கு பக்கத்து தோட்டக்காரரான அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த குமார சுப்பிரமணியன் (வயது 40) என்பவர், ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரியாமல் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து, குளம் கட்டுப்பட்டுள்ள இடது கரையை சேதப்படுத்தி உள்ளார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், இது குறித்து ஊராட்சி தலைவர் மோகன்ராஜூக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊராட்சி தலைவர் மோகன்ராஜ், குளத்தின் இடது கரையை உடைத்துக் கொண்டிருந்த பொக்லைன் எந்திர ஓட்டுனரை எச்சரித்து தடுத்து நிறுத்தினார்.

    பின்னர் இது குறித்து ஊராட்சி தலைவர் மோகன்ராஜ் ஜேடர்பாளை யம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடி பாசனத்துக்காக கடந்த 12-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்.
    • அணையில் இருந்து சீறிப் பாய்ந்து வெளியேறிய தண்ணீரில் மலர்களை தூவி வரவேற்றார்.

    பரமத்தி வேலூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்க ளின் குறுவை சாகுபடி பாசனத்துக்காக கடந்த 12-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். அணை யில் இருந்து சீறிப் பாய்ந்து வெளியேறிய தண்ணீரில் மலர்களை தூவி வரவேற்றார்.

    இந்த அணையின் மூலம் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் உள்ள 17.37 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. முதலில் 3 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விடப்பட்ட நிலையில், பின்னர் படிப்படியாக அதி கரிக்கப்பட்டு, அணையில் இருந்து சுமார் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவேரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி ஆற்றுப் பாலம் பகுதிக்கு வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து காவிரி ஆற்று தண்ணீர் மோகனூர் வழியாக திருச்சி சென்று கொண்டிருக்கிறது. இதனால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • உற்பத்தி அதிகரிப்பால் பூக்கள் விலை சரிவடைந் துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    • மேலும் விலை சரிவால் பூ பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை, தண்ணீர் பந்தல், சின்ன மருதூர், பெரிய மருதூர், நாக பாளையம், கண்டிபாளம், செல்லப்பம்பாளையம், பள்ளக்காடு மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம் பாளையம், நொய்யல், பேச்சிப்பாறை நடையனூர், குளத்துப்பாளையம், கொங்கு நகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் குண்டு மல்லிகை, முல்லை, ரோஜா, சம்பங்கி, அரளி, சாமந்திப்பூ, செவ்வந்தி, காக்கட்டான் உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.

    இங்கு விளையும் பூக்களை உள்ளூர் பகுதி களுக்கு வரும் வியாபாரி களுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் 2 தினசரி பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    ஏலம் எடுப்பதற்கு பரமத்திவேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களைச் சேர்ந்த வியாபாரி கள் வந்திருந்து பூக்களை வாங்கி செல்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை ரூ.400-க்கும், சம்பங்கி கிலோ ரூ.60-க்கும், அரளி கிலோ ரூ.150-க்கும், ரோஜா கிலோ ரூ.240-க்கும், முல்லைப் பூ ரூ.350-க்கும், செவ்வந்திப்பூ ரூ.240-க்கும், கனகாம்பரம் ரூ.450-க்கும் ஏலம் போனது.

    நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.300-க்கும், சம்பங்கி கிலோ ரூ.30-க்கும், அரளி கிலோ ரூ.110-க்கும், ரோஜா கிலோ ரூ.200-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.300-க்கும், கனகாம்பரம் ரூ.350-க்கும் ஏலம் போனது.

    உற்பத்தி அதிகரிப்பால் பூக்கள் விலை சரிவடைந் துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் விலை சரிவால் பூ பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

    • நாமக்கல் நகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • கமலாலயம் குளத்தில் நாணல் புற்கள் வளர்ந்துள்ளதை அகற்றி சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருவதையும் அவர் பார்வையிட்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பருவமழை துவங்க உள்ள நிலையில், நாமக்கல் நகராட்சிப் பகுதியில் உள்ள ஆர்.பி.புதூர் குட்டை தெரு, பூங்கா சாலை, கொசவம் பட்டி ஏரி ஆகிய இடங்களில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி, வடிகால் தூர்வாரும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

    நாமக்கல் நகராட்சி பூங்கா சாலை அருகே மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கமலாலயம் குளத்தில் நாணல் புற்கள் வளர்ந்துள்ளதை அகற்றி சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருவதையும் அவர் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து ஆர்.பி.புதூர் குட்டை தெருவில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர், மழை நீர் வடிகால் கட்டமைப்பு களை தூர்வாரி, மழைக்கா லங்களில் மழைநீர் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    பின்னர் கொசவம்பட்டி ஏரியில் கால்வாய் தூர்வாரும் பணியினை பார்வையிட்டு, மழை தொடங்கும் முன் பணியை முடிக்க வேண்டும் என அதிகாரிகளை வலியுறுத்தினார்.

    அதைத்தொடர்ந்து, நாமக்கல் உழவர் சந்தையில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், உழவர் சந்தையினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும் என அலுவலரை அறிவுறுத்தினார். ஆய்வின் போது, நாமக்கல் நகராட்சி ஆணையர் சென்னுகி ருஷ்ணன், நகராட்சி பொறி யாளர் சுகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • முட்டையின் உற்பத்தி, தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
    • ஒரு முட்டையின் மைனஸ் இல்லாத பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

    தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி) தினசரி பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த 4-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை ரூ.5.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக முட்டை விலை 515 காசுகளாக நீடித்தது.

    இந்த நிலையில் முட்டை உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. இதில் முட்டையின் உற்பத்தி, தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் முட்டை விலை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி ஒரு முட்டையின் மைனஸ் இல்லாத பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு:- சென்னை-580, பர்வாலா-458, பெங்களூர்-570, டெல்லி-472, ஹைதராபாத்-505, மும்பை-565, மைசூர்-575, விஜயவாடா-480, ஹொஸ்பேட்-530, கொல்கத்தா-552.

    நாமக்கல் மண்டலத்தில் 25 லட்சத்திற்கும் அதிகமான கறிக்கோழிகள் வழங்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    பல்லடத்தில் நேற்று கறிக்கோழி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கறிக்கோழி விலையை கிலோவுக்கு 2 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கறிக்கோழி உயிருடன் ரூ.139 ஆக இருந்த நிலையில் 2 ரூபாய் உயர்த்தி, ஒரு கிலோ ரூ.146 ஆக பி.சி.சி அறிவித்துள்ளது. இதனால் உரித்தகோழி ஒரு கிலோ ரூ.250 முதல் ரூ.300 வரை சேலம், நாமக்கல் மாவட்ட சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

    கடும் வெயிலால் கோழியின் எடை குறைந்ததால் கறிக்கோழி விலை உயர்ந்ததாக பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முட்டைக்கோழி நிலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிலோ ரூ. 95 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    • பூ மாலை வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் மகளிர் வாழ்வாதார சேவை மையத்தினை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் உமா அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
    • நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை அருகில் செயல்பட்டு வரும் நைனாமலை உற்பத்தியாளர் நிறுவனத்தின் நைனாமலை உழவர் அங்காடியில் மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல் பூ மாலை வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் மகளிர் வாழ்வாதார சேவை மையத்தினை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் உமா அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    இதனைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை அருகில் செயல்பட்டு வரும் நைனாமலை உற்பத்தியாளர் நிறுவனத்தின் நைனாமலை உழவர் அங்காடியில் மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ராசிபுரம் ஒன்றியம், சிங்களாந்தபுரம் ஊராட்சியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி புதியதாக அமைக்கப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு, இதன் மூலம் வழங்கப்படும் குடிநீர் இணைப்புகளின் எண்ணிக்கை, பயன்பெறும் குடியிருப்புகள் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை வட்டார வளர்ச்சி அலுவ லரிடம் மாவட்ட கலெக்டர் கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களிடம் குடிநீர் முறையாக விநியோகிக் கப்பட்டு வருகின்றதா என கேட்டறிந்தார். மேலும், ராசிபுரம் வட்டம், பெருமா கவுண்டம்பாளையம், தொ.ஜேடர்பாளையம், காக்காவேரி ஆகிய இடங்களில் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் பட்டா வழங்கப்பட்டு, இணையவழி பட்டா வழங்குவதற்காக வரன்முறைபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் கணேஷ் பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர் தனம், சிங்களாந்தபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் புஷ்பா ஆகியோர் உட்பட வருவாய் துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.
    • இந்த தேர்விற்கு www.tnusrb.tn.gov. என்ற இணை யதளம் மூலம் வருகிற 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.

    தற்போது தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் 129 பணிக்காலியிடங்கள் கொண்ட தீயணைப்பு நிலைய அதிகாரிகள், 621 பணிக்காலி யிடங்கள் கொண்ட காவல் உதவி ஆய்வாளர் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தேர்விற்கு www.tnusrb.tn.gov. என்ற இணை யதளம் மூலம் வருகிற 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான இலவச பயிற்சி வகுப்பிற்கு புதிதாக அறிவிக்கப்பட் டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின்படி, நேரடியாக நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

    2023-ம் ஆண்டிற்கான உதவி ஆய்வாளர் தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்று வருகிறது.

    ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் onlineclassnkl@gmail.com என்ற இ.மெயில் மூலமாகவோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தை நேரில் தொடர்பு கொண்டு தங்களது பெயர் மற்றும் சுயவிவரத்தினை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

    ×