என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • நீடித்த வேளாண்மைக் கான தேசிய திட்டம் (என்.எம்.எஸ்.ஏ) என்ற மிகப்பெரிய திட்டத்தின் உள்ளே அடங்கி இருக்கும் விரிவான ஒரு பகுதியே பாரம்பரிய விவ சாய மேம்பாட்டுத் திட்டம் (பி.கே.வி.ஒய்) என்பதாகும்.
    • இந்தத் திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்கு னர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீடித்த வேளாண்மைக் கான தேசிய திட்டம் (என்.எம்.எஸ்.ஏ) என்ற மிகப்பெரிய திட்டத்தின் உள்ளே அடங்கி இருக்கும் விரிவான ஒரு பகுதியே பாரம்பரிய விவ சாய மேம்பாட்டுத் திட்டம் (பி.கே.வி.ஒய்) என்பதாகும்.

    இந்தத் திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்படுகிறது. இயற்கை வேளாண்மையில் ஈடுபடக்கூடிய கிராமங்க ளைத் தத்தெடுத்து அவற்றை ஒரு தொகுப்பாக அணுகியும், விவசாயி - அரசு இ-சேவை அல்லாத 3-வது ஒரு அமைப்பிடமிருந்து சான்றி னைப் பெற்றும் இயற்கை வேளாண்மை வளர்ச்சிக்கு ஊக்கம் தரப்படுகிறது.

    இந்தத்திட்டத்தில், வேளாண் விளைபொருள்கள் பூச்சிக்கொல்லி மருந்துப்படிவுகள் இல்லாத வையாக, நுகர்வோரின் உடல்நலத்தை மேம்படுத்தக்கூ டியதாக இருக்கும்.

    விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து, இயற்கை வளங்களைத் திரட்டி இடுபொருள்களை உருவாக்க விவசாயிகளை ஊக்குவிக்கும். இத்திட்டம் நமது பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு நடப்பு நிதியாண்டில் செயல்படுத்தப்படவுள்ளது.

    இத்திட்டம் தொடர்பான தகவல்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவ லர்கள் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது உழவன் செயலியில் பதிவு செய்து பயனடையலாம்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • ஒவ்வொரு வருடமும் “தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்” 2 வாரங்கள் அனுசரிக்கப்படுகிறது.
    • இந்த ஆண்டுக்கான முகாம் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. வருகிற 25-ந்தேதி வரை முகாம் நடைபெறுகிறது.

    சேலம்:

    5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கினால் ஏற்படும் மரணத்தை முற்றிலுமாக தவிர்க்கும் நோக்கத்தில் ஒவ்வொரு வருடமும் "தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்" 2 வாரங்கள் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான முகாம் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. வருகிற 25-ந்தேதி வரை முகாம் நடைபெறுகிறது.

    முகாமில் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் 5 வயது குழந்தைகள் வசிக்கும் வீடுகளுக்கு சென்று ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்புநீர் கரைசல் தூள் பாக்கெட்டுகளை இலவச மாக வழங்கி வயிற்றுப்போக்கின் போது அதனை உபயோகிப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றர்.

    அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ மனைகளிலும் ஓ.ஆர்.எஸ். பகுதி அமைக்கப்படும் மற்றும் ஓ.ஆர்.எஸ். உப்பு நீர் கரைசல் தயாரிப்பது, கை கழுவும் முறை, பிரத்யேக தாய் பால் அளிக்கும் முறை, இணை உணவு வழங்கும் முறை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்

    5 வயதிற்குட்பட்ட குழந்தை இறப்பிற்கான முக்கிய காரணங்களில் வயிற்றுப்போக்கு ஒன்றாகும். அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்போக்கால் குழந்தைகளுக்கு நீர்சத்து குறைபாடு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்படும்.

    இந்நீர்சத்து குறைபாட்டினை தடுக்க ஓ.ஆர்.எஸ். (உப்புநீர் கரைசல்) எனும் உயிர்காக்கும் அமுதம் அளிப்பதன் மூலம் வயிற்றுப்போக்கினால் ஏற்படும் இறப்பினை தடுக்கலாம். மேலும் வயிற்றுப்போக்கின் போது துத்தநாக மாத்திரையை 14 நாட்களுக்கு தொடர்ந்து கொடுப்பதால், வயிற்றுப்போக்கு விரைவில் குணமடையும்.

    வயிற்றுப்போக்கு எளிதில் தடுக்க கூடிய நோய்களில் ஒன்றாகும். பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு பற்றிய விழிப்புணர்வின் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கினை கட்டுப்படுத்தலாம்.

    இதனை கருத்திற்கொண்டு தேசிய அளவில் சேலம் மாவட்டத் தில் உள்ள 107 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 501 துணை சுகாதார நிலை யங்கள், 13 அரசு மருத்துவ மனைகள் மற்றும் 2,696 அங்கன்வாடி மையங்களில் முகாம் நடத்துதப்படுகிறது.

    இம்முகாம்களில் பொது சுகாதாரம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட துறைகளைச் சார்ந்த 3,212 பணி யாளர்கள் இணைந்து பணியாற்ற உள்ளார்கள். சேலம் மாவட்டத்தில் இந்காத முகாம் மூலம் 2 லட்சத்து 60 ஆயிரம் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பயன்பெற உள்ளனர் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு கிருத்திகையை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு கிருத்திகையை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் கிருத்திகையை முன்னிட்டு கபிலர்மலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி கோவில், பிராந்தகத்தில் 34.5 அடி உயரம் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர்கோவில்,

    பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்ட வர் கோவில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ர மணியர், ராஜா சுவாமி திருக்கோவிலில் உள்ள ராஜா சுவாமி, பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள முருகன், சுள்ளிப்பா ளையம் அருகே அருணகிரி நாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வான சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெ ருமானுக்கு சிறப்பு அபிஷே கமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

    • முட்டை உற்பத்தி குறைந்த நிலையில் தேவை அதிகரித்துள்ளதால் தொடர்ந்து விலை உயர்ந்து வருவதாக பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • 141 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை 143 ரூபாயாக உயர்ந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கு அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை நாமக்கல்லில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. இதில் முட்டையின் தேவை, உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 525 காசுகளாக இருந்த முட்டை விலை 530 காசுகளாக உயர்ந்தது. முட்டை உற்பத்தி குறைந்த நிலையில் தேவை அதிகரித்துள்ளதால் தொடர்ந்து விலை உயர்ந்து வருவதாக பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல பல்லடத்தில் கறிக்கோழி உற்பத்தியா ளர்கள் வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் கறிக்கோழி விலையை மேலும் 2 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 141 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை 143 ரூபாயாக உயர்ந்தது.

    முட்டை கோழி விலை எந்த மாற்றமும் இல்லாமல் 95 ரூபாயாக நீடிக்கிறது.

    • நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளுக்கு என்இசிசி தினசரி விலை நிர்ணயம் செய்து வருகிறது.
    • வழக்கம்போல், கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை 141 ரூபாயாகவும், முட்டை கோழி பண்ணை கொள்முதல் விலை 95 ரூபாய் ஆக நீடிக்கிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் தமிழகம், கேரளாவில் விற்பனை ஆகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு தினமும் 50 லட்சம் முட்டைகள் செல்கிறது.

    நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளுக்கு என்இசிசி தினசரி விலை நிர்ணயம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முட்டையின் தேவை மற்றும் முட்டை உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில் முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது . அதன்படி 520 காசுகளாக இருந்த முட்டை விலை 525 காசுகளாக உயர்ந்தது.

    வழக்கம்போல், கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை 141 ரூபாயாகவும், முட்டை கோழி பண்ணை கொள்முதல் விலை 95 ரூபாய் ஆக நீடிக்கிறது. இந்த விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    • சமையல் கியாஸ் நுகர்வோர் மற்றும் தன்னார்வலர்களுடன் குறைதீர்கூட்டம் நடந்தது.
    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 22-ந் தேதி மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் சமையல் கியாஸ் நுகர்வோர் நலன் கருதி, அனைத்து எண்ணெய் மற்றும் சமையல் கியாஸ் நிறுவன மேலாளர்கள், சமையல் கியாஸ் ஏஜெண்டுகள், விநியோகஸ்தர்கள், சமையல் கியாஸ் நுகர்வோர் மற்றும் தன்னார்வலர்க ளுடன் குறைதீர்கூட்டம், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 22-ந் தேதி மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.

    சமையல் கியாஸ் விநியோகம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை தெரிவித்து மனுக்கள் அளிக்கலாம்.

    சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறைதீர் கூட்டம்

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர் தம் வாரிசுதாரர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், அவர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 22-ந் தேதி மாலை 3.30 மணிக்கு, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்கள் அனை வரும் கலந்து கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    • பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் ராஜாவாய்க்கால் கரையோரம் அமைந்துள்ள மங்கள வராஹி அம்மன் ஆலயத்தில் மகா சண்டி ஹோமம் நடைபெற்றது.
    • தொடர்ந்து மகா சண்டி ஹோமத்தில் பூரணகுதி இடப்பட்டு, வராகி அம்மனுக்கு கலசாபிஷேகம் நடந்தது.

    பரமத்திவேலூர்:Namakkal District News,

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் ராஜாவாய்க்கால் கரையோரம் அமைந்துள்ள மங்கள வராஹி அம்மன் ஆலயத்தில் மகா சண்டி ஹோமம் நடைபெற்றது.தொடர்ந்து மகா சண்டி ஹோமத்தில் பூரணகுதி இடப்பட்டு, வராகி அம்மனுக்கு கலசாபிஷேகம் நடந்தது.

    விழாவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் மாலை 3மணிக்கு விநாயகர் பூஜை, மங்கல இசையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து 64 பைரவருக்கு பூஜை மற்றும் 13 அத்திரியாகங்கள் பாராயணம் நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மகா சண்டி ஹோம விழா ஏற்பாடுகளை பக்தர்கள் மற்றும் பாண்டமங்கலம் ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • மோட்டார் வாகன சட்டப்படி, வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மட் அணியாமல் ஓட்டினால் ரூ.1,௦௦௦
    • உரிய டிரைவிங் லைசென்ஸ் இல்லாமலும், குடிபோதையிலும் வாகனம் ஓட்டுதல் மற்றும் சிறுவர்கள் வாகனம் ஓட்டுதல் போன்ற குற்றங்களில் வாகனங்களை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட எல்லைக்குட்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், போக்குவரத்து போலீசார், போலீஸ் அதிகாரிகள் கொண்ட குழுவினர் பள்ளி மற்றும் கல்லூரிகள் முன்பாகவும், பொது இடங்களிலும் இருசக்கர வாகனங்களில் வரும் மாணவர்கள் குறிப்பாக உரிய டிரைவிங் லைசென்ஸ் இன்றியும், ஹெல்மட் அணி யாமலும், வாகனங்களுக்கு உரிய ஆர்.சி, இன்சூரன்ஸ், புகைச்சான்று போன்ற ஆவணங்கள் இல்லாமலும், டூ வீலரில் 2 பேருக்கும் மேற்பட்டவர்களும் பயணித்து வந்தால், அவர்களை கண்காணித்து, தணிக்கை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் மோட்டார் வாகன சட்டப்படி, வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மட் அணியாமல் ஓட்டினால் ரூ.1,000, டூ வீலரில் 2 நபர்களுக்கு மேல் பயணம் செய்தல் ரூ.1,000, உரிய இன்சூரன்ஸ் சான்று இன்றி வாகனம் ஓட்டினால் ரூ.2,000, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ரூ.1,000, அதிவேகமாக வாகனம் ஓட்டினால் ரூ.2,000, குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000, புகைச்சான்று இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.10,000, 18 வயது பூர்த்தியடையாமல் உரிய டிரைவிங் லைசென்ஸ் இன்றி வாகனம் ஓட்டினால் ரூ.25,000 வீதம் அபராதம் விதிக்கப்பட வேண்டும்.

    உரிய டிரைவிங் லைசென்ஸ் இல்லாமலும், குடிபோதையிலும் வாகனம் ஓட்டுதல் மற்றும் சிறுவர்கள் வாகனம் ஓட்டுதல் போன்ற குற்றங்களில் வாகனங்களை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும்.

    குடிபோதையில் வாகனம் ஒட்டுதல் மற்றும் உயிரிழப்பு விபத்து ஏற்படுத்துதல் போன்ற குற்றங்களுக்காக டிரைவிங் லைசென்ஸ் 6 மாதங்கள் தற்காலிக தடை மற்றும் அதிவேகமாக வாகனத்தை இயக்குதல், சிவப்பு விளக்கு சிக்னல் மீறுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லுதல் போன்ற குற்றங்களுக்காக டிரைவிங் லைசென்ஸ் 3 மாதங்கள் தற்காலிக தடை விதிக்கப்பட வேண்டும்.

    எனவே மாணவர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள் மோட்டார் வாகன சட்டவிதிகளைப் பின்பற்றி மாவட்ட நிர்வாகத் திற்கும், போக்குவரத்து துறைக்கும், காவல் துறைக்கும் விபத்துகளையும், விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் தெரி வித்தார்.

    கூட்டத்தில் ஆர்.டி.ஓ, போலீசார் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    • பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான பிளக்ஸ் போர்டுகளை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் கிராம பஞ்சாயத்து நிர்வாகம் அகற்றி வருகின்றனர்.
    • இந்த நிலையில் மீண்டும் திடீரென பிளக்ஸ் போர்டு கள் ஆங்காங்கே வைக்க தொடங்கியுள்ளனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான பிளக்ஸ் போர்டுகளை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் கிராம பஞ்சாயத்து நிர்வாகம் அகற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் மீண்டும் திடீரென பிளக்ஸ் போர்டு கள் ஆங்காங்கே வைக்க தொடங்கியுள்ளனர். இதனால் பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு இது பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

    இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவ லர்கள் பரமத்திவேலூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் இந்திராணியிடம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதன் காரணமாக அனுமதி இன்றி பிளக்ஸ் போர்டு அச்சடித்து கொடுத்தால், அதன் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்ஸ்பெக்டர் இந்திராணி எச்சரித்துள்ளார்.

    • மோகனூர் மற்றும் வேலூர் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • சமுதாயக்கூடம் கட்டும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் மற்றும் வேலூர் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

    மோகனூர் பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.179 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டும் பணியினையும், ரூ.150 லட்சம் மதிப்பீட்டில் பேரூராட்சி மயானத்தில் நவீன எரிவாயு தகனமேடை, கழிவறை மற்றும் வாகனம் நிறுத்துமிடம் அமைக்கும் பணிகளையும், ரூ.414.74 லட்சம் மதிப்பீட்டில் 6-வது வார்டில் வாரச்சந்தை கட்டும் பணிகளையும், ரூ.280 லட்சம் மதிப்பீட்டில் நவலடியான் கோவில் அருகே சமுதாயக்கூடம் கட்டும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து மோகனூர் பேரூராட்சி 10-வது வார்டு மற்றும் 15-வது வார்டில் மூல தள நிதியிலிருந்து ரூ.150 லட்சம் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் கட்டமைப்புடன் கூடிய காங்கிரீட் சாலை அமைக்கப்பட்டு உள்ளதையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த காலத்திற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலர் கோமதியிடம் அறிவுறுத்தினார்.

    முன்னதாக மோகனூர் ஊராட்சி ஒன்றியம் நெய்க்காரன்பட்டியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து வேலூர் பேரூராட்சியில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.147 லட்சம் மதிப்பெட்டில் 1-வது வார்டு கந்தநகர் அருகில் கட்டப்பட்டு வரும் வாரச்சந்தை கட்டும் பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது சேலம் ரெயில்வே கோட்ட உதவி மேலாளர் ராமச்சந்திரன், வட்டாட்சியர்கள் சுப்பிரமணியம், கலைச்செல்வி, பேரூராட்சி செயல் அலுவலர்கள், கோமதி, திருநாவுக்கரசர் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு, சாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு, சாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார்.

    பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான், பரமேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பரமத்திவேலூர் பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரமத்தி வேலூர் எல்லையம்மன் ஆலயத்தில் வைகாசி மாத குரு வார கிருத்திகை நட்சத்திரத்துடன் கூடிய பிரதோஷத்தினை முன்னிட்டு ஏகாம்பரநாத ருக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டி ருந்தது.

    இதேபோல் பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வ நாதர், பிலிக்கல்பாளையம், கரட்டூர் விஜயகிரி வட பழனியாண்டவர் கோவிலில் உள்ள பர்வதீஸ்வரர் மற்றும் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் உள்ள சிவபெருமானுக்கு தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபி ஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடை பெற்றது.

    இதில் அந்தந்த பகுதி களைச் சேர்ந்த பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கபிலர்மலை அருகே இருக்கூர், வலசுப்பாளை யம் பிரிவு சாலையில் உள்ள ஒரு கிணற்றில் கடந்த 13-ந் தேதி வாலிபர் பிணம் கிடப்பதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • சுமார் 25 அடி ஆழமுள்ள கிணற்றில் மிதந்த வாலிபரின் உடலை போலீசார் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, கபிலர்மலை அருகே இருக்கூர், வலசுப்பாளை யம் பிரிவு சாலையில் உள்ள ஒரு கிணற்றில் கடந்த 13-ந் தேதி வாலிபர் பிணம் கிடப்பதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளை யத்தில் உள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரி வித்தனர். அங்கு வந்த தீயணைப்பு துறையினர் உதவியுடன், சுமார் 25 அடி ஆழமுள்ள கிணற்றில் மிதந்த வாலிபரின் உடலை போலீசார் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கிணற்றில் இறந்து கிடந்த வாலிபர், வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் கருதினர். இதையடுத்து, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த வாலிபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில், பீகார் மாநிலம், கிழக்கு சம்ரான், புபனர் பகுதியை சேர்ந்த கிசுன் மஜ்கி என்பவரது மகன் வீரேந்திர மஜ்சி (வயது 25) என்பது தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×