என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்வு
    X

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்வு

    • நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளுக்கு என்இசிசி தினசரி விலை நிர்ணயம் செய்து வருகிறது.
    • வழக்கம்போல், கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை 141 ரூபாயாகவும், முட்டை கோழி பண்ணை கொள்முதல் விலை 95 ரூபாய் ஆக நீடிக்கிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் தமிழகம், கேரளாவில் விற்பனை ஆகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு தினமும் 50 லட்சம் முட்டைகள் செல்கிறது.

    நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளுக்கு என்இசிசி தினசரி விலை நிர்ணயம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முட்டையின் தேவை மற்றும் முட்டை உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில் முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது . அதன்படி 520 காசுகளாக இருந்த முட்டை விலை 525 காசுகளாக உயர்ந்தது.

    வழக்கம்போல், கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை 141 ரூபாயாகவும், முட்டை கோழி பண்ணை கொள்முதல் விலை 95 ரூபாய் ஆக நீடிக்கிறது. இந்த விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    Next Story
    ×