என் மலர்
நாமக்கல்
- ஈமு பார்ம்ஸ் மற்றும் வேலவன் கார்டன் சிட்டி டெவலப்மெண்ட்ஸ் என்ற நிறுவனம் பொது மக்களிடம் இருந்து நிதி மோசடி செய்ததால், குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நாமக்கல், பொருளாதார குற்றப் பிரிவு போலீசாரால் விசா ரணை செய்யப்பட்டது.
- கோர்ட் உத்தரவின்படி, அந்த நிறுவனத்தின் உரிமை யாளர்கள் சிவக்குமார், கனகம் மற்றும் பழனி யம்மாள் ஆகியோர்களிடம் இருந்து 3 வீட்டு மனைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் மணி மேகலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நாமக்கல், மோகனூர் ரோட்டில் இயங்கி வந்த செல்லம் ஈமு பார்ம்ஸ் மற்றும் வேலவன் கார்டன் சிட்டி டெவலப்மெண்ட்ஸ் என்ற நிறுவனம் பொது மக்களிடம் இருந்து நிதி மோசடி செய்ததால், குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நாமக்கல், பொருளாதார குற்றப் பிரிவு போலீசாரால் விசா ரணை செய்யப்பட்டது. இது குறித்து, கோவை, தமிழ்நாடு முதலீட்டா ளர்கள் நலன்கள் பாது காப்பு சட்ட சிறப்பு கோர்ட் உத்தரவின்படி, அந்த நிறுவனத்தின் உரிமை யாளர்கள் சிவக்குமார், கனகம் மற்றும் பழனி யம்மாள் ஆகியோர்களிடம் இருந்து 3 வீட்டு மனைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், பிள்ளைகளத்தூர் கிரா மத்தல் உள்ள 2,360 சதுரடி கள் கொண்ட 2 வீட்டு மனைகள், மற்றும் ராசி புரம் தாலுக்கா, காட்டூர், காட்டுக்கொட்டாய் பகுதி யில் உள்ள 3,716 1/4 சதுரடி கொண்ட வீட்டுமனை ஆகிய 3 வீட்டு மனைகள், நாமக்கல், மாவட்ட வருவாய் அலுவல ரால், வருகிற 21-ந் தேதி மாலை 3 மணிக்கு நாமக்கல், மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன.
நாமக்கல் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் மற்றும் நாமக்கல், ராசிபுரம், சேந்த மங்கலம், மோகனூர், கொல்லி மலை, திரு ச்செங்கோடு, பரமத்தி வேலூர் மற்றும் குமார பாளையம் தாசில்தார் அலுவலகம் மற்றும் நாமக்கல், திருச்செ ங்கோடு ஆர்.டி.ஓ அலுவலகம் ஆகிய அலு வலகங்களின் அறிவிப்பு பலகையில் ஏல நிபந்த னைகள் ஒட்ட ப்பட்டுள்ளது.
ஏல நிபந்தனை களுக்கு உட்பட்டு ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமு ள்ளவர் ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.
மேலும், ஏல தேதிக்கு முன்பாக, விருப்பமுள்ள வர்கள், நாம க்க ல், பொரு ளாதார குற்றப் பிரிவு போலீஸ் டி.எஸ்.பி மூலம் ஏல சொத்துக்களை பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
- நால்ரோடு பகுதியில் ஒருவர் திருட்டுத்தன மாக தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசருக்கு தகவல் கிடைத்தது.
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு ஒருவர் நின்று கொண்டு லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கீரம்பூர் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள நால்ரோடு பகுதியில் ஒருவர் திருட்டுத்தன மாக தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு ஒருவர் நின்று கொண்டு லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டி ருப்பது தெரியவந்தது.
அவர் வைத்திருந்த அனைத்து வெளி மாநில லாட்டரி சீட்டுகளும் போலியா னவை என்றும், வெள்ளைத்தாளில் பிரிண்ட் எடுத்து விற்பனை செய்து கொண்டிருப்பதும் தெரியவந்தது.
அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் கோனூர் ஆதி திராவிடர் தெருவை சேர்ந்த ஜான் கண்ணாடி (வயது 53) என்பதும் அவரிடமிருந்து போலி லாட்டரி சீட்டுகள், செல்போன், மோட்டார் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு மாதிரி பள்ளியில், பிளஸ்-1 சேர்க்கைக்கு தேர்வாகி உள்ள மாணவ, மாணவிய ருக்கான கலந்தாய்வு மற்றும் பள்ளி அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
- தமிழகத்தில் உள்ள 25 மாவட்டங்களில் மாதிரிப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
நாமக்கல்:
நாமக்கல், தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில், மாவட்ட அரசு மாதிரி பள்ளியில், பிளஸ்-1 சேர்க்கைக்கு தேர்வாகி உள்ள மாணவ, மாணவிய ருக்கான கலந்தாய்வு மற்றும் பள்ளி அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகித்துப் பேசுகையில், ஆர்வமும், திறமையும் உள்ள அரசுப் பள்ளி மாண வர்களின், உயர்கல்விக் கனவுகளை நனவாக்க, தமி ழகத்தில் உள்ள 25 மாவட்டங்களில் மாதிரிப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
இத்திட்டம், மேலும் 13 மாவட்டங்களுக்கு விரிவு படுத்தப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும், தலா ஒரு மாதிரிப் பள்ளி உரு வாக்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்ப ட்டுள்ளது. அதன் அடிப்ப டையில், நாமக்கல் மாவட்ட அரசு மாதிரி பள்ளி கீரம்பூரில் தொடங்கப்பட உள்ளது. இந்த மாதிரி பள்ளியில், பிளஸ்-1 மாணவ, மாண வியர் சேர்க்கை மற்றும் பள்ளி அறிமுகக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
நாமக்கல் அடுத்த கீரம்பூரில், உண்டு உறைவிட வசதி யுடன், மாதிரிப்பள்ளி துவங்கப்பட உள்ளது. சிறந்த உயர்கல்வி நிறுவ னங்களில், தொழில்முறை கல்வி பிரிவுகளில் அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல், கலை மற்றும் மருத்துவம் சேர்ந்து பயிலும் வாய்ப்பை உறுதி செய்யும் வகையில், மாதிரிப் பள்ளிகளில் நுழைவுத்தேர்வு அடிப்படையில் பயிற்சிகள் அளிக்கப்படும்.
மேலும், அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றியும், மாணவர்க ளின் ஒட்டு மொத்த செயல்தி றனை அடிப்படையாகக் கொண்டும், மாதிரிப் பள்ளி களில் சேர்க்கை நடக்கிறது. இவற்றை, மாணவ, மாண வியர் நல்ல முறை யில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.
கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, சேலம் மண்டல மாதிரி பள்ளிகள் ஒருங்கி ணைப்பாளர் ராஜேந்திரன், ஆசிரி யர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- பரமத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் சுற்றுலா வாகன உரிமையாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
- ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நேற்று நடை பெற்றது.
பரமத்திவேலுார்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் சுற்றுலா வாகன உரிமையாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
பரமத்தி வேலூர் தாலுக்கா பகுதிகளில் சொந்த வாகனங்களை சுற்றுலா வாகனங்களாக இயக்கப்பட்டு வருவதாக நாமக்கல் மாவட்ட கலெக்ட ரிடம் மக்கள் குறை தீர்க்கும் நாளில் சுற்றுலா பேருந்து வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் சங்கங்க ளின் சார்பாக அளிக்கப் பட்ட புகாரினை தொடர்ந்து, பரமத்தி வேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வா ளர்கள் சரவணன், உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில், ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா வாகன உரிமை யாளர்கள், ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நேற்று நடை பெற்றது.
இக்கூட்டத்தில் வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் வட்டார போக்குவரத்து அலுவலக களப்பணியா ளர்கள் மூலம் சொந்த வாகனங்களை வாடகை வாகனமாக இயக்கப்படுவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும், அவ்வாறு வாக னங்கள் இயக்கப்பட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநர் உரிமம் தகுதி இழப்பு போன்ற கடுமையான நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் நாமக்கல் மாவட்ட சுற்றுலா வாகன உரிமையாளர் சங்க நிர்வா கிகள் மற்றும் உறுப்பினர்க ளிடம் தகுதி சான்று, காப்புச் சான்று, அனுமதிச்சீட்டு, பசுமை வரி, புகைச்சான்று, ஓட்டுனர் உரிமம், ஆகிய அனைத்து ஆவணங்களும் நடப்பில் உள்ளதா என சரி பார்த்து மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு சீட் பெல்ட் மற்றும் சீருடை அணிந்தும் பாதுகாப்பான முறையில் வாகனங்கள் இயக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
- முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
- நாமக்கல்லில் முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கு அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடிக்கு அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்கான விலை நாமக்கல்லில் தினசரி நிர்ணயம் செய்யப்படுகிறது. நேற்று நாமக்கல்லில் முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் முட்டையின் தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் முட்டையின் விலையை மேலும் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது, அதன்படி 530 காசுகளாக இருந்த முட்டை விலை 535 காசுகளாக உயர்ந்தது.
பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர்கள் வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கறிக்கோழி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் பண்ணை கொள்முதல் விலை ரூ.143-யாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.
இதேபோல முட்டை கோழி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.95-யாக நிர்ணயம் செய்யப்பட்டது.
- பீர்பாட்டிலை கொடுக்க மறுத்த ஓட்டல் ஊழியரை, வாலிபர்கள் கொன்ற சம்பவம் நாமக்கல்லில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
நாமக்கல்:
நாமக்கல்லில் சேலம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை செய்து வந்தவர் கண்ணன் (வயது 45). இவர் கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர். குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து நாமக்கல்லில் தங்கி ஓட்டலில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 15-ம் தேதி இரவு 11 மணி அளவில் கண்ணன் ஒரு பீர் பாட்டிலுடன் திருச்செங்கோடு சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடம் கண்ணன் லிப்ட் கேட்டுள்ளார். அவர்கள் கண்ணனை ஏற்றிக் கொண்டு சென்றனர்.
நல்லிபாளையம் பாலம் அருகில் சென்ற போது இருவரில் ஒருவர் கண்ணனிடம் இருந்த பீர் பாட்டிலை பிடுங்கிக் கொண்டார். அந்த பீர் பாட்டிலை திருப்பி தருமாறு கண்ணன் கேட்டார். இதில் அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும், கண்ணனை சரமாரி தாக்கி, மறைவான பகுதிக்கு தூக்கிச் சென்று கல்லால் அவரது முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நாமக்கல் ராமாவரம் புதூரை சேர்ந்த பாஸ்கர் மகன் சக்திவேல் (22), சேந்தமங்கலம் ரோடு குடிசை மாற்று வாரியத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கவுதம் (28) ஆகிய இருவரும் சேர்ந்து கண்ணனை அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஜெயிலில் அடைத்தனர்.
பீர்பாட்டிலை கொடுக்க மறுத்த ஓட்டல் ஊழியரை, வாலிபர்கள் கொன்ற சம்பவம் நாமக்கல்லில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- அதன் அடிப்படையில் போலீசார், அந்த பகுதியில் சோதனை செய்ததில், அங்கு ஒருவர் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் - கரூர் செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் எதிரே உள்ள சந்து பகுதியில், ஒருவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் போலீசார், அந்த பகுதியில் சோதனை செய்ததில், அங்கு ஒருவர் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. விசாரணையில் அவர், அனிச்சம்பாளையம் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (வயது 48) என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த 100 வெளி மாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பரமத்தி கிளைச்சறையில் அடைத்தனர்.
- ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்திட பெருங்குறிச்சி கிராமத்தில் தகுதியுள்ள விவசாயிகளுக்கும், மேலும் அனைத்து கிராமங்களில் உள்ள ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
- பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 1 ெஹக்டர் நிலமும், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 1 ஏக்கர் நிலமும் இருக்க வேண்டும்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கபிலர்மலை வட்டாரத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம்-மானாவாரி பகுதி வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்திட பெருங்குறிச்சி கிராமத்தில் தகுதியுள்ள விவசாயிகளுக்கும், மேலும் அனைத்து கிராமங்களில் உள்ள ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தில் பயிர்கள் சாகுபடி மற்றும் தீவன பயிர்கள் பயிரிடுவதுடன் கறவை மாடு, தேனீ வளர்ப்பு, மண்புழு உர உற்பத்தி, பழச்செடிகள் வளர்ப்பு ஆகியவற்றுக்கு 50 சதவீதம் மானியம், அதாவது அலகு ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 1 ெஹக்டர் நிலமும், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 1 ஏக்கர் நிலமும் இருக்க வேண்டும். மேலும் இத்திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கும், முன்பதிவுக்கும் கபிலர்மலை வட்டார வேளாண்மை அலுவலகத்தை நேரில் அணுகியோ அல்லது உழவன் செயலியில் பதிவு செய்தோ பயனடையலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- இளம்பெண் நித்யா (28) கடந்த மார்ச் 11-ந் தேதி பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை நடந்து வருகிறது.
பரமத்திவேலூர்:
ஜேடர்பாளையம் அருகே உள்ள கரப்பாளையம் பகுதியில் பட்டதாரி இளம்பெண் நித்யா (28) கடந்த மார்ச் 11-ந் தேதி பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அப்பாவி விவசாயிகளையும், இளைஞர்களையும் போலீசார் விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று செய்யாத குற்றத்தை நிர்பந்தப்படுத்தி ஏற்றுக்கொள்ள செய்து பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜேடர்பாளையம் போலீசாரின் இந்த நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வக்கீல் கார்த்திகேயன் பேசும்போது, ஜேடர்பாளையம் போலீசார் வன்முறைச் சம்பவங்களுக்கு காரணமானவர்களை கண்டு பிடிக்காமல் பாதிக்கப்பட்ட நித்தியாவின் சமூகத்தை சேர்ந்த வர்களையும் உறவினர்களையும் தேடி தேடி பிடித்து போய் வழக்கு களை போட்டு சிறையில் அடைத்து வருகின்றனர் இது கண்டிக்கத்தக்கது என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட விவசாய அணி செயலாளர் கணேசன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் நல்லா கவுண்டர், கரும்பு விவசாயிகள் சங்க த்தைச் சேர்ந்த காத்தவராயன், மாவட்டத் தலைவர் ஆதிநாராயணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் பள்ளிபாளையம் ரவி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் லட்சுமணன்மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பூபதி ஜோதி வேலாயுதம் சண்முகம் தனேந்திரன் கிருஷ்ணன் மொளசி பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் தானிய சேமிப்பு கிடங்கு உள்ளது.
- இதன் அருகில் கிரீன் கார்டன் செல்லும் சாலை ஓரத்தில் அடையாளம் தெரியாத சுமார் 35 மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது.
நாமக்கல்:
நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் தானிய சேமிப்பு கிடங்கு உள்ளது. இதன் அருகில் கிரீன் கார்டன் செல்லும் சாலை ஓரத்தில் அடையாளம் தெரியாத சுமார் 35 மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. உடலின் அருகே மஞ்ச பைகள், ரத்தக்கரை படிந்த கற்கள் மற்றும் பழங்கள் சிதறி கிடந்தன.
தகவல் அறிந்த நாமக்கல் டி.எஸ்.பி. தனராசு, போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரண நடத்தினர்.
கல்லால் அடித்து கொலை
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், இறந்து கிடந்தவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு தடையவியல் நிபுணர்களை வரவழைத்து போலீஸ் தடயங்களை சேகரித்தனர்.
மேலும் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த ஓட்டல் ஊழியர் கண்ணன் (வயது 33) என்பது தெரியவந்தது. மேலும் அவரை யார் கொலை செய்தார்கள்? என்பது குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மதுபாட்டில் தகராறு
இதில், கண்ணன் அந்த வழியாக சென்ற 2 பேரிடம் லிப்ட் கேட்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது கண்ணன் மது பாட்டில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அவரை அழைத்து சென்றவர்கள் மது பாட்டிலை கேட்டபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் 2 பேரும் சேர்ந்து கல்லால் தாக்கி, கண்ணனை கொலை செய்து விட்டு உடலை அங்கு வீசி சென்றது தெரிய வந்தது.
இதனிடையே, லிப்ட் கொடுத்தவர்களை பிடித்த போலீசார், அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் 2 பேரும் கைது செயப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
- குமாரபாளையம் போலீசார் நகரின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர்.
- நகரில் சந்தேகப்படும் வகையில் அந்நிய நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
குமாரபாளையம்:
பொதுமக்களிடையே அச்ச உணர்வை போக்கும் விதத்தில் குமாரபாளையம் போலீசார் நகரின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர்.
குப்பாண்டபாளையம் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் இன்ஸ்பெக்டர் தவமணி விழிப்புணர்வு வழங்கினார்.
அப்போது நகரில் சந்தேகப்படும் வகையில் அந்நிய நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தங்க நகைகளை வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் வெளியூர் செல்லும் போது அதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தால், வீட்டிற்கு பாதுகாப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இரவு நேரங்களில் உங்கள் பகுதிகளில் சந்தேகப் படும்படியான வாகனங்கள் இருந்தால், போலீசாருக்கு தகவல் தெரிவியுங்கள். புதிதாக வாடகைக்கு வரும் நபர்களிடம், வீட்டின் உரிமையாளர்கள், வாடகைக்கு வரும் நபர்களின் ஆதார் அட்டை நகல், போன் நம்பர் ஆகிய வாங்கி வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
- பரமத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் நியாய விலைக் கடையை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமை யில் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், பரமத்தி ஊராட்சி ஒன்றியம், மாணிக்கநத்தம் ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2022-– 2023-ன் கீழ், ரூ.15.71 லட்சம் மதிப்பீட்டில் பரமத்தி, ஜேடர்பாளையம் சாலை முதல் சூரியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வரை சாலை பலப்படுத்தும் பணி, பரமத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் நியாய விலைக் கடையை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், ரூ.414.92 லட்சம் மதிப்பீட்டில் அர்த்தனாரிபாளையம் முதல் நாமக்கல் - வேலூர் தேசிய நெடுஞ்சாலைக்கு இணைப்பு சாலை அமையக்கும் பணி, வில்லிபாளையம் ஊராட்சியில் ரூ.18.99 லட்சம் மதிப்பீட்டில் பாண்டியன் குட்டை வாய்க்காலை ஆழப்படுத்தி கரையை மேம்படுத்தும் பணிகளை பார்வையிட்டு, ஒப்பந்த காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டுமென கலெக்டர் அறிவுறுத்தினார்.
இதனைத்தொடர்ந்து, பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமை யில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகளின் முன்னேற்றம், தற்போதைய நிலை உள்ளிட்ட விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெ்கடர் உமா பேசியதாவது:-
பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்க ளுடன் நேரடி தொடர்பில் உள்ளவர்கள். பொதுமக்களின் அன்றாட தேவைகளை நன்கு உணர்ந்தவர்கள். பொது மக்களின் தேவைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து பொது மக்க ளுக்கும், மாவட்ட நிர்வாகத் திற்கும் பாலமாக விளங்க கூடியவர்கள்.
எனவே தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் பிரதிநிதிகள் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்திட முக்கியத்துவம் வழங்கிட வேண்டும். தங்களது ஊராட்சிகளில் சுத்தமான குடிநீர், சுகாதார மான சூழல் உள்ளிட்டவற்றை ஏற்படுத்திட உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
அதே போன்று உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களும் தற்போது மேற்கொண்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த காலத்திற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அலுவலர்கள் ஒரு குழுவாக இணைந்து உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாக வளர்ச்சி பெற்றிட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பொத்தனூர் பேரூராட்சி, ஜேஜே நகரில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களுக்கு இணைய வழி பட்டா வழங்கிட ஏதுவாக வரன் முறைபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், உதவி செயற்பொறியாளர் கணேஷ் பெருமாள், பரமத்தி வட்டாட்சியர் கலைச்செல்வி, பரமத்தி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கீதா, நடராஜன், போத்த னூர் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் மற்றும் அரசுத்துறை அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.






