search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் சுற்றுலா வாகன உரிமையாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்
    X

    கலந்தாய்வு கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    பரமத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் சுற்றுலா வாகன உரிமையாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

    • பரமத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் சுற்றுலா வாகன உரிமையாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
    • ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நேற்று நடை பெற்றது.

    பரமத்திவேலுார்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் சுற்றுலா வாகன உரிமையாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர் தாலுக்கா பகுதிகளில் சொந்த வாகனங்களை சுற்றுலா வாகனங்களாக இயக்கப்பட்டு வருவதாக நாமக்கல் மாவட்ட கலெக்ட ரிடம் மக்கள் குறை தீர்க்கும் நாளில் சுற்றுலா பேருந்து வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் சங்கங்க ளின் சார்பாக அளிக்கப் பட்ட புகாரினை தொடர்ந்து, பரமத்தி வேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வா ளர்கள் சரவணன், உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில், ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா வாகன உரிமை யாளர்கள், ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நேற்று நடை பெற்றது.

    இக்கூட்டத்தில் வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் வட்டார போக்குவரத்து அலுவலக களப்பணியா ளர்கள் மூலம் சொந்த வாகனங்களை வாடகை வாகனமாக இயக்கப்படுவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும், அவ்வாறு வாக னங்கள் இயக்கப்பட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநர் உரிமம் தகுதி இழப்பு போன்ற கடுமையான நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    மேலும் நாமக்கல் மாவட்ட சுற்றுலா வாகன உரிமையாளர் சங்க நிர்வா கிகள் மற்றும் உறுப்பினர்க ளிடம் தகுதி சான்று, காப்புச் சான்று, அனுமதிச்சீட்டு, பசுமை வரி, புகைச்சான்று, ஓட்டுனர் உரிமம், ஆகிய அனைத்து ஆவணங்களும் நடப்பில் உள்ளதா என சரி பார்த்து மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு சீட் பெல்ட் மற்றும் சீருடை அணிந்தும் பாதுகாப்பான முறையில் வாகனங்கள் இயக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    Next Story
    ×