search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "model school"

    • உண்டுஉறைவிட வசதியுடன் கூடிய அரசு மாதிரி பள்ளியில் மாணவர் சேர்க்கை அறிமுககூட்டம் கலெக்டர் தலைமையில் எம்.வி.எம்.அரசு மகளிர்கல்லூரியில நடைபெற்றது.
    • நீட், ஐ.ஐ.டி, ஜே.இ.இ உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் உண்டுஉறைவிட வசதியுடன் கூடிய அரசு மாதிரி பள்ளியில் மாணவர் சேர்க்கை அறிமுககூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் எம்.வி.எம்.அரசு மகளிர்கல்லூரியில நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பூங்கொடி பேசியதாவது,

    அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கல்வி, நுண்கலை, விளையாட்டு ஆகியவற்றில் சிறந்து விளங்குவதற்கு ஏதுவாக சிறப்பு திட்டமாக மாதிரி பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளது. உண்டுஉறைவிட வசதியுடன் 9 முதல் 12-ம் வகுப்புவரை பயிலும் மாணவ-மாணவிகளுக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த பள்ளியில் பயில மாவட்டம் முழுவதிலும் இருந்து 553 மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், இங்கு அனைத்து வகுப்பறைகளும் கணினிமயமாக்கப்பட்ட எழுது பலகைகள், ஒலிபெருக்கி, கணினிதொழில்நுட்ப வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு காமிரா , பயோமெட்ரிக் வருகைபதிவேடு ஆகியவற்றுடன் தனித்தனியாக விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    திங்கள் முதல் வெள்ளிவரை காலை 9.30 மணிமுதல் பகல் 11 மணிவரை நீட், ஐ.ஐ.டி, ஜே.இ.இ உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாணவர்களின் தலைமை பண்பை வளர்க்கவும், அவர்களது முழுமனித ஆற்றலையும் ஊக்குவிக்க ஏதுவாக பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

    வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு தேவையான வசதியும் செய்து கொடுக்கப்படுகிறது. இந்த மாதிரி பள்ளியில் பணியாற்ற திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் இருந்து சிறந்த ஆசிரியர்கள் தேர்ந்ெதடுக்கப்பட்டுள்ளனர்.

    தமிழக முதல்-அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. எனவே மாணவ-மாணவிகள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்றார். நிகழ்ச்சியில் முதன்மை கல்விஅலுவலர் நாசுருதீன், ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு மாதிரி பள்ளியில், பிளஸ்-1 சேர்க்கைக்கு தேர்வாகி உள்ள மாணவ, மாணவிய ருக்கான கலந்தாய்வு மற்றும் பள்ளி அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
    • தமிழகத்தில் உள்ள 25 மாவட்டங்களில் மாதிரிப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

    நாமக்கல்:

    நாமக்கல், தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில், மாவட்ட அரசு மாதிரி பள்ளியில், பிளஸ்-1 சேர்க்கைக்கு தேர்வாகி உள்ள மாணவ, மாணவிய ருக்கான கலந்தாய்வு மற்றும் பள்ளி அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகித்துப் பேசுகையில், ஆர்வமும், திறமையும் உள்ள அரசுப் பள்ளி மாண வர்களின், உயர்கல்விக் கனவுகளை நனவாக்க, தமி ழகத்தில் உள்ள 25 மாவட்டங்களில் மாதிரிப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

    இத்திட்டம், மேலும் 13 மாவட்டங்களுக்கு விரிவு படுத்தப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும், தலா ஒரு மாதிரிப் பள்ளி உரு வாக்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்ப ட்டுள்ளது. அதன் அடிப்ப டையில், நாமக்கல் மாவட்ட அரசு மாதிரி பள்ளி கீரம்பூரில் தொடங்கப்பட உள்ளது. இந்த மாதிரி பள்ளியில், பிளஸ்-1 மாணவ, மாண வியர் சேர்க்கை மற்றும் பள்ளி அறிமுகக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

    நாமக்கல் அடுத்த கீரம்பூரில், உண்டு உறைவிட வசதி யுடன், மாதிரிப்பள்ளி துவங்கப்பட உள்ளது. சிறந்த உயர்கல்வி நிறுவ னங்களில், தொழில்முறை கல்வி பிரிவுகளில் அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல், கலை மற்றும் மருத்துவம் சேர்ந்து பயிலும் வாய்ப்பை உறுதி செய்யும் வகையில், மாதிரிப் பள்ளிகளில் நுழைவுத்தேர்வு அடிப்படையில் பயிற்சிகள் அளிக்கப்படும்.

    மேலும், அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றியும், மாணவர்க ளின் ஒட்டு மொத்த செயல்தி றனை அடிப்படையாகக் கொண்டும், மாதிரிப் பள்ளி களில் சேர்க்கை நடக்கிறது. இவற்றை, மாணவ, மாண வியர் நல்ல முறை யில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

    கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, சேலம் மண்டல மாதிரி பள்ளிகள் ஒருங்கி ணைப்பாளர் ராஜேந்திரன், ஆசிரி யர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    ×