என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாதிரிபள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு-கலெக்டர் பூங்கொடி தகவல்
    X

    உண்டு உறைவிட பள்ளியை கலெக்டர் பூங்கொடி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மாதிரிபள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு-கலெக்டர் பூங்கொடி தகவல்

    • உண்டுஉறைவிட வசதியுடன் கூடிய அரசு மாதிரி பள்ளியில் மாணவர் சேர்க்கை அறிமுககூட்டம் கலெக்டர் தலைமையில் எம்.வி.எம்.அரசு மகளிர்கல்லூரியில நடைபெற்றது.
    • நீட், ஐ.ஐ.டி, ஜே.இ.இ உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் உண்டுஉறைவிட வசதியுடன் கூடிய அரசு மாதிரி பள்ளியில் மாணவர் சேர்க்கை அறிமுககூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் எம்.வி.எம்.அரசு மகளிர்கல்லூரியில நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பூங்கொடி பேசியதாவது,

    அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கல்வி, நுண்கலை, விளையாட்டு ஆகியவற்றில் சிறந்து விளங்குவதற்கு ஏதுவாக சிறப்பு திட்டமாக மாதிரி பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளது. உண்டுஉறைவிட வசதியுடன் 9 முதல் 12-ம் வகுப்புவரை பயிலும் மாணவ-மாணவிகளுக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த பள்ளியில் பயில மாவட்டம் முழுவதிலும் இருந்து 553 மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், இங்கு அனைத்து வகுப்பறைகளும் கணினிமயமாக்கப்பட்ட எழுது பலகைகள், ஒலிபெருக்கி, கணினிதொழில்நுட்ப வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு காமிரா , பயோமெட்ரிக் வருகைபதிவேடு ஆகியவற்றுடன் தனித்தனியாக விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    திங்கள் முதல் வெள்ளிவரை காலை 9.30 மணிமுதல் பகல் 11 மணிவரை நீட், ஐ.ஐ.டி, ஜே.இ.இ உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாணவர்களின் தலைமை பண்பை வளர்க்கவும், அவர்களது முழுமனித ஆற்றலையும் ஊக்குவிக்க ஏதுவாக பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

    வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு தேவையான வசதியும் செய்து கொடுக்கப்படுகிறது. இந்த மாதிரி பள்ளியில் பணியாற்ற திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் இருந்து சிறந்த ஆசிரியர்கள் தேர்ந்ெதடுக்கப்பட்டுள்ளனர்.

    தமிழக முதல்-அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. எனவே மாணவ-மாணவிகள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்றார். நிகழ்ச்சியில் முதன்மை கல்விஅலுவலர் நாசுருதீன், ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×