search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்தியாவில் வயிற்றுப்போக்கு நோயால் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு
    X

    இந்தியாவில் வயிற்றுப்போக்கு நோயால் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு

    • அங்கன்வாடி மையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், குழந்தைகளுக்கு தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல் இருவார கால சிறப்பு முகாம் தொடக்க விழா நடை பெற்றது.
    • ஒவ்வொரு ஆண்டும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் சுமார் ஒரு லட்சம் பேர் வயிற்றுப்போக்கு நோயால் உயிரிழக்கின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள, பொரசபாளையம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், குழந்தைகளுக்கு தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல் இருவார கால சிறப்பு முகாம் தொடக்க விழா நடை பெற்றது. மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா முகாமை தொடங்கி வைத்து, குழந்தை களுக்கு மருந்து, மாத்தி ரைகளை வழங்கிப் பேசியதாவது:

    நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கை கட்டுப் படுத்துதல் தொடர்பாக பொது சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் பள்ளிக்கல்வித் துறை இணைந்து இரு வார விழிப்புணர்வு முகாம் 12.6.2023 முதல் 25.6.2023 வரை மாவட்ட முழுவதும் நடத்தப்படுகிறது.

    இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் சுமார் ஒரு லட்சம் பேர் வயிற்றுப்போக்கு நோயால் உயிரிழக்கின்றனர். இந்த நோயால், ஊட்டச் சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளும் 2 வயதிற்கு கீழ்பட்ட குழந்தைகளும் மிகவும் பாதிப்புக்குள் ளாகின்றனர்.

    வயிற்றுப்போக்கு நோய் சுலபமாக தடுக்கக் கூடியதும், குணப்படுத்தக் கூடியதாகும்.

    சுத்தமான குடிநீர், சுற்றுப்புற சுகாதாரம், குழந்தைகளுக்கு 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது மற்றும் 2 வயது வரை இணை உணவுடன் தாய்ப்பால் கொடுப்பது, சரியான ஊட்டச்சத்து கொடுப்பது, கைகளை முறையாக சோப்பு கொண்டு கழுவுவது போன்றவற்றின் மூலம் வயிற்றுப்போக்கு வராமல் தடுக்கலாம் என்பதை அனைத்து தாய்மார்களும் தெரிந்துகொண்டு அவற்றை கடைபிடிக்க வேண்டும்.

    வயிற்றுப்போக்கு கண்ட குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் மற்றும் துத்தநாக மாத்திரைகள் 14 நாட்களுக்கு வழங்குவதன் மூலம் நீர்ச்சத்து குறைவதை தடுப்பதுடன் உயிரிழப்புகளை சுலபமாக தவிர்க்கலாம்.

    இது அனைத்து அங்கன் வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவ சமாக வழங்கப்படுகிறது என கூறினார்.

    நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பூங்கொடி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் (பொறுப்பு) கீதா, டாக்டர்கள் ராஜேந் திரன், புவேனேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×