என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன், பாண்டமங்கலம் மகா மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.
பரமத்திவேலூர் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
- கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன், அரசாயி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
- பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன், அரசாயி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன், அரசாயி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது.
பின்னர் சிறப்பு அலங்கா ரத்தில் அங்காள பர மேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன், அரசாயி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் பக்தர்களுக்கு காட்சிய ளித்தனர். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
இதேபோல் பரமத்தி வேலூரில் உள்ள மாரியம்மன், பேட்டையில் உள்ள புதுமாரியம்மன், பகவதி அம்மன், கரூர் மெயின் ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன், நன்செய் இடையாற்றில் உள்ள மாரியம்மன், பாண்ட மங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மாரியம்மன், சேளூர் மாரி யம்மன், அய்யம்பாளையம் மாரியம்மன், பகவதி அம்மன், ஆனங்கூர் மாரி யம்மன், பகவதி அம்மன், செல்லாண்டியம்மன், வட கரையாத்தூர் மாரியம்மன் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்க ளில் சிறப்பு அபிஷேக ஆரா தனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபா ராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்த னர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.






