என் மலர்
நீங்கள் தேடியது "மது விற்றவர்கள்"
- மறைமுகமாக மது பாட்டில்களை வைத்து க்கொண்டு சிலர் விற்பனை செய்து வருவதாக பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- பரமத்திவேலூர் கல்லூரி சாலை பகுதியை சேர்ந்த மாரியப்பன் (56), கந்தநகர் பகுதியைச் சேர்ந்த கனகராஜ்( 61) ஆகிய 3 பேரும் திருட்டுதனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் வெங்கமேடு பகுதியில் மறைமுகமாக மது பாட்டில்களை வைத்து க்கொண்டு சிலர் விற்பனை செய்து வருவதாக பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது, நெட்டையாம்பாளையம் சின்னாம்பள்ளிமேடு பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 47), பரமத்திவேலூர் கல்லூரி சாலை பகுதியை சேர்ந்த மாரியப்பன் (56), கந்தநகர் பகுதியைச் சேர்ந்த கனகராஜ்( 61) ஆகிய 3 பேரும் திருட்டுதனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்து, அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 35 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






