என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்திவேலூர் பகுதி முருகன் கோவில்களில்சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
    X

    பேட்டை பகவதி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன் கோவில்களில் உள்ள முருகப்பெருமான், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி. 

    பரமத்திவேலூர் பகுதி முருகன் கோவில்களில்சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

    • முருகப்பெருமான், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு வைகாசி மாத சஷ்டியை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமான், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு வைகாசி மாத சஷ்டியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் கபிலர்மலை யில் பிரசித்தி பெற்ற பா லசுப்பிரமணிய சாமி கோவில், பரமத்தி அடுத்த பிராந்தகத்தில் 34.5 அடி உயரத்தில் உள்ள ஆறுமுகக்க டவுள் கோவில், பாண்டமங்க லம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ர மணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர் கோவில், பிலிக்கல்பாளையம் விஜய கிரி வடபழனி ஆண்டவர் கோவில், நன்செய்இடை யாறு காவிரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ண சாமி கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர், திருவேலீஸ்வ ரர் கோவிலில் உள்ள சுப்ர மணியர், ராஜா சாமி கோவி லில் உள்ள ராஜா சாமி, சுள்ளிப்பாளையம் அருகே அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், அய்யம்பாளையம் ராஜா வாய்க்கால் அருகே உள்ள முருகன் கோவில், ஆனங்கூர் மாரியம்மன் கோவிலில் உள்ள முருகன் மற்றும் பர மத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் உள்ள முரு கப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதி களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். புத்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×