search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை அகலப்படுத்தும் பணிகளை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
    X

    குருசாமிபாளையம் ஏரி கரை பகுதியில் நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்ட போது எடுத்த படம்.

    சாலை அகலப்படுத்தும் பணிகளை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

    • பொன்குறிச்சி வரை செயல்படுத்தப்பட்டு வரும் சாலை அகலப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறி யாளர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • ராசிபுரம் புறவழிச்சாலை அமைக்கும் பணியினையும் அவர் ஆய்வு செய்து விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்கு உட்பட்ட ராசிபுரம் நெடுஞ் சாலை உட்கோட்டத்தில் பாலப்பாளையத்திலிருந்து பொன்குறிச்சி வரை செயல்படுத்தப்பட்டு வரும் சாலை அகலப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறி யாளர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ராசிபுரம் புறவழிச்சாலை அமைக்கும் பணியினையும் அவர் ஆய்வு செய்து விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    மேலும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணா நிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, ராசி புரம் உட்கோட்டம் குருசாமி பாளையம் ஏரிக்கரை பகுதியில் மரக்கன்றுகளை நட்டு, பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கோட்ட பொறியாளர் குணா, ராசி புரம் நெடுஞ்சாலை கட்டு மானம் மற்றும் பராமரிப்பு உதவி கோட்ட பொறியாளர் ஜெகதீஷ் குமார், உதவி பொறியாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×