search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "middle work"

    • நெடுஞ்சாலை கோட்டத்தின் சார்பில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியினை, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பயணியர் மாளிகையில் அமைச்சர் கே.என்.நேரு மரக்கன்று நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.
    • மேலும், பருவமழைக்கு முன்பாகவே அனைத்து மரக்கன்றுகளையும் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    திருச்செங்கோடு:

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து நாமக்கல் நெடுஞ்சாலை கோட்டத்தின் சார்பில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியினை, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பயணியர் மாளிகையில் அமைச்சர் கே.என்.நேரு மரக்கன்று நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் மதிவேந்தன், திருச்செங்கோடு எம்.எல்.ஏ.ஈஸ்வரன், திருச்செங்கோடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

    நாமக்கல் நெடுஞ்சாலை கோட்டத்தில் 1,800 வேம்பு மரக்கன்றுகளும், 1,800 புங்கன் மரக்கன்றுகளும், 2,000 வசந்த ராணி மரக்கன்றுகளும், 1,700 பாதணி மரக்கன்றுகளும், 1,700 நாவல் மரக்கன்றுகளும், 1,500 நீர்மருது மரக்கன்றுகளும், 1,500 அத்தி மரக்கன்றுகளும் என மொத்தம் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளது.

    மேலும், பருவமழைக்கு முன்பாகவே அனைத்து மரக்கன்றுகளையும் நடுவதற்கு திட்டமிடப் பட்டுள்ளது. நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் திருகுணா, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் கவுசல்யா, உதவி கோட்டப்பொறியாளர் தமிழரசி, திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் கணேசன், உதவி பொறியாளர்கள் சுதா, சையது ரசீம் ஆகியோர் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×