என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dyeing rooms"

    • குமாரபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் 200-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் உள்ளன.
    • விசைத்தறி மற்றும் கைத்தறி ரகங்களுக்கு தேவையான நூல்களுக்கு சாயம் போடப்படுகிறது. இவைகளில் அனுமதி பெற்ற சாயப்பட்டறைகள், அனுமதி பெறாத சாயப் பட்டறைகள் உள்ளன.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் 200-க்கும் மேற்பட்ட சாயப்பட்ட றைகள் உள்ளன. இவை களில் விசைத்தறி மற்றும் கைத்தறி ரகங்களுக்கு தேவையான நூல்களுக்கு சாயம் போடப்படுகிறது. இவைகளில் அனுமதி பெற்ற சாயப்பட்டறைகள், அனுமதி பெறாத சாயப் பட்டறைகள் உள்ளன.

    அனுமதி பெற்ற சாயப்பட்டறைகள் உள்ளிட்ட அனைத்தும் சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்துதான் வெளியேற்ற வேண்டும் என மாசுக்கட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இருப்பினும் சிலர் சுத்திகரிப்பு செய்யாமல் சாயக்கழிவு நீரை அப்படியே காவிரி ஆற்றில் கலக்க விடுகின்றனர். இதனை தடுக்கும் வகையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து, பொக்லைன் உதவியுடன் ஆலையை அகற்றி வருகின்றனர். மேலும் மின் இணைப்பும் துண்டித்து வருகின்றனர். இதுவரை அனுமதி பெறாத 7 சாயப்பட்டறைகள் அகற்றப்பட்டுள்ளன.

    இது குறித்து சிறு சாயப் பட்டறைகள் சங்க தலைவர் பிரபாகரன் கூறியதாவது:-

    சாயப்பட்டறை பிரச்சி னைக்கு தீர்வு காண, பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசு சார்பில் ஏற்பாடுகள் நடந்து வருவது மகிழ்ச்சி.

    இருப்பினும் அதற்குள் மாசுக்கட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து கை சலவை செய்யும் சிறு சாயப்பட்டறைகளை குறி வைத்து இடித்து வருவது வருத்தத்திற்குரியது.

    இது போன்ற சிறு சாயப்பட்டறைகளை இடித்தால், நகரில் விசைத்தறி பட்டறைகளுக்கு தேவையான நூல்கள் சாயமிட முடியாத நிலைமை ஏற்படும். ஜவுளி உற்பத்தி பாதிக்கும். ஆகவே சிறு சாயப்பட்டறைகளை குறி வைக்காமல், கழிவு நீர் சுத்திகரிப்பு செய்வதாக மெசின்கள் வைத்துக் கொண்டு, சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றும் ஆலைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் உதவி பொறியாளர் உதயன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    ×