நுகர்வோர் கோர்ட்டு வழக்குகளில் சமரசம் மையம் மூலம் உடனடி தீர்வு

நுகர்வோர் கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையில், இழப்பீடு வழங்கக்கோரி உத்தர விடப்பட்ட வழக்குகளில் பல வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தனியார்கள் இழப்பீடு வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர்.200-க்கும் மேற்பட்ட வர்களுக்காக, வருகிற 15-ந் தேதி நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் நடைபெறும் சமரச மையம் மூலம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் கோர்ட்டு வழக்குகளில் சமரசம் மையம் மூலம் உடனடி தீர்வு
Published on

நாமக்கல்:

நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையில், இழப்பீடு வழங்கக்கோரி உத்தர விடப்பட்ட வழக்குகளில் பல வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தனியார்கள் இழப்பீடு வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர்.

இவ்வாறு வழக்கை தாக்கல் செய்தவர்களுக்கு பணம் செலுத்தாமல் உள்ள 200-க்கும் மேற்பட்ட வர்களுக்காக, வருகிற 15-ந் தேதி நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் நடைபெறும் சமரச மையம் மூலம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான நோட்டீஸ் சம்மந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதுவரை பணம் செலுத்தாததால் கைது செய்ய வாரண்டு பிறப்பிக்கப்பட்டவர்களும், மேல்முறையீடு செய்த வர்களும் சமரச பேச்சு வார்த்தைக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வரும் 15-ந் தேதி நடை பெறும் சமரச பேச்சு வார்த்தைக்காக வக்கீல்கள் பரமத்திவேலூர் ராம லிங்கம், திருச்செங்கோடு பாலசுப்ரமணியம், நாமக்கல் அய்யாவு, குமரேசன், சதீஷ்குமார், முரளி குமார், அந்தோணி புஷ்பதாஸ் மற்றும் சந்திரசேகர் ஆகி யோர் மத்தியஸ்தர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்கள்.

ஏற்கனவே 10 வழக்கு களில் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு இழப்பீடு வழங்காத நபர்களை கைது செய்யக் கோரி உத்தரவிட்ட வழக்குகளில் நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் களுக்கு அனுப்பப்பட்ட கைது வாரண்டின் நிலை என்ன என அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி டாக்டர் ராமராஜ் உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், பிரிவு 72 -படி நுகர்வோர் கோர்ட் உத்தரவுகளை அமல்படுத்த தவறினால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்க நுகர்வோர் கோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே 3 வாரங்களுக்கு முன்னர் நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி ராசிபுரம் அருகே உள்ள கவுண்டம் பாளையத்தைச் சேர்ந்த செங்கோட்டையன் என்பவருக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வழங்கிய இழப்பீட்டுத் தொகை ரூ.55 ஆயிரத்துக்கான காசோ லையை சம்மந்தப்பட்ட நுகர்வோருக்கு நீதிபதி டாக்டர் ராமராஜ் வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com