search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nursing"

    • விநாயகர் கல்வி நிறுவன தலைவர் தனசேகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். செயலாளர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தார்.
    • கல்லூரி ஆண்டு விழாவில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரியில் ஆண்டு விழா கல்லூரி கலையரங்கில் நடந்தது.

    மணக்குள விநாயகர் கல்வி நிறுவன தலைவர் தனசேகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். செயலாளர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ராஜராஜன், மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை இயக்குனர் ராஜகோவிந்தன், துணை இயக்குனர் காக்னே, மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை டீன் அகாடெமிக் கார்த்திகேயன், டீன் ஆராய்ச்சி சஞ்ஜய் மற்றும் மருத்துவ கண் காணிப்பாளர் பிரகாஷ், பதிவாளர் தட்சிணா மூர்த்தி, செவிலியர் கல்லூரியின் முதல்வர் முத் தமிழ்செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரியின் துணை முதல்வர் நர்மதா வரவேற்றார். செவிலியர் கல்லூரியின் முதல்வர் முத்தமிழ்செல்வி ஆண்டு அறிக்கையை வாசித்தார்.

    பாராட்டுரையை மணக்குள விநாயகர் கல்வி நிறுவனத்தின் தலைவர் தனசேகரன் வழங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் மலர்க்கண் மற்றும் தலைமை விருந்தினராக ஜோதிகண் பராமரிப்பு மையத்தின் நிறுவனர் வனஜா வைத்தியநாதன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

    கல்லூரி ஆண்டு விழாவில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் பங்கேற்பு
    • புதுவை பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான செல்வகணபதி எம்.பி அனைவரையும் வரவேற்று பேசினார்.

    புதுச்சேரி:

    புதுவை அய்யங்குட்டி பாளையத்தில் புதிதாக அமைந்துள்ள விவேகா னந்தா செவிலியர் கல்லூரி யின் தொடக்க விழா வாணி மஹாலில் நடந்தது.

    சிறப்பு விருந்தினராகப் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு விவேகா னந்தா செவிலியர் கல்லூ ரியை திறந்து வைத்தார். முன்னதாகப் பள்ளியின் தாளாளரும் புதுவை பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான செல்வகணபதி எம்.பி அனைவரையும் வரவேற்று பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், குடிமைப்பொருள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், அரசு கொறடா ஏ.கே.டி ஆறுமுகம் சிவசங்கரன் எம்.எல்.ஏ, ஆகியோர் சிறப்புறையா ற்றினார்கள்.

    விழாவில் செவிலியர் கல்லூரியின் மாணவர்களும் பெற்றோர்களும், ஊர் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • பி.எஸ்.சி. அலைடு சயின்ஸ் 87 என மொத்தம் 181 இடங்கள் உள்ளன.
    • அக்டோபர் 4-ந் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மரில் பி.ஸ்.சி நர்சிங் 94, பி.எஸ்.சி. அலைடு சயின்ஸ் 87 என மொத்தம் 181 இடங்கள் உள்ளன.

    இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் நீட் தேர்வு அடிப்படையில் நிரப்பப்படும்.

    இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஜிப்மர் இணையதளத்தில் விண்ணப்ப ங்கள் பெறப்பட்டு வருகிறது. வரும் செப்டம்பர் 5-ந் தேதி தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் ஜிப்மர் இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான மாணவர்களின் பட்டியல் வருகிற செப்டம்பர் 16-ந் தேதி வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படும். அக்டோபர் 4-ந் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • 3 ஆண்டுகள் படிப்பதற்கு செலவாகும் கல்வி கட்டணம், புத்தகக் கட்டணம், ஹாஸ்டல் கட்டணம், சீருடைக் கட்டணம் மற்றும் இதர கட்டண செலவினங்கள் ஒரு மாணவியருக்கு ரூ.70,000 ஆகும்.
    • நர்சிங் டிப்ளமோ படிப்பில் சேர்க்கை பெற்று, அதன் விபரத்தை சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம், கொல்லிமலை தாசில்தார் அலுவலகத்தில் உள்ள, பழங்குடியினர் நல திட்ட அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி மற்றும் பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளிகளில், 2023-2024-ம் ஆண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று, 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ள பழங்குடியின மாணவிகளின் மேற்படிப்பிற்காக, இந்திய நர்சிங் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் மூலம் அங்கீகரிக்கப்பட்ட, நர்சிங் பயிற்சி மையங்களில், நர்சிங் டிப்ளமோ படிப்பில் (Diploma in General Nursing and Midwifery Course) சேர்க்கை பெற்று, தொடர்ந்து 3 ஆண்டுகள் படிப்பதற்கு செலவாகும் கல்வி கட்டணம், புத்தகக் கட்டணம், ஹாஸ்டல் கட்டணம், சீருடைக் கட்டணம் மற்றும் இதர கட்டண செலவினங்கள் ஒரு மாணவியருக்கு ரூ.70,000 ஆகும். இந்த கட்டணம் முழுவதையும் அரசே ஏற்கும்.

    எனவே 2023-2024-ம் ஆண்டில் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வில் 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ள பழங்குடியின மாணவிகள், இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறும் வகையில் நர்சிங் டிப்ளமோ படிப்பில் சேர்க்கை பெற்று, அதன் விபரத்தை சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம், கொல்லிமலை தாசில்தார் அலுவலகத்தில் உள்ள, பழங்குடியினர் நல திட்ட அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • திருமங்கலத்தில் நர்சிங் கல்லூரி மாணவி திடீரென இறந்தார்.
    • பவானிக்கு நோய் பாதிப்பு இருந்ததால் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    திருமங்கலம்

    கள்ளிக்குடி போலீஸ் சரகம் குராயூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வையத்துரை. இவருடைய மகள் பவானி(19). இவர் திருநகரில் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். பவானிக்கு நோய் பாதிப்பு இருந்ததால் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று கல்லூரி செல்வதற் காக வீட்டிலிருந்து புறப்பட்ட போது பவானி திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக குடும்பத்தினர் அவரை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பவானி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நர்சிங் மாணவிகள் விழிப்புணா்வு பேரணி நடந்தது.
    • நிகழ்ச்சியில் தாய்ப்பாலின் அவசியத்தை மாணவிகள் கலை நிகழ்ச்சி மூலம் விளக்கினா்.

    ராமநாதபுரம்

    உலக தாய்ப்பால் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவ சிகிச்சைப் பிரிவு சாா்பில் விழிப்புணா்வு பேரணி நடந்தது. மருத்துவமனை வளாகத்தில் டீன் (பொறுப்பு) கிறிஸ் ஏஞ்சல் தொடங்கி வைத்தாா். இதில் செவிலியா் பயிற்சி கல்லூரி மாணவிகள் பங்கேற்றனா்.

    செவிலியா் கல்லூரி முதல்வா் ஜாக்குலின், ராமநாதபுரம் ரோட்டரி சங்க தலைவர் பாா்த்திபன் முன்னிலை வகித்தனா். பின்னா் நடந்த நிகழ்ச்சியில் தாய்ப்பாலின் அவசியத்தை மாணவிகள் கலை நிகழ்ச்சி மூலம் விளக்கினா். இதில் உறைவிட மருத்துவ அலுவலா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா். விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு மாணவிகள் மருத்துவமனை வளாகத்தில் வலம் வந்தனர்.

    • நர்சிங் மாணவி மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் பேரையூர் டி.மீனாட்சிபுரம் அருகே உள்ள டி.மணி நகரம் பகுதியை சேர்ந்தவர் மாரிக்காளை. இவருடைய மகள் ஜோதிலட்சுமி (19) இவர் உசிலம்பட்டியில் செவிலியர் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 12-ந் தேதி இவர், தங்கையிடம் தோட்டத்துக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் தந்தை பேரையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திர வாலிபர் மாயம்

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த நாகராஜூ மகன் மணிந்திரவர்மா (32). இவருடைய மனைவி மவுனிகா. இவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ெரயில் நிலையம் முன்புள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த ஒரு வருடமாக டிசைனராக மணிந்திரவர்மா வேலை பார்த்து வந்தார். திருமங்கலம் ஆறுமுகம் 4-வது வடக்குத் தெருவில் மனைவியுடன் வாடகைக்கு குடியிருந்து வந்தார். 4 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதால் மனைவி கோபித்துக் கொண்டு விஜயவாடா சென்றுவிட்டார். இந்த நிலையில் மணிந்திரவர்மா தனது சகோதரருக்கு தன்னை யாரும் தேட வேண்டாம் என்று எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் உறவினர் ராஜேஷ்வர்மா கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கொண்டு வரக்கூடாது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தினார். #TTVDhinakaran #NEET
    பெங்களூரு:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாள் டிடிவி தினகரன் இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தக் கூடிய திட்டங்கள், விவசாயத்தை பாதிக்காத திட்டங்களை அரசு கொண்டு வரவேண்டும் என்றும், ஒவ்வொரு பொழுதும் இன்று என்ன திட்டத்தை அறிவிக்க உள்ளார்களோ என்ற அச்சத்தோடு தான் விடிவதாகவும் அவர் கூறினார்.



    மேலும், பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கொண்டு வரக்கூடாது என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தினார்.

    இதற்கிடையே பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் எம்எல்ஏ கருணாசும் இன்று சந்தித்து பேசியுள்ளார்.

    பி.எஸ்.சி., நர்சிங் படிப்பிற்கு அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு கொண்டு வரப்பட உள்ளதாகவும், இது தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியிருப்பதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. #TTVDhinakaran #NEE
    கர்நாடக அரசு ஆஸ்பத்திரிகளில் விரைவில் 1,600 செவிலியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று மந்திரி சிவானந்தபட்டீல் கூறினார். #sivanandapatel #KarnatakaGovernmenthospital
    பெங்களூரு:

    சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி சிவானந்தபட்டீல் பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் ஏழை மக்கள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வசதியாக பொது சுகாதார சேவைக்காக மாநில அரசு சார்பில் ‘கர்நாடக சுகாதார அட்டை’ எனப்படும் மருத்துவ காப்பீட்டு அட்டைகள் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த விஷயத்தில் மக்கள் குழப்பம் அடைய தேவை இல்லை. அந்த மருத்துவ காப்பீட்டு அட்டைகள் இல்லாவிட்டாலும் தகுதியானவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும்.

    மாநில அரசின் அனைத்து மருத்துவ காப்பீட்டு திட்டங்களும் இந்த கர்நாடக சுகாதார திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ காப்பீட்டு அட்டைகளை விநியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறுவது தவறு. 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அனைவருக்கும் மருத்துவ காப்பீட்டு அட்டைகள் விநியோகம் செய்யப்படும்.

    கர்நாடகத்தில் முதல் கட்டமாக 10 முக்கியமான மருத்துவமனைகளில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த கர்நாடக சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் வரை சிகிச்சை பெற முடியும். மத்திய அரசின் ஆயுஸ்மான் திட்டத்துடன் இந்த கர்நாடக சுகாதார திட்டத்தை ஒருங்கிணைக்கும் திட்டம் உள்ளது. ஆயுஸ்மான் திட்டத்தில் நோயாளிகள் ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெறலாம்.

    அவ்வாறு இரு திட்டங் களும் ஒருங்கிணைக்கப்பட்டால் தகுதியான ஏழை நோயாளிகள் ரூ.7 லட்சம் வரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும். அரசு ஆஸ்பத்திரிகளில் 380 மருத்துவ நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 180 டாக்டர்கள் தங்களின் பணியை தொடங்கிவிட்டனர். கர்நாடகத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் விரைவில் 1,600 செவிலியர்களை நியமனம் செய்ய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது.

    விரைவில் அந்த செவிலியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அதற்கான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும். அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை படிப்படியாக நீக்கப்படும். மாநிலத்தில் டெங்கு, மலேரியா நோய் பரவும் பகுதிகளில் அதிக கண்காணிப்பில் ஈடுபடும்படி டாக்டர்களுக்கு உத்தர விட்டுள்ளேன்.

    இவ்வாறு சிவானந்த பட்டீல் கூறினார். #sivanandapatel #KarnatakaGovernmenthospital
    ×