என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விவேகானந்தா செவிலியர் கல்லூரி தொடக்க விழா
    X

    அய்யங்குட்டிப்பாளையத்தில் புதிதாக தொடங்கப்பட்ட விவேகானந்தா செவிலியர் கல்லூரி தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு மாணவிக்கு சான்றிதழ் வழங்கினார். 

    விவேகானந்தா செவிலியர் கல்லூரி தொடக்க விழா

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் பங்கேற்பு
    • புதுவை பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான செல்வகணபதி எம்.பி அனைவரையும் வரவேற்று பேசினார்.

    புதுச்சேரி:

    புதுவை அய்யங்குட்டி பாளையத்தில் புதிதாக அமைந்துள்ள விவேகா னந்தா செவிலியர் கல்லூரி யின் தொடக்க விழா வாணி மஹாலில் நடந்தது.

    சிறப்பு விருந்தினராகப் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு விவேகா னந்தா செவிலியர் கல்லூ ரியை திறந்து வைத்தார். முன்னதாகப் பள்ளியின் தாளாளரும் புதுவை பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான செல்வகணபதி எம்.பி அனைவரையும் வரவேற்று பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், குடிமைப்பொருள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், அரசு கொறடா ஏ.கே.டி ஆறுமுகம் சிவசங்கரன் எம்.எல்.ஏ, ஆகியோர் சிறப்புறையா ற்றினார்கள்.

    விழாவில் செவிலியர் கல்லூரியின் மாணவர்களும் பெற்றோர்களும், ஊர் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    Next Story
    ×