நர்சிங் கல்லூரி மாணவி திடீர் சாவு

திருமங்கலத்தில் நர்சிங் கல்லூரி மாணவி திடீரென இறந்தார். பவானிக்கு நோய் பாதிப்பு இருந்ததால் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
நர்சிங் கல்லூரி மாணவி திடீர் சாவு
Published on

திருமங்கலம்

கள்ளிக்குடி போலீஸ் சரகம் குராயூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வையத்துரை. இவருடைய மகள் பவானி(19). இவர் திருநகரில் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். பவானிக்கு நோய் பாதிப்பு இருந்ததால் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று கல்லூரி செல்வதற் காக வீட்டிலிருந்து புறப்பட்ட போது பவானி திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக குடும்பத்தினர் அவரை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பவானி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com