என் மலர்
உள்ளூர் செய்திகள்

விநாயகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் இருந்த போது எடுத்த படம்.
கோப்பணம்பாளையம் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு
- பரமேஸ்வரர் ஆலயத்தில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
- அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆல யத்தில் விநாயகப் பெரு மானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அபிஷேக ஆராதனை முன்னிட்டு விநாயகர் பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் விநாயகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சி யளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகர் பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.






