என் மலர்
நீங்கள் தேடியது "Mupuja festival"
- அங்காள பரமேஸ்வரி, அகோர வீரபத்திரன், முருகன் மற்றும் மதுரைவீரன் சுவாமி கோவில்களின் முப்பூஜை திருவிழா கடந்த 4-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
- விழாவை முன்னிட்டு கடந்த 4-ந் தேதி மாலை சாமியை காவிரி ஆற்றுக்கு எடுத்துச் செல்லுதலும், மாப்பூஜை மற்றும் பூம் பூஜையும் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் புதுப்பாளையத்தில் அங்காள பரமேஸ்வரி, அகோர வீரபத்திரன், முருகன் மற்றும் மதுரைவீரன் சுவாமி கோவில்களின் முப்பூஜை திருவிழா கடந்த 4-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவை முன்னிட்டு கடந்த 4-ந் தேதி மாலை சாமியை காவிரி ஆற்றுக்கு எடுத்துச் செல்லுதலும், மாப்பூஜை மற்றும் பூம் பூஜையும் நடைபெற்றது.
5-ந் தேதி காலை பொங்கல் பூஜையும், இரவு 12 மணிக்கு இருளப்ப பூஜையும் நடைபெற்றது. 6-ந் தேதி காலை வீரபத்திரசாமி அக்னி கொப்பரை தாங்கி ஊர்வலமாக செல்லுதலும், மாலை பேச்சியம்மன் பூஜையும், பேச்சியம்மன் புள்ளப் பாவாடை, பூக் கொப்பரையுடன் சாமி ஊர்வலமும் நடைபெற்றது.
7-ந் தேதி மாலை பொங்கல் பானையுடன் பதுவிற்கு சென்று பொங்கல் வைத்து கிடா வெட்டி, இரவு 12 மணிக்கு காடேறும் பூஜையும் நடைபெற்றது. நேற்று கிடா விருந்தும், இன்று காலை பொங்கல் பூஜை மற்றும் அன்னதானமும், இரவு மஞ்சள் நீராடல் மற்றும் சாமி ஊர்வலமும் நடைபெறுகிறது.
நாளை(சனிக்கிழமை) மதுரை வீரன் பூஜையும், நாளை மறு நாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை சாமியை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பொத்தனூர் புதுப்பாளையம், அங்காளபரமேஸ்வரி கோவில் முப்பூஜை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.






