என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பப்படும் .

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாநில தலைவர் நாகை செல்லம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் சுத்தானந்த கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய நகர மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் சட்டமன்றத்தில் பொது சுகாதாரத்துறை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பப்படும் என்ற அறிவிப்பை மக்கள் நல்வாழ்த்துவுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்கள்.

    இந்த அறிவிப்பை தமிழ்நாடு அணைத்து சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கம் வரவேற்கிறது.

    மேலும் தமிழக முதல்வர், மக்கள் நல்வாழ்த்துவுத்துறை அமைச்சர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துவுத்துறை முதன்மை செயலர் மற்றும் பொது சுகாதார துறை இயக்குநர் சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    மேலும் இப்பணியிடங்கள் நிரப்பும்போது கொரோனா அதிகம் பரவி வந்த கால கட்டங்களில் தன் உயிரை பொருட்படுத்தாமல் பணியாற்றிய தற்காலிக சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணியாற்றி வரும் சுகாதார ஆய்வாளர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு இந்த பணியை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவே ற்றபட்டன.

    • காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் குளக்கரையில் இருந்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
    • குண்டத்தில் இறங்கி தீமிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்த விழுந்தமாவடி கிராமத்தில் உள்ள மழை முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

    தொடர்ந்து, மேளதாளங்கள் முழங்க காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் குளக்கரையில் இருந்து ஊர்வலமாக சக்தி கரகம் முன்னால் செல்ல கோவிலை வந்தடைந்தனர்.

    பின்னர், அங்கு அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இன்னும் சில பக்தர்கள் குழந்தைகளுடன் குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர். தொடர்ந்து, சிறுவர்- சிறுமிகளின் கோலாட்டம் நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    • ஒரு ஆண்டுக்கும் மேலாக தற்காலிகமாக அங்காடி செயல்பட்டு வருகிறது.
    • புதிய கட்டிடத்தை திறக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமரு கல் ஊராட்சியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த ஊராட்சியில் உள்ள கண்ணுடையான் தோப்பு, கல்லுளி திருவாசல், சன்னதி தெரு,வடக்கு தெரு,தெற்கு தெரு,அக்ரகாரம் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் நலன் கருதி திருமருகல் அம்மாகுள தெருவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2018-19 நிதியாண்டில் ரூ.11 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்காடி கட்டிடம் உள்ளது.

    இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு சுமார் 1 ஆண்டுகளுக்கு மேலாக மின் இணைப்பு வழங்கப்படாமல் திறக்கப்படாமல் உள்ளது.

    இதற்கு மாற்றாக அருகில் திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 1 ஆண்டுக்கு மேலாக தற்காலிகமாக அங்காடி செயல்பட்டு வருகிறது.

    இந்த தற்காலிக கட்டிடம் இருப்பதால் புதிய கட்டிடத்தை திறக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.

    எனவே சம்பந்த ப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா காண காத்திருக்கும் அங்காடி கட்டிடத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிம்ம வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பரிவார தெய்வங்களுடன் எழுந்தருளி வீதிஉலா.
    • கப்பரை எடுக்கும் திருவிழா நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ராஜாளிகாடு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா விக்னே ஸ்வர பூஜையுடன் தொடங்க ப்பட்டது.

    தொடர்ந்து, நேற்று வேதாரண்யேஸ்வரர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால் காவடிகள் எடுத்து வந்து அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    பின், அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் சிம்ம வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பரிவார தெய்வங்களுடன் மேள தாளங்கள் முழங்க எழுந்தருளி வீதிஉலா நடை பெற்றது.

    வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர்.

    பின், கப்பரை எடுக்கும் திருவிழா நடைபெற்றது.

    விழா ஏற்பாடுகளை கோவில் வளர்ச்சி குழு தலைவர் மாதவன் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.

    • கொத்தான்குளம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (வயது 25) என்பது தெரியவந்தது.
    • விஸ்வநாதனை போலீசார் கைது செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் வெளிப்பாளையம் பப்ளிக் ஆபீஸ் ரோட்டில் இயங்கி வரும் ஒரு வங்கியில் கடந்த 10ம் தேதி ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றது.

    இதில் ஏடிஎம்மில் இருந்த 7 லட்ச ரூபாய் தப்பியது. இது குறித்து வெளிப்பாளையம் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.

    மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பெயரில் துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர்.

    மேலும் குற்றவாளி பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தை வைத்து குற்றவாளியை அடையாளம் கண்டுபிடித்தனர்.

    ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர் நாகப்பட்டினம் கொத்தான்குளம் பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபர் விஸ்வநாதன் என்பது தெரியவந்தது .

    இதனையடுத்து அவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் விஸ்வநாதனை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் அவர் ஏடிஎம்மை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டதை விஸ்வநாதன் கொண்டார்.

    இதனையடுத்து விஸ்வநா தனை நாகப்பட்டினம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நாகப்பட்டினம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    • கீழ்வேளூர் அருகே கோகூர் ஊராட்சியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    கீழ்வேளூர் அருகே கோகூர் ஊராட்சியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கோகூர் மாதா கோவில் அருகே வெட்டாறு பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் நாகூர் வண்ணான் குளம் வடகரை பகுதியை சேர்ந்த வெற்றிவேல் (வயது 38) என்பதும், அவர் சாராயம் விற்றதும் தெரியவந்தது.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த கீழ்வேளூர் போலீசார் வெற்றிவேலை கைது செய்து, அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • பிரதோஷத்தை முன்னிட்டு வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • வண்ணமலர்களால் சுவாமியும், நந்திகேஸ்வரரும் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    பின்னர், வண்ணமலர்களால் சுவாமியும், நந்திகேஸ்வரரும் அலங்கரிக்கப்பட்டு தீபாரா தனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவில் வெளிப்பிர காரத்தில் புறப்பாடு நடைபெற்றது.

    இதேப்போல், தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாக்குடி வடக்கு அழகியநாதர் கோவில், கோடியக்காடு குழவர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலுவேதபதி அமராபதீஸ்வரர் கோவில், வெள்ளப்பள்ளம் சிவன் கோவில், புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர் கோவில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரமுடையார் கோவில், அகரம் அழகியநாதர் கோவில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோவில், வடகட்டளை சோமநாதர் கோவில், ருத்ரசோமநாதர் கோவில், மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் கோவில், கத்தரிப்புலம் கோவில் மற்றும் குத்தகை காசிநாதர் கோவில் ஆகிய சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • மலர்களை திருவாசல் குளக்கரையில் இருந்து ஊர்வலமாக எடுத்து கோவிலை வந்தடைந்தனர்.
    • சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    கீழ்வேளூர் அடுத்த தேவூர் செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    தொடர்ந்து, நூற்றுக்கண க்கான பெண்கள் மற்றும் பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வண்ணம் பலவிதமான வண்ண மலர்களை திருவாசல் குளக்கரையில் இருந்து ஊர்வலமாக மேளதாளங்கள் முழங்க எடுத்து கோவிலை வந்தடைந்தனர்.

    அதனை தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடில் உற்சவம் வருகிற 26-ந்தேதி நடக்கிறது.

    • பட்டமங்கலம்- புதுச்சேரி வாய்கால் அருகே ராட்சத பைப்லைனில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.
    • உடைப்பு காரணமாக பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் உள்ளது.

    நாகப்பட்டினம்:

    கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் ராட்சத குழாய் மூலம் வருகிற குடிநீர், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் உள்ள மெயின் குடிநீர் தொட்டியில் சேகரிக்கப்பட்டு ராட்சத குழாய் மூலமாக கீழ்வேளூர், திருக்குவளை வழியாக வேதாரண்யம் வரை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    குறிப்பாக கீழ்வேளூர் ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகளில் குடி தண்ணீர் இதன் மூலமாக தான் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த பட்டமங்கலம் புதுச்சேரி வாய்கால் அருகே ராட்சத பைப் லைனில் திடீர் என உடைப்பு ஏற்பட்டது குடிநீர் வீணாகி வருகிறது.

    அதிக அழுத்தத்துடன் குழாயின் பக்கவாட்டில் இரண்டு இடங்களில் இருந்து உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீரானது அருகில் உள்ள வாய்காலில் கலந்து பயனற்று போவதாகவும் கிராம குற்றம் சாட்டியுள்ளனர்.

    குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் உள்ளது.

    ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை உடனடியாக தடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 63 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு 40 கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
    • மாற்று புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாட்டையும் சிறப்புற மேற்கோள்காட்டினார்.

    நாகப்பட்டினம்:

    திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கல்வி நிறுவனங்கள், இணைந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓஎன்ஜிசி) காரைக்கால் நிதி பங்களிப்புடன் கூடிய சர்வதேச அளவிலான கருத்தரங்கம் எதிர்கால சக்தி அமைப்பு மற்றும் சேமிப்பு குறித்த தலைப்பில் நடை பெற்றது.

    கருத்தரங்கை ஓ என் ஜி சி நிறுவனத்தின் பிரதி பொது முகாமையாளர் ராஜசேகரன், நேதாஜி கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி முனைவர் நிர்மலா ஆனந்த், இயக்குநர் விஜயசுந்தரம் , ஆலோசகர் ஜான் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் சிவகுருநாதன்,ஆராய்ச்சி துறைத்தலைவர் கணேசன் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவங்கி வைத்தனர்.

    இந்நிகழ்ச்சிக்கு சுற்றுச்சூழல் சுகாதார மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் முனைவர் ரகுநாதன் விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் சுமார் 63 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு 40 கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

    சக்தி அமைப்பு மற்றும் சேமிப்பு குறித்த சில முக்கிய பதிவுகளையும் எதிர் காலத்தின் சக்தி அமைப்பின் வரைகோலையும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஓ எம் ஜி சின் பிரதி பொது முகாமை யாளர் ராஜசேகரன் எடுத்துரைத்தார்.

    மேலும், மாற்று புதுப்பிக்கத்தக்க எரி சக்தியின் பயன்பாட்டையும் சிறப்புற மேற்கோள் காட்டினார்.

    மேலும் கல்வி குழுமங்களின் தாளாளர் முனைவர் வெங்கட்ராஜிலு செயலர் சுந்தர்ராஜ் ஆகியோரின் உத்தரபடி விழாவின் ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் கணேசன், அனைத்து துறை சார்ந்த துறை தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • கோடைவெப்பத்தால் அதிக வியர்வை, உடலில் உப்பு சத்து மற்றும் நீர்சத்து பற்றாக்குறை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.
    • கோடை வெப்பத்தால் ஏற்படும் நோய்களைத் தடுக்க அதிக அளவு தண்ணீர் அடிக்கடி குடிக்க வேண்டும்

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் மார்ச் முதல் ஜூலை மாதம் வரை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. மனித உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும்.

    சுற்றுப்புற வெப்பநிலை நமது உடலின் சராசரி வெப்பநிலையை விட அதிகமாகும் போது வியர்வை மற்றும் தோலுக்கு அதிக ரத்த ஒட்டம் செல்லுதல் ஆகியவற்றின் மூலம் உடலில் உள்ள அதிகப்படியான வெப்பத்தை வெளியேற்றி சராசரி வெப்பநிலையில் பாதுகாக்கிறது.

    கோடைவெப்பத்தால் அதிக வியர்வை, உடலில் உப்பு சத்து மற்றும் நீர்சத்து பற்றாக்குறை, அதிக தாகம், தலைவலி, உடல்சோர்வு, தலைசுற்றல், தசைபிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.

    கோடை வெப்பத்தால் ஏற்படும் நோய்களைத் தடுக்க அதிக அளவு தண்ணீர் அடிக்கடி குடிக்க வேண்டும்.

    தளர்வான பருத்தி ஆடைகளை அணிந்துக்கொள்ளுவது நல்லது, சூடான பானங்களை தவிர்க்க வேண்டும்.

    உப்பு கலந்த மோர், அரிசி கஞ்சி, எலுமிச்சை, பழச்சாறு, இளநீர், உப்பு கரைசல் ஆகியவற்றை தண்ணீர் தாகம் எடுக்கும் போது பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 10 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு மண் பரிசோதனை உள்ளிட்ட பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
    • இடத்தின் தன்மை மற்றும் நில எடுப்பு பணிகள் குறித்து விளக்கினர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று, சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.

    இதையடுத்து நாகை கிழக்கு கடற்கரை சாலையில், செல்லூர் அரசு கலை அறிவியல் கல்லூரி அருகில் சுமார் 10 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு மண் பரிசோதனை உள்ளிட்ட பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    இந்நிலையில், நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் அந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது நாகப்பட்டினம் வட்டாட்சியர், நாகை நகராட்சி செயற் பொறியாளர் உள்ளிட்டோர் இடத்தின் தன்மை மற்றும் நில எடுப்புப் பணிகள் குறித்து விளக்கினர்.

    ×