search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகை காருகுடியில் மகாமாரியம்மன் கோவிலில் அமாவாசை வழிபாடு
    X

    நாகை மகாமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடை பெற்றது.

    நாகை காருகுடியில் மகாமாரியம்மன் கோவிலில் அமாவாசை வழிபாடு

    • திருக்குவளை அடுத்துள்ள காருகுடி கிராமத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் நாகம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
    • குழந்தை வரம் வேண்டி அம்மனுக்கு சிறப்பு அன்னப்படையிலிட்டு தம்பதிகளுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அடுத்துள்ள காருகுடி கிராமத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் நாகம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

    திருமண தடை போக்குவது, குழந்தை பாக்கியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை கொண்ட இவ்வாலயத்தில் அமாவா சையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    குழந்தை வரம் வேண்டி அம்மனுக்கு சிறப்பு அன்னப்படையிலிட்டு தம்பதிகளுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    முன்னதாக மகா மாரியம்மன், ஸ்ரீ நாக விநாயகர், ஸ்ரீ நாகம்மன், ஸ்ரீ மதுரை வீரன், மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால்,பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் நாகை, திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×