என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜாளிகாடு, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா
    X

    சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அங்காள பரமேஸ்வரி அம்மன்.

    ராஜாளிகாடு, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா

    • சிம்ம வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பரிவார தெய்வங்களுடன் எழுந்தருளி வீதிஉலா.
    • கப்பரை எடுக்கும் திருவிழா நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ராஜாளிகாடு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா விக்னே ஸ்வர பூஜையுடன் தொடங்க ப்பட்டது.

    தொடர்ந்து, நேற்று வேதாரண்யேஸ்வரர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால் காவடிகள் எடுத்து வந்து அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    பின், அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் சிம்ம வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பரிவார தெய்வங்களுடன் மேள தாளங்கள் முழங்க எழுந்தருளி வீதிஉலா நடை பெற்றது.

    வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர்.

    பின், கப்பரை எடுக்கும் திருவிழா நடைபெற்றது.

    விழா ஏற்பாடுகளை கோவில் வளர்ச்சி குழு தலைவர் மாதவன் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×