என் மலர்
நாகப்பட்டினம்
- அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- அம்மனுக்கு கஞ்சி வார்த்தல், பூச்சொரிதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஆற்றங்கரை தெருவில் செல்வமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.விழாவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
இதை தொடர்ந்து அம்மனுக்கு கஞ்சி வார்த்தல், அன்னதானமும்,பால், பன்னீர்,இளநீர், சந்தனம்,குங்குமம், மாப்பொடி ,திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகமும், பூச்சொரிதல் நடைபெற்றது.
தீபாரதனையும் காண்பிக்கப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியான தீமிதி மற்றும் சாமி வீதியுலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் வேதநாயகி அம்மன் கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.
- சிறப்பு பூஜைகள் நடைபெற்று கொடியேற்றப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது.
அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம்.
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆடிப்பூர திருவிழாவுக்கான கொடியேற்றம் நேற்று நடைபெற்றது.
முன்னதாக வேதநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருள, சிறப்பு பூஜைகள் நடைபெற்று கொடியேற்றப்பட்டது.
பின், கோவில் ஆதீன வித்வான் கேசவன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசையுடன் அம்மன் வீதிஉலா நடைபெற்றது.
இதில் யாழ்பாணம் வரணீ ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சந்நிதி, ஸ்தலத்தார் கயிலைமணி வேதரத்னம், உப்பு வியாபாரம் சுப்பையா பிள்ளை குடும்பத்தினர் உள்பட கோவில் அலுவலர்கள், பக்தர்கள், உபயதாரர்கள் கலந்து கொண்டனர்.
- மாணவர்கள் சிறப்பு ஓவியத்திற்கு வண்ணம் தீட்டினர்.
- மாணவர்கள் அனைவரும் மக்கள் தொகை தின உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு சுந்தரேசவிலாஸ் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் உலக மக்கள் தொகை தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளி ஆசிரியை வசந்தா தலைமை தாங்கினார்.
இதில் செயலாளர் ஆறுமுகம், பொறுப்பு தலைமையாசிரியர் ரவீந்திரன், ஆசிரியர்கள் சந்திரசேகரன், சரண்யா, இலக்கியா, விஜயலக்ஷ்மி, ஆனந்தன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் உலக மக்கள் தொகை நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது என்பது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது.
இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வண்ணம் மாணவர்கள் சிறப்பு ஓவியத்திற்கு வண்ணம் தீட்டினர்.
மாணவர்களின் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
- அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை நாளை முதல் நடைபெற உள்ளது.
- 10-ம் வகுப்பிற்கு மேல் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேர்க்கையை உறுதி செய்து கொள்ளலாம்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், திருக்குவளை மற்றும் செம்போடை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை நாளை (வியாழக்கிழமை) முதல் நடைபெற உள்ளது.
இதற்கு கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி/ 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10-ம் வகுப்பிற்கு மேல் தேர்ச்சி பெற்ற, தோல்வியுற்ற மாணவ- மாணவிகள் மேற்காணும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர அந்தந்த தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்று சேர்க்கையை உறுதி செய்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு 04365-250 129, 04369-276 060 மற்றும் 94871 60168 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அன்னப்பசாமிக்கு பால், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் அபிஷேகம் நடைபெற்றது.
- வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகரில் பூரணா, புஷ்களாம்பிகா சமேத அன்னப்பசாமி கோவில் உள்ளது.
இக்கோ விலில் அன்னப்பசாமிக்கு பால், இளநீர், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின், சுவாமிக்கு விபூதி அலங்காரமும், அம்பாளுக்கு மஞ்சள் காப்பு அலங்காரமும் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபா ராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிப ட்டனர்.
முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ப்பட்டது. அபிஷேக ஏற்பாடு களை சென்னை மடிபாக்கம் குருமூர்த்தி அய்யர் குடும்பத்தினர் செய்திருந்தனர்.
- விஷக்கடி பாதிப்புக்கு உள்ளானவர்கள் உடனடி சிகிச்சை கிடைக்காமல் உயிரிழக்கும் நிலை உள்ளது.
- காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் அரசுக்கு கோரிக்கை.
நாகப்பட்டினம்:
ஷாநவாஸ் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
நாகப்பட்டினம் , நாகூர் மருத்துவமனைகள், திருமருகல் ஒன்றியத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய டாக்டர்கள் இல்லாததால் சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
குறிப்பாக இரவு நேரங்களில் டாக்டர்கள் இல்லாததால், விஷக்கடி பாதிப்புக்கு உள்ளானவர்கள் உடனடி சிகிச்சை கிடைக்காமல் உயிரிழக்கும் நிலை உள்ளது. இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங்பேடி, பொது சுகாதாரம் நோய் தடுப்புத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் ஆகியோரை தொடர்பு கொண்டு, மேற்கூறிய மருத்துவமனைகளுக்கு போதிய டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் அரசுக்கு கோரிக்கை விடுத்தேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வன்மீகநாதர் கோவிலில் காலபைரவர் தனி சன்னிதியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம்திரும ருகல் ஒன்றியம் சீயாத்த மங்கை மெயின் ரோட்டில் வன்மீகநாதர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் காலபை ரவர் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இந்த கோவிலில் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.
அதன்படி ஆனி மாதம் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
முன்னதாக பைரவருக்கு மஞ்சள்,சந்தனம்,பால், பன்னீர்,தயிர்,தேன்,இளநீர்,மாப்பொடி,திரவியப் பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பின்னர் சாமிக்கு வண்ணம லர்களால் அலங்க ரிக்கப்பட்டு தீபா ராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 5 நாட்டிக்கல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
- படகு மூழ்கியது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கடலோர காவல்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீச்சாங்குப்பத்தை சேர்ந்தவர் செல்ல குஞ்சு. இவருக்கு சொந்தமான பைபர் படகில் இவரது மகன் ரகு (வயது 30), சேவாபாரதியை சேர்ந்த சக்திவேல் (45), மயிலாடுதுறை மாவட்டம் பழையாறு மடவமேடு வடக்கு தெருவை சேர்ந்த விக்கி (18) ஆகிய 3 பேர் நேற்று நள்ளிரவு மீன் பிடிக்க புறப்பட்டனர்.
நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 5 நாட்டிக்கல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென பலத்த சூறைக்காற்று வீசியதில் கடலில் படகு கவிழ்ந்தது.
இதில் ரகு உள்பட 3 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூக்குரலிட்டனர்.
சிறிது நேரத்தில் ரகு மூழ்கி மாயமானார். அப்போது அந்த பகுதி வழியாக வந்த மற்றொரு பைபர் படகில் சக்திவேல், விக்கி ஆகியோரை சக மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இவர்கள் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களிடம் படகு மூழ்கியது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கடலோர காவல்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் கடலில் மூழ்கி மாயமான மீனவர் ரகுவை கீச்சாங்குப்பம் மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரகு கதி என்ன ஆனது என தெரியாமல் அவரது குடும்பத்தினர் கவலையில் உள்ளனர்.
- தேய்பிறை அஷ்டமியை யொட்டி சிறப்பு யாகம் நடந்தது.
- பைரவருக்கு பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூர் மேலமறைகாடர் கோவிலில் உள்ள காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியை யொட்டி ஆனந்த் சிவச்சாரியர்கள் தலைமையில் சிறப்பு யாகம் நடைபெற்றது.
பின், கடம் புறப்பாடு நடைபெற்று கோவிலை சுற்றி வலம் வந்து பைரவருக்கு பால், சந்தனம், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்க ப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- கடந்த ஒரு வாரமாக கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட தண்ணீர் வரவில்லை.
- ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்படும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா பகுதியில் பல ஊராட்சிகளில் கடந்த ஒரு வாரமாக கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட தண்ணீர் வராததை கண்டித்து ஊராட்சி தலைவர்கள் தகட்டூர் கடைத்தெருவில் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சி தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார். தென்னடார் ஊராட்சி தலைவர் தேவி செந்தில், தகட்டூர் ஊராட்சி தலைவர் ரேவதி பாலகுரு, தாணிக்கோட்டகம் ஊராட்சி தலைவர் முருகானந்தம், கடினல்வயல் ஊராட்சி தலைவர் வைத்திலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கோஷ ங்கள் எழுப்பி ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், வருவாய்துறையினர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்படும் என் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
- திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பொதுமக்கள் வேளாங்கண்ணியில் குவிந்தனர்.
- பேராலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது.
இங்கு வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்கும் வேளாங்கண்ணி கீழை நாடுகளின் 'லூர்து நகர்' என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் கட்டப்பட்டுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் 'பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்குகிறது.
இந்த ஆலயமானது வங்கக்கடற்கரையோரம் அமைந்திருப்பது மேலும் சிறப்பம்சமாகும்.
இங்கு உத்திரிய மாதா ஆலயம் தனியாக அமைந்துள்ளது. இங்கு ஆண்டு திருவிழா மும்பை வசாய் பகுதி மீனவர்கள் சார்பாக நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பொதுமக்கள் வேளாங்க ண்ணியில் குவிந்து வருகின்றனர்.
இதனால் வேளாங்கண்ணி பேராலய வளாகம், கடைத்தெரு, கடற்கரை உள்ளிட்ட இடங்களில் எங்கு பார்த்தாலும் கூட்டம் அலைமோதியது.
வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக தென்னங்கன்றுகளை வாங்கி மாதாவுக்கு சமர்ப்பித்தனர்.
மேலும் உடல்நலம் பாதுகாக்கவும், படித்த மாணவர்கள் வேலை வாய்ப்பை பெறுவதற்காகவும், பல்வேறு குறைகள் தீர பேராலய பகுதியில் அமைந்துள்ள சிலுவை பாதையில் முட்டியிட்டு சென்று பழைய மாதா கோவிலில் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அதேபோல வேண்டுதல் நிறைவேற வேண்டி 6 அடி உயர மெழுகுவர்த்தியையும் கடைகளில் வாங்கி அதனை ஆலயத்தில் ஏற்றி வழிபட்டு வருகின்றனர்.
வெயிலின் தாக்கம் குறைந்து இருந்ததால் பகல் முழுவதும் வேளாங்கண்ணியில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. சிறுவர் முதல் பெரியவர் வரை கடலில் ஆனந்த குளியல் நீராடி வருகின்றனர்.
- நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் யாகசாலை தொடங்கியது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் ஒன்றாம் சேத்தி வடக்கு குத்தகை பகுதியில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் 102 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடந்தது.
முன்னதாக நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் யாகசாலை தொடங்கியது. தொடர்ந்து,
நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து கோவிலை சுற்றி சிவாச்சாரியார்கள் புனிதநீர் அடங்கிய கடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து விமான கோபுரங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.






