என் மலர்
நாகப்பட்டினம்
- பொதுமக்களுக்கு ஈ.சி.ஜி. மற்றும் பொது மருத்துவம் அளிக்கப்பட்டது.
- 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்ட வன் முன்னிலை வைத்தார் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில் ரத்த சர்க்கரை அளவு கண்டறிதல்,இரத்த அழுத்தம் கண்டறிதல், ரத்தக்கொதிப்புக்கான சிகிச்சைகள், தைரா ய்டு,ஆஸ்துமா, சுவாசக் கோளாறு சிகிச்சைகள், தலைவலி, உடல் வலி,காய்ச்சலுக்கான சிகிச்சைகள், உடல் பருமன் அளவீடு, ஈசிஜி மற்றும் பொது மருத்துவம் செய்யப்பட்டது.
இதில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன்,ஒன்றிய பொறியாளர் செந்தில், ஒன்றிய குழு உறுப்பினர் பேபிசரளா பக்கிரிசாமி,ஊராட்சி செயலர் ஜெய்சங்கர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் திருப்புகலூர் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
- கடந்த 2 நாட்களுக்கு முன் 15 பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்
- தங்கசாமியை தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
காரைக்கால் துறை முகத்திலிருந்து கடந்த 14 -ந் தேதி அதிகாலை 4 மணிக்கு பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்ப டையில் மோகன், இளையராஜா,ரகு, மணி, குமார் உள்ளிட்ட 15 பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது கடல் சீற்றம் மற்றும் சூறைக்காற்று காரணமாக நாகை நம்பியார்நகரை சேர்ந்த தங்கசாமி என்பவர் படையிலிருந்து நிலை தடுமாறி மாமல்லபுரம் அருகே 12 நாட்டிக்கல் மயில் தொலைவில் கடலில் விழுந்ததார்.
இதனையடுத்து சக மீனவர்களும் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் அவர் மாயமானதால் உடனடியாக காரைக்கால் மீன்வளத்துறை மற்றும் கிராம நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து காரைக்காலில் துறைமுக த்திலிருந்து 12 விசை ப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கசாமியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அரசு சார்பில் விமானம் மற்றும் கப்பல் மூலமும் தேடும் பணியை தொடங்க உள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
- மீன்களை வாங்குவதற்கு வியாபாரிகள் அதிகாலையிலேயே அதிகளவில் திரண்டனர்.
- கடந்த வாரம் ரூ.500-க்கு விற்ற சங்கரா மீன் ரூ.400 விற்பனையாகி உள்ளது.
நாகப்பட்டினம் :
நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாஙகுப்பம், நம்பியார் நகர், விழுந்தமாவடி, காமேஸ்வரம் புஷ்பவனம், கோடியக்கரை, உள்ளிட்ட 27 மீனவ கிராமங்களில் 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நாகை துறைமுகத்தில் நூற்றுக்கணக்கான விசை படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீன்வர்கள் இன்று ஞாயிற்று கிழமை என்பதால் அதிகாலை கரை திரும்பினர். மீன்களை வாங்குவதற்கு மீன்பிரி யர்கள், மீன் வியாபாரிகள் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கானோர் நாகை துறைமுகத்தில் திரண்டனர்.
ஒரு சில விசை படகுகளில் அதிக அளவில் கனவா மீன்களும் ஏற்றுமதிக்காக இறால் நண்டுகள் என கடந்த வாரத்தை விட இந்த வாரம் மீன்களின் வரத்து அதிகமாக இருந்தாலும் கூட, நாளை ஆடி அமாவாசை என்பதால் விற்பனை சற்று மந்தமாக இருப்பதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அதாவது கடந்த வாரம் ரூ500 விற்ற சங்கரா 400 க்கு விற்பனையாகி உள்ளது.
கேரள மாநிலத்தில் ஜூன் மாதம் முதல் ஜூலை மாதம் வரை இரண்டு மாதம் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் அதிக அளவில் கேரள மீன் வியாபாரிகள் மீன்கள் வாங்குவதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக முகாமிட்டு இன்று மீன்களை அதிக அளவில் வாங்கி கொண்டு கனரக வாகன மூலம் கேரளாவுக்கு செல்கின்றனர்.இதே போல் திருச்சி, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மீன் வியாபாரிகள் மீன்கள் வாங்க வந்துள்ள நிலையில் நாகை மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மீன் பிரியர்கள் ஏராளமானோர் துறைமுகத்தில் குவிந்துள்ளதால் நாகை மீன்பிடித் துறைமுகம் களைக்கட்டி உள்ளது.
மீன்களின் விலையை பொருத்தவரை வஞ்சரம் ஒரு கிலோ 650- 900, பாறை 350 முதல் 450,சீலா 400 முதல் 450,கண்ணாடி பாறை 400 முதல் 450,இறால் 400 முதல் 500 க்கும் விற்பனையாகிறது
- உத்திரிய மாதா ஆண்டு திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- தேரை மீனவ பெண்கள் பாரம்பரிய முறைப்படி சுமந்து வந்தனர்
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவ ட்டம் வேளாங்கண்ணி புனித உத்திரிய மாதா கோவில் ஆண்டு திருவிழா கடந்த 6, ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மாதா கோவிலின் முக்கிய திருவிழாவான தேர்பவனி நேற்று விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக பேராலயத்திலிருந்து எழுந்தருளிய புனித உத்திரிய மாதா தேரினை மகாராஷ்டிர மாநிலம் மும்பை வசாய் கிறிஸ்தவ மீனவ பெண்கள் பாரம்பரிய முறைப்படி சுமந்து வந்தனர்.
தேரானது வேளாங்கண்ணி கடற்கரை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றபொழுது இருபுறமும் நின்றிருந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித உத்திரியமாதா,செபஸ்தியர், அந்தோணியர் ஆகிய தேர் மீது மலர்களை தூவி தங்க ளுடைய பிரார்த்தனையை நிறைவேற்றினர்.
தேர் நிலையை வந்தடைந்ததும் வசாய் கிறிஸ்தவ மீனவர்கள் உற்சாக நடனம் ஆடி மகிழ்ந்தனர்.
- பாலத்தை பார்வையிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
- வெள்ளையாற்றில் படகு குழாம் அமைத்து சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும்.
நாகப்பட்டினம்:
பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவருமான வேல்முரு கன் தலைமையி லான தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழுவில் சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை, அருள், கருணாநிதி, சக்கரபாணி, பழனியாண்டி, மோகன், ராமலிங்கம், ஜெயக்குமார் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டனர்.
வேளாங்கண்ணி செருதூர் மீனவ கிரா மத்தின் இடையே வெள்ளையாறில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பாலத்தை பார்வையிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
அப்போது வெள்ளை யாற்றை தூர்வாரி தரைதட்டாமல் படகுகள் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என கிராம மீனவர்கள் கோரிக்கைமனு அளித்தனர்.
மேலும் வெள்ளையாற்றில் படகு குழாம் அமைத்து சுற்றுலா தளமாக மாற்ற வேண்டுமென மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் கோரிக்கை குழுவினருக்கு விடுத்தார்.
தொடர்ந்து வெள்ளப்ப ள்ளம் மீனவ கிராமம், நாகை ஆதிதிராவிட நல விடுதி, நாகை அரசு மருத்துவமனை, நாகை புயல் பாதுகாப்பு மையம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
இதில் நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பின்னல் ஜடைகளுடன் போஸ் கொடுத்து மாணவிகள் மேடையை அலங்கரித்தனர்.
- தேர்வு செய்யப்படுகின்ற மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
நாகப்பட்டினம்:
பயிற்சி பெற்ற செவிலியர்கள் சங்கத்தின் சார்பாக நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான நடனம் மற்றும் பல்வேறு போட்டிகள் நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி உள்ள ஆண்டவர் கல்லூரியில் நடைபெற்றது.
நாகப்பட்டினம் புதுக்கோட்டை தஞ்சாவூர் மயிலாடுதுறை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இருந்து 12 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நர்சிங் மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கல்வி மற்றும் பிற செயல்பாடுகளில் மாணவிகள் மேலோங்கி வர மண்டல அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
ஊக்குவிப்பு தொடர்பான பாடல்கள் முதல் பின்னல் கோலாட்டம் என வித்தியாசமான மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பார்வை யாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
தொடர்ந்து 12 கல்லூரிகளை சேர்ந்த மாணவிகளுக்கு இடையில் நடைபெற்ற சிகை அலங்கார போட்டியில் வித்தியாசமான முறையில் பின்னல் ஜடைகளுடன் போஸ் கொடுத்து மாணவிகள் மேடையை அலங்கரித்தனர்.
இதைப்போல சுற்றுச்சூழல் மாசுபடுதல், இயற்கை மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஓவியங்களை தங்களின் முகங்களில் வரைந்து முக ஓவிய போட்டியில் வண்ணமயமான முகங்களுடன் மாணவிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற மெஹந்தி போட்டியில் கை முழுவதும் மருதாணிகள் போட்டு தங்களுடைய திறமைகளை நர்சிங் கல்லூரி மாணவிகள் வெளிப்படுத்தினர்.
மண்டல அளவிலான போட்டியில் தேர்வு செய்யப்படுகின்ற மாணவிகள் அடுத்த மாதம் மாநில அளவில் சேலத்தில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
- பள்ளியில் முன்னாள் மாணவர் மன்றம் அமைக்க வேண்டும்.
- மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பள்ளி அளவில் விளையாட்டு விழா நடத்த வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் நிஷாந்தி தலைமை தாங்கினார்.
முன்னதாக ஆசிரியர் மாணிக்கம் அனைவரையும் வரவே ற்றார். தலைமை யாசிரியர் தெட்சணாமூர்த்தி கூட்டப் பொருள் குறித்து பேசினார்.
துணை தலைவர் உமா மகேஸ்வரி, கல்வியாளர் ஆர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் அம்சவல்லி, அனீஸ் பாத்திமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பள்ளியில் முன்னாள் மாணவர் மன்றம் அமைப்பது, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பள்ளி அளவில் விளையாட்டு விழா நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவே ற்றப்பட்டன.
முடிவில் பள்ளி ஆசிரியர் முருகானந்தம் நன்றி கூறினார்.
- ஆட்டோவில் 1100 புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
- ஆட்டோவை பறிமுதல் செய்து தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் தீ மிதி திடல் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு ஆட்டோ வேகமாக வந்து கொண்டிருந்தது.
போலீசாரை பார்த்ததும் அதனை ஓட்டி வந்த வெளிப்பாளையத்தை சேர்ந்த திலிப்குமார் இறங்கி தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து போலீசார் ஆட்டோவை சோதனை செய்தனர்.
அதில் 1100 புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து ஆட்டோவை பறிமுதல் செய்து தப்பி ஓடிய சேர்ந்த திலிப்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதனிடையே இது குறித்த தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், டவுன் போலீஸ் நிலையத்துக்கு வந்து ஆட்டோ மற்றும் மது பாட்டில்களை பார்வையிட்டார்.
கள்ளச்சாராயம் விற்பனை, கடத்தலில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.
இதுபோன்ற குற்ற செயல்களில் உங்களது ஊரிலும் யாரேனும் ஈடுபட்டால் 8428103090 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
புகார் தருபவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது.
அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம்.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆடிப்பூர விழாவுக்காக கொடியே ற்றப்பட்டது.
விழாவின் முதல் நாளில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காமதேனு வாகனத்தி ல் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி அலுவலர்கள் செய்து இருந்தனர்.
- பஸ் ஏற வெட்டாற்றை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
- தட்டிப்பாலத்தில் ஒவ்வொரு நாளும் ஆபத்தான முறையில் பெண்கள் கடந்து சென்று வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த ஒக்கூர் ஊராட்சியில் விளா ம்பாக்கம் கிராமம் அமைந்துள்ளது.
இக்கிராம த்தில் சுமார் 100- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இக்கிராமத்திற்கு இதுநாள் வரை அரசு, தனியார் பஸ்களோ கிடையாது. நாகப்பட்டினம் செல்வதற்கு 10 கிலோ மீட்டர் நடந்து வந்து கீழ்வேளூரில்தான் பஸ் ஏற வேண்டும்.
விளாம்பாக்கத்தில் இருந்து கீழ்வேளூர், நாகப்ப ட்டினம், திருவாரூரில் படிக்கும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள், வயல் வேலைக்கு செல்பவர்கள் அனைவரும் ஆற்றுக்கு அடுத்துள்ள கோகூர் சென்று பஸ் ஏற வெட்டா ற்றை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இதற்காக கிராமத்தினரே தட்டிப்பாலம் அமைத்து சென்று வருவதும் மழை, வெள்ளக் காலத்தில் அந்த தட்டிப்பாலம் ஆற்றில் அடித்து செல்வதுமாக தொடர்கதை யாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஆற்றில் தற்போது உள்ள உடைந்த தட்டிப்பாலத்தில் ஒவ்வொரு நாளும் ஆபத்தான முறையில் மாணவர்கள் மற்றும் பெண்கள் கடந்து சென்று வருகின்றனர்.
எனவே உடனடியாக ஒரு ஆம்புலன்ஸ் செல்லும் அளவுக்காவது சிமெண்ட் பாலம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திறனாய்வு தேர்வில் மாவட்ட அளவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
- 10-ம் வகுப்பு தேர்வில் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றதற்கு ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே ராஜன்கட்டளை அரசு உயர்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் அகோரமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.
பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் தனபால் முன்னிலை வகித்தார்.
கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வில் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதற்கு பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் கவுரவித்தனர்.
திறனாய்வு தேர்வில் மாவட்ட அளவில் வெற்றிபெற்ற 6 மாணவர்களை பரிசு வழங்கி கவுரவித்தனர்.
மேலும், கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவ- மாணவிகள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- சிங்கார வேலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
- சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
புகழ்பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றாக நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று ஆனி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் சிங்கார வேலவருக்கு, பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
பின்னர் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் சிங்காரவேலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆறுமுக கடவுளுக்கும், வெளிபிரகாரத்தில் உள்ள மேலக்குமரருக்கும் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதேபோல் கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணிய சாமிக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து விபூதி அலங்காரத்துடன் வண்ணமலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இங்குள்ள சுப்பிரமணியசாமி ஒரு முகம், ஆறு திருக்கரங்களை கொண்ட குழந்தை முகத்துடன் அமைந்துள்ளது.
இதேபோல், தோப்புத்துறை கைலாசநாதர்கோவிலில் அமைந்துள்ள முருகனுக்கும், ஆறுகாட்டுத்துறை கற்பகவிநாயகர் கோவிலில் அமைந்துள்ள முருகனுக்கும், வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கும் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் வாய்மேடு பழனி ஆண்டவர் கோவிலில் ஆனி மாத கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. முன்னதாக முருகனுக்கு பால், பன்னீர், சந்தனம், நெய், தேன், திருநீறு, மஞ்சள் பொடி ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளியங்கி அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






