என் மலர்
நாகப்பட்டினம்
- அம்மனுக்கு பால், பன்னீர், உள்ளிட்ட திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவ ட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள குறிச்சி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீமழைமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆலய த்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு குறிச்சி அபிராமி அம்மன் ஆலயத்தில் இருந்து விரதம் இருந்த 108 பெண்கள் கஞ்சி கலையங்களை சுமந்து வந்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர்.
அதனைதொடர்ந்து அம்மனுக்கு பால் பன்னீர் சந்தனம் உள்ளிட்ட திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது அதனை தொடர்ந்து மகா தீபாரதனை காண்பி க்கப்பட்டது. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு கஞ்சி பிரசாதமாக வழங்க ப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- ஆடிப்பூர விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதார ண்யேஸ்வரர் திருக்கோயில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் தம்பதி சமேதரராய் திருமண காட்சி அளித்த தலம், நான்கு வேதங்களும் பூஜித்த தலம். இங்குள்ள வேதநாயகி அம்மனுக்கும், சரஸ்வதிக்கு சரஸ்வதியின் வீணையின் ஒலி இனிமையானதா? அம்மனின் குரல் வலிமை இனிமையானதா என்ற போட்டி ஏற்பட்டது.
அப்போது வீணையின் ஒலியை விட அம்மனின் குரல் இனிமையானதாக இருந்ததால், இந்த கோயிலில் உள்ள சரஸ்வதி வீணை இல்லாமல் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அதே நேரத்தில் அம்மனுக்கு யாழை பழித்த மொழியம்மை என்ற பெயா் வரலாயிற்று.
இப்படி சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் ஆடிபூர திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு ஆடிப்பூர விழா கொடியேற்றம் 12.7.23 தொடங்கி நடந்து வருகிறது. தினந்தோறும் காலை மாலை அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது.
21.7.23 வெள்ளி இரவு ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு அபிஷேக ஆராத னைகளும், அர்ச்சனைகளும் நடந்தது. பின்பு இரவு மின் விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரி க்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அம்பாள் எழுந்தருளி வீதியுலா நடந்தது. வீதியுலாவின் போது 10க்கும் மேற்பட்ட நாதஸ்வரக் கலைஞர்கள் கலந்து கொண்ட இன்னிசை கச்சேரி நடந்தது.
இதில் ஏராளமான பெண்கள் உட்பட பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அரசு போக்குவரத்துக் கழக வேதாரண்யம் கிளையினர் செய்திருந்தனர்.
- தற்கொலைக்கு முயன்றவரை மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருமருகல் அடுத்த மருங்கூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் ஜெயக்குமார் (வயது 33). கூலித்தொழிலாளி. இவரின் தங்கை ராஜகுமாரி என்பவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதாகவும், இதனால் ஜெயக்குமார் மனநலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் ராஜகுமாரியின் நினைவு நாளில் ஜெயக்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி உள்ளனர்.
அங்கு ஜெயக்குமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி மற்றும் போலீசார் ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜெயக்குமார் மனைவி அமராவதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முகாமில் மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
- முடிவில் ஆசிரியை கற்பகவல்லி நன்றி கூறினார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட தேசிய பசுமை படை பொறுப்பாசிரி யர்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முகாம் நாகூர் கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
பள்ளிக்கல்வித்துறை சுற்றுச்சூழல் துறை கிரேடு எப் தொண்டு நிறுவனம் , நாகூர் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய பயிற்சி முகாமை முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி துணை ஆய்வாளர் ராமநாதன், நாகூர் ரோட்டரி கிளப் செயலர் ரமேஷ், பொருளாளர் கரிகாலன், தலைவர் இமையாத் அலி கிரெசென்ட் பள்ளியை சேர்ந்த ஆசிரியைகள் சியாமளா , பானு , மாலதி, பணி நிறைவு நகர் நல அலுவலர் அறிவழகன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
கருத்தாளர்களாக தோட்டக்கலை துறை சந்தோஷ், ஊட்டச்சத்து உணவு முறை துறை பேராசிரியர் ரிபாத் நிஷா, சுற்றுச்சூழல் தகவல் மைய ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
அமிர்தா வித்யாலயா மற்றும் வித்யாஷ்ரம் மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். முன்னதாக நாகை மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கி ணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் வரவேற்புரை ஆற்றினார்.
முடிவில் ஆசிரியை கற்பகவல்லி நன்றி கூறினார்.
- குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்கப்பட்டது.
- 43 கிராமங்களில் 6 ஆயிரத்து 500 ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டது.
நாகப்பட்டினம்,
நாகப்பட்டினம் கீழ்வேளூரில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) தேவேந்திரன் தலைமை தாங்கினார்.
வட்டார ஆத்மா குழு தலைவர் கோவிந்தராசன் முன்னிலை வகித்தார். கீழ்வேளூர் வட்டார அளவில் 43 கிராமங்களில் 6 ஆயிரத்து 500 ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் 100 சதவீத மானியத்தில் 20 விவசாயிகளுக்கு யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் உரங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கீழ்வேளூர் வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) ராஜலட்சுமி, ஒன்றியக்குழு தலைவர் வாசுகி நாகராஜன், துணைத்தலைவர் புருஷோத்தமதாஸ், பேரூராட்சி மன்ற தலைவர் இந்திராகாந்தி, துணைத் தலைவர் சந்திரசேகரன், ஆத்மாகுழு உறுப்பினர்கள் பழனியப்பன், அட்சயலிங்கம், துணை வேளாண்மை அலுவலர் பிரான்சிஸ், உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- விழா பள்ளியின் தலைமையாசிரியர் மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
- முன்னதாக ஆசிரியர் வேம்பையன் அனவைரையும் வரவேற்றார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த பன்னாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்றம் தொடக்க விழா பள்ளியின் தலைமையாசிரியர் மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை வில்லவன் கோதை, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குமணன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கார்த்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக ஆசிரியர் வேம்பையன் அனவைரையும் வரவேற்றார்.
கலை இலக்கிய, பண்பாட்டு பயிற்றுநர் தென்னடார் அம்பிகாபதி சிறப்புரையாற்றினார்.
இதில் ஆசிரியர் ரமேஷ் குமார், தர்மதுரை, யூடஸ் சுகிலா, வீரமணி, சித்ரா, பிரதீபா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின், போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
- நாய் அப்புவிற்கு பிடித்த பிரியாணி, பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் படையல் இடப்பட்டது.
- கால்நடை டாக்டர்கள், உதவியாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் வருகை தந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
வேதாரண்யம்:
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் கிராமத்தில் வசிப்பவர் தர்மலிங்கம் (வயது 46). அப்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவரது மனைவி அமுதா (40).
இந்த தம்பதிக்கு திருமணமாகி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தைகள் இல்லை. இதனால் அவர்கள் அப்பு என்ற நாய்க்குட்டியை குழந்தை போல் பாசமாக கடந்த 10 ஆண்டுகளாக வளர்த்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையில் சென்றுகொண்டிருந்த நாய்க்குட்டி மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதனை கண்ட தர்மலிங்கமும், அவரது மனைவியும் கதறி அழுதனர்.
பின்னர், நாய் அப்புவின் உடலை அவர்களது தோட்டத்திலேயே புதைத்து மனிதர்களுக்கு செய்வது போல் இறுதி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, இறந்த நாய்க்கு படத்திறப்பு விழா நடத்த முடிவு செய்து, விழா அழைப்பிதழை உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் 'வாட்ஸ்-அப்'-பில் அனுப்பினர். இந்நிலையில், நேற்று நாய் அப்புவிற்கு படத்திறப்பு விழா நடந்தது.
அப்புவின் உருவபடத்தை கருப்பம்புலம் அரசு கால்நடை தலைமை மருத்துவர் மீனாட்சி சுந்தரம் திறந்து வைத்து மாலை அணிவித்தார். தொடர்ந்து, அங்கு வந்திருந்த உறவினர்கள், நண்பர்கள் அப்புவிற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நாய் அப்புவிற்கு பிடித்த பிரியாணி, பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் படையல் இடப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி கால்நடை டாக்டர்கள், உதவியாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் வருகை தந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
- அகத்தியருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம்.
- ஆடிப்பூர விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது.
அகத்தியருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம்.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆடிப்பூர விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் 7-ம் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் வேதநாயகி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது.
- மக்காத குப்பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
- மாணவ- மாணவிகள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி சார்பில் தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 'என் குப்பை எனது பொறுப்பு' விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார்.
நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மணிகண்டன், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் சுதா, கணேஷ், வனிதா, சதீஷ், கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் குப்பைகளை கையாளும் முறைகள் குறித்தும், மக்காத குப்பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, மாணவ- மாணவிகள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
முடிவில் ஆசிரியர் மாணிக்கம் நன்றி கூறினார்.
- தீபக் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
- தீபக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் மேலக்காடு எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் குமார் மகன் தீபக் (வயது 16).
இவர் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு ஐ.டி.ஐ-யில் சேர்ந்துள்ளார்.
இவர், அதே பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரிடம் பேசி, பழகி வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று தீபக் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதை பார்த்த பெண்ணின் பெற்றோர் தீபக்கை திட்டி கண்டித்ததாக தெரிகிறது.
இதில் மனமுடைந்து வீட்டிற்கு திரும்பிய தீபக், தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தீபக்கின் தந்தை குமார் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டா் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, தீபக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
- விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிரு ப்பதாவது:-
நாகை மாவட்டத்தில் ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 21-ந் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் நாகை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்து பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தண்ணீர் வாய்க்காலில் புகுந்து வயல்களில் தேங்கி நிற்கும் நிலை உள்ளது.
- நிலங்கள் பாதிப்புக்குள்ளாகும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வடகரை ஊராட்சி தென்கரை வழியாக தென்கரை பாசன வாய்க்கால் வடக்கு புத்தாறு ஆற்றில் இருந்து பிரிந்து செல்கிறது.இந்த வாய்க்காலின் மூலம் சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகிறது.
இந்த நிலையில் தென்கரை பாசன வாய்க்காலில் தலைப்பில் உள்ள மதகில் உள்ள கதவனை சேதமடைந்து உள்ளது.இதனால் விவசாயத்திற்கு தேவையான நேரத்தில் தண்ணீரை திறந்து தேவையற்ற நேரத்தில் அடைத்து வைக்க முடியாத நிலை உள்ளது.மேலும் மழை வெள்ள காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களிலும் தண்ணீர் வாய்க்காலில் புகுந்து வயல்களில் தேங்கி நிற்கும் நிலை உள்ளது.
இதனால் விவசாய நிலங்கள் பாதிப்பு க்குள்ளாகும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த வாய்க்கால் கதவணையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






