என் மலர்
உள்ளூர் செய்திகள்

போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அரசு பள்ளியில் இலக்கிய மன்றம் தொடக்கம்
- விழா பள்ளியின் தலைமையாசிரியர் மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
- முன்னதாக ஆசிரியர் வேம்பையன் அனவைரையும் வரவேற்றார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த பன்னாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்றம் தொடக்க விழா பள்ளியின் தலைமையாசிரியர் மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை வில்லவன் கோதை, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குமணன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கார்த்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக ஆசிரியர் வேம்பையன் அனவைரையும் வரவேற்றார்.
கலை இலக்கிய, பண்பாட்டு பயிற்றுநர் தென்னடார் அம்பிகாபதி சிறப்புரையாற்றினார்.
இதில் ஆசிரியர் ரமேஷ் குமார், தர்மதுரை, யூடஸ் சுகிலா, வீரமணி, சித்ரா, பிரதீபா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின், போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Next Story






