என் மலர்
நீங்கள் தேடியது "நாய் அப்பு"
- நாய் அப்புவிற்கு பிடித்த பிரியாணி, பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் படையல் இடப்பட்டது.
- கால்நடை டாக்டர்கள், உதவியாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் வருகை தந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
வேதாரண்யம்:
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் கிராமத்தில் வசிப்பவர் தர்மலிங்கம் (வயது 46). அப்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவரது மனைவி அமுதா (40).
இந்த தம்பதிக்கு திருமணமாகி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தைகள் இல்லை. இதனால் அவர்கள் அப்பு என்ற நாய்க்குட்டியை குழந்தை போல் பாசமாக கடந்த 10 ஆண்டுகளாக வளர்த்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையில் சென்றுகொண்டிருந்த நாய்க்குட்டி மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதனை கண்ட தர்மலிங்கமும், அவரது மனைவியும் கதறி அழுதனர்.
பின்னர், நாய் அப்புவின் உடலை அவர்களது தோட்டத்திலேயே புதைத்து மனிதர்களுக்கு செய்வது போல் இறுதி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, இறந்த நாய்க்கு படத்திறப்பு விழா நடத்த முடிவு செய்து, விழா அழைப்பிதழை உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் 'வாட்ஸ்-அப்'-பில் அனுப்பினர். இந்நிலையில், நேற்று நாய் அப்புவிற்கு படத்திறப்பு விழா நடந்தது.
அப்புவின் உருவபடத்தை கருப்பம்புலம் அரசு கால்நடை தலைமை மருத்துவர் மீனாட்சி சுந்தரம் திறந்து வைத்து மாலை அணிவித்தார். தொடர்ந்து, அங்கு வந்திருந்த உறவினர்கள், நண்பர்கள் அப்புவிற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நாய் அப்புவிற்கு பிடித்த பிரியாணி, பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் படையல் இடப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி கால்நடை டாக்டர்கள், உதவியாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் வருகை தந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.






