என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

    • தீபக் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
    • தீபக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் மேலக்காடு எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் குமார் மகன் தீபக் (வயது 16).

    இவர் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு ஐ.டி.ஐ-யில் சேர்ந்துள்ளார்.

    இவர், அதே பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரிடம் பேசி, பழகி வந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று தீபக் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இதை பார்த்த பெண்ணின் பெற்றோர் தீபக்கை திட்டி கண்டித்ததாக தெரிகிறது.

    இதில் மனமுடைந்து வீட்டிற்கு திரும்பிய தீபக், தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தீபக்கின் தந்தை குமார் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டா் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, தீபக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×