என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்
    X

    மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.

    அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்

    • பள்ளியில் முன்னாள் மாணவர் மன்றம் அமைக்க வேண்டும்.
    • மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பள்ளி அளவில் விளையாட்டு விழா நடத்த வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் நிஷாந்தி தலைமை தாங்கினார்.

    முன்னதாக ஆசிரியர் மாணிக்கம் அனைவரையும் வரவே ற்றார். தலைமை யாசிரியர் தெட்சணாமூர்த்தி கூட்டப் பொருள் குறித்து பேசினார்.

    துணை தலைவர் உமா மகேஸ்வரி, கல்வியாளர் ஆர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் அம்சவல்லி, அனீஸ் பாத்திமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பள்ளியில் முன்னாள் மாணவர் மன்றம் அமைப்பது, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பள்ளி அளவில் விளையாட்டு விழா நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவே ற்றப்பட்டன.

    முடிவில் பள்ளி ஆசிரியர் முருகானந்தம் நன்றி கூறினார்.

    Next Story
    ×