search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadipuram"

    • ஆடிப்பூர திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • மேளதாளங்கள் முழங்க சிறப்பு அலங்காரத்தில் அபிராமி அம்மன் தேரில் எழுந்தருளினார்.

    தரங்கம்பாடி:

    திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனுறை அமிர்தகடே ஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நிகழாண்டு ஆடிப்பூர திருவிழா கடந்த 13 ஆம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் வீதி உலா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதனைத் தொடர்ந்து 9 ஆம் நாள் நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது . பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மேளதாளங்கள் முழங்க வானவேடிக்கையோடு ஸ்ரீஅபிராமி எழுந்த ருளினார்.

    இதனையடுத்து மேல வீதியில் இருந்து தேர் புறப்பட்டு வடக்கு வீதி, கீழவதி, தெற்கு வீதி வழியாக வலம் வந்து மீண்டும் மேலவீதியில் நிலையை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இதில் தி.மு.க. செம்பை மத்திய ஒன்றிய செயலாளர் அமுர்த விஜயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ், தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் செந்தில், கட்டளை தம்பிரான் சாமிகள், கோவில் கண்காணிப்பாளர் மணி, உள்துறை கண்கா ணிப்பாளர் விருத்தகிரி, கோவில் காசாளர் களியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் வேதநாயகி அம்மன் கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.
    • சிறப்பு பூஜைகள் நடைபெற்று கொடியேற்றப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது.

    அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம்.

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆடிப்பூர திருவிழாவுக்கான கொடியேற்றம் நேற்று நடைபெற்றது.

    முன்னதாக வேதநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருள, சிறப்பு பூஜைகள் நடைபெற்று கொடியேற்றப்பட்டது.

    பின், கோவில் ஆதீன வித்வான் கேசவன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசையுடன் அம்மன் வீதிஉலா நடைபெற்றது.

    இதில் யாழ்பாணம் வரணீ ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சந்நிதி, ஸ்தலத்தார் கயிலைமணி வேதரத்னம், உப்பு வியாபாரம் சுப்பையா பிள்ளை குடும்பத்தினர் உள்பட கோவில் அலுவலர்கள், பக்தர்கள், உபயதாரர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆடிப்பூர வளைகாப்பு முன்னிட்டு சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனைகள் நடைபெற்றது.
    • ஊர்வலத்தில் வந்த பக்தர்கள் அனைவரும் மாங்கல்ய பொருள்கள் கையில் ஏந்தி வந்திருந்தனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வணிக வைசிய சமுதாயத்திற்கு பார்த்தியப்பட்ட மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவில் ஆடிப்பூர வளைகாப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனைகள் நடைபெற்றது.

    பின்னர் அதைத் தொடர்ந்து தனுஷ்கோடியாபுரம் தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோவில் முன்பில் இருந்து சீனிவாச பெருமாள் தாயார்களுடன் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து ஊர்வலமாக மாலை அம்மன் கோவிலுக்கு வந்தடைந்தார். ஊர்வலத்தில் வந்த பக்தர்கள் அனைவரும் மாங்கல்ய பொருள்கள் கையில் ஏந்தி வந்திருந்தனர். அதனைத் தொடர்ந்து அம்பாளுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது.

    விழாவில் வணிக வைசிய சங்க தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்க மாரியப்பன், முன்னாள் தலைவர் பூவலிங்கம், தலைமை ஆசிரியர் மாரியப்பன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் பரமசிவம், முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் ரத்தினவேல், இணைச் செயலாளர் காளிதாஸ், ஆலோசகர் மாதவராஜ், மாரிக்கண்ணன், முனிய செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வளைகாப்பு விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் மாங்கல்ய பொருட்கள் மற்றும் 5 வகை பிரசாதம் வழங்கப்பட்டது.

    ×