என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • தயாரிப்பு விபரம் இல்லாத பேக்கரி பொருட்கள் அழிக்கப்பட்டது.
    • அபராத தொகை விதிக்க மாவட்ட நியமன அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் உத்தரவின்படி, நாகப்பட்டினம், வெளி ப்பாளையம், மருத்துவமனை சாலையில் அமைந்துள்ள பேக்கரியில் பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது நிறுவனம் சுகாதாரமான முறையில் பேக்கரியை பராமரிக்க வில்லை.

    உணவு தயாரிப்பு இடம் சுகாதாரமற்று இருந்தது தெரிய வந்தது.

    ஆனால் உணவு பாதுகாப்புத்துறை உரிமம் பெற்றிருந்தனர்.

    பின்னர் அங்கிருந்த காலாவதியான மற்றும் தயாரிப்பு விபரம் இல்லாத பேக்கரி பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகள் கைப்பற்றப்பட்டு, பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.

    ஒருவார காலத்திற்குள் உணவு தயாரிக்கும் இடம் சுத்தப்படுத்தி, குறைகள் சரிசெய்து, வெள்ளையடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    சுகாதாரக் கேட்டிற்கான அபராதத் தொகை விதிக்க மாவட்ட நியமன அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    • வெயிலோடு சேர்ந்து மிதமான மழை பெய்தது.
    • இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் கடந்த வாரம் முழுவதும் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் சில நாட்களாக வெயில் இல்லாமல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    இந்த நிலையில் நாகையில் இன்று காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில், வெயிலோடு சேர்ந்து மிதமான மழையும் பெய்தது.

    நாகை, நாகூர், சிக்கல், புத்தூர், வடகுடி, தெத்தி, மேலநாகூர், பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் வெயிலோடு சேர்ந்து பெய்த மிதமான மழை காரணமாக ரம்மியமான சூழல் நிலவியது.

    கனமழை ஓய்ந்தாலும் நாகையில் வெயிலோடு சேர்ந்து மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • பொதுமக்களுக்கு விபத்து காலங்களில் முதலுதவி அளிக்கப்படுவது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
    • வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவின் பேரில் 108 அவசர கால விபத்து முதலுதவி செயல் விளக்கம் அளிப்பது தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் மேலாளர்கள் சாம் சுந்தர், சவுரிராஜன் தலைமையில் நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சாலை விபத்தில் முதலுதவி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.

    இதில் ஓட்டுனர்கள் மற்றும் பொது மக்களுக்கு விபத்து காலங்களில் முதலுதவி அளிக்கப்படுவது குறித்து செய்முறை செயல் விளக்கத்துடன் செய்து காண்பிக்கப்பட்டது.

    இதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு, அனைத்து ஓட்டுநர் பயிற்சி உரிமையாளர்களும் வாகன ஓட்டுனர்களும் மற்றும் பொதுமக்களுக்கு கலந்து கொண்டனர்.

    • திருப்பூண்டியில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையம் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • இறால் உற்பத்தியாளர்களுக்கு ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும்

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த திருப்பூண்டியில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு விவசாயிகளுக்கான"ஆண்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ்"கடல்பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (எம்பிடா), தேசிய நிலையான நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையம் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமில் 100 மேற்பட்ட இறால் வளர்ப்போர் கலந்து கொண்டனர்.

    நீர்வாழ் உயிரின வளர்ப்பு விவசாயிகளுக்கு ஆண்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ்" பாதிப்புகள் மற்றும் இந்திய கடல் உணவு ஏற்றுமதியில் அதன் தாக்கம் குறித்து வல்லுனர்களைக் கொண்டு காணொளி வாயிலாக எடுத்துரைக்கப்பட்டது.

    இதில் கலந்து கொண்ட இறால் வளர்க்கும் விவசாயிகள் தமிழ்நாட்டில் அன்னிய செலாவணியை ஈட்டி தரும் தங்களுக்கு மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசல் மானியம் வழங்குவது போல் இறால் உற்பத்தியாளர்களுக்கும் டீசல் மற்றும் மின்சாரம் மானியமாக வழங்க வேண்டும்.

    இயற்கை பேரிடரில் இறால் உற்பத்தி செய்யும் விவசாயிகளையும் இணைக்க வேண்டும்.

    இறால் உற்பத்தியாளர்களுக்கு ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் எம்பிடா மண்டல துணை இயக்குநர் நரேஷ் விஷ்ணு தம்படா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்,

    அதனை தொடர்ந்து சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலகண்ணன்,

    நாகை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஜெயராஜ், நாகை மாவட்ட இறால் வளர்ப்போர் கூட்டமைப்பு தலைவர் சிதம்பரம் மற்றும் செயலாளர் சிவசங்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தலைஞாயிறு அரிச்சந்திராநதியின் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது.
    • விவசாயிகள் களப்பணியால் முற்றிலும் அகற்றினார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம், மணக்குடி ஊராட்சியின் வழியாக பாயும் அரிச்சந்திரா நதியின் காடந்தேத்தி முதல் பிரிஞ்சுமூலை வரையில் ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை விவசாயிகள்மூன்று நாட்கள் களப்பணியால் முற்றிலும் அகற்றினார்.

    இக்களப்பணியில் விவசாயிகள்இராசேந்திரன் தலைமையிலும், முருகவேல் ஆதிகேசவன் ஜெயவேல், ஆக்கிரமித்து இருந்த ஆகாயத் தாமரை அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.

    ஆகாயத்தாமரையே தானாகவே முன்வந்து அகற்றிய விவசாயிகளை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

    • இரவு நேரங்களில் அடிக்கடி தொடர் மின் தடை ஏற்படுகிறது.
    • மின் பாதையில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளது

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமரு கல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதிக்கு திட்டச்சேரி துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி தொடர் மின் தடை ஏற்படுகிறது.

    பல மணி நேரம் தொடரும் மின் தடையால் பள்ளி,கல்லூரி மாணவ-மாணவியர்கள்,முதியவர்கள், நோயாளிகள், பொதுமக்கள் என பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    குத்தாலத்திலிருந்து பனங்குடி வரை காரை மேடு வழியாக மின் விநியோகம் செய்யப்படும் மின் பாதையில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து மின்கம்பிகளின் மீது படர்ந்து கிடப்பதால் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாகவும் அதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    • வேதாரணியம் நகராட்சியில் 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன
    • வணிக உரிமம் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சியில் வணிகம் உரிமம் குறித்து கடைகளில் அதிகாரிகள் சோதனையிட்டனர் வேதாரணியம் நகராட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

    இந்த கடைகளில் நகராட்சியின் வணிக உரிமம் பெற்றுள்ளதா என நகராட்சி ஆணையர் அப்துல் ஹாரிஸ் சுகாதார அலுவலர் ராஜாராமன் சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கடைகடையாக சோதனை நடத்தினர் உரிமம் பெறாத வணிகர்கள் புகைப்படம் குடும்ப அட்டை ஜிஎஸ்டி நம்பர் பான் கார்டு ஆதார் அட்டை சொத்து வரி வசதி விசிட்டிங் கார்டு உள்ளிட்ட 7 ஆவணங்களுடன் http://tnUrban epay th.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ரூ.7 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டது.
    • மீனவ தினத்தை முன்னிட்டு மீனவ கிராமங்களுக்கான கபடி போட்டி நடந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகையில் தமிழக மீன்வளத்துறை சார்பில் உலக மீனவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.

    நாகை துறைமுகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள், மற்றும் 27 கிராம மீனவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் கல்லார், நாகூர், சாமந்தான் பேட்டை, செருதூர், ஆற்காட்டுதுறை வேதாரண்யம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பைபர் படகு மீனவர்களுக்கு 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான அதிக ஒளி வீச்சும் டார்ச் லைட், மழைக்கான கோட்,மற்றும் துறைமுகத்தில் பணியாற்றும் மீனவ பெண் பயனாளிகளுக்கு புடவை உள்ளிட்ட அலுமினிய கூடைகளை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் வழங்கினர்.

    பின்னர் நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், கடலுக்கு செல்லும் மீனவர்கள் அனைவரும் உயிரை பணயம் வைத்து தான் மீன்பிடி தொழில் செய்கிறார்கள். காற்று, மழை, சுனாமி, போன்ற பேரழிவுகள் வரும் என்று தெரிந்தும் அவர்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் கடலுக்கு செல்லும் மீனவர்கள் அனைவருக்கும் தனது மீனவர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டார்.

    மீனவர் தினத்தை முன்னிட்டு மீனவ கிராமங்களுக்கான கபடி போட்டி நடைப்பெற்றது.

    • வடகிழக்கு பருவமழையால் விளக்கு தயாரிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
    • வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தாணிகோட்டகம் செட்டி புலம், செம்போடை ,பிராந்தியங்கரை உள்ளிட்ட பகுதிகளில் கார்த்திகை தீபத் திருவிழா ஒட்டி அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கார்த்திகை தீபத் திருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் நூற்றுக்கணக்கான மண் பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் ஆனால் வடகிழக்கு பருவ மழையால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன இதுவரை தயாரித்து உள்ள அகல்விளக்குகள்வீட்டின் உள்ளே காயவைத்து வருகின்றனர்.

    வரும் நாட்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கும் நிலையில் விளக்குகள் தயாரிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது மண்பாண்ட தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது

    எனவே தமிழ்நாடு அரசு மண்பாண்ட தொழிலாளர் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

    • கன்னியாகுமரியில் மாநாட்டு பிரசார மோட்டார் சைக்கிள் வாகன பேரணியை தொடங்கி வைத்தார்.
    • வழிநெடுகிலும் மேளதாளங்கள் முழங்க, பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந்தேதி சேலத்தில் தி.மு.க. இளைஞரணி மாநாடு இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

    இதனையொட்டி, அவர் கன்னியாகுமரியில் மாநாட்டு பிரசார மோட்டார் சைக்கிள் வாகன பேரணியை கடந்த வாரம் தொடங்கி வைத்தார்.

    வேதாரண்யம் பகுதிக்கு வந்த தி.மு.க. இளைஞரணி மோட்டார் சைக்கிள் பிரசார குழுவினருக்கு நாகை மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவருான கவுதமன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிகழ்வில் வேதாரண்யம் நகர்மன்ற தலைவரும், தி.மு.க. நகர செயலாளருமான புகழேந்தி, மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம், பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன், தலைஞாயிறு பேரூர் செயலாளர் சுப்ரமணியன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் துரை ராசு, மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் அசோக்குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தாமோதரன், மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ரவிச்சந்திரன், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பேரணி குழுவினருக்கு வழிநெடுகிலும் மேளதா ளங்கள் முழங்க, பட்டாசு வெடிக்கப்பட்டும், இனிப்பு வழங்கியும், மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்க ப்பட்டது.

    • 15-க்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் ரூ.50 லட்சம் வரை பெற்றுள்ளனர்.
    • பணத்தை திருப்பி தராமல் மக்களை ஏமாற்றி வந்துள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் பால்பண்ணைச்சேரி ஆட்டோ சிட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 33).

    திருச்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் நாராயணசாமி மற்றும் அவரது மருமகன் தனபால் ஆகியோர் சேர்ந்து ஓஎன்ஜிசியில் வேலை வாங்கித் தருவதாக கூறி வலிவலம், வேதாரண்யம் மருதூர், குருக்கத்தி, கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 15-க்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் ரூ. 50 லட்சம் வரை பெற்றுள்ளனர்.

    ஆனால் யாருக்கும் வேலை வாங்கி தரவில்லை.

    மேலும் பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

    இதனால் பாதிக்கப்பட்ட வர்கள் நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.

    இது குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்சிங் உத்தர விட்டார்.

    இதைத் தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிச்சாமி அறிவுருத்தலின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் உட்ரோ வில்சன் குற்றவா ளிகள் ராஜலட்சுமி, நாராயணசாமி தனபால் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    நாகை அருகே ஓஎன்ஜிசியில் வேலை வாங்கித் தருவதாக கூறி இளம் பெண் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • யானைக்கு பயந்து வள்ளி முருகனை சந்திப்பதும் அடியார்களால் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.
    • வேதமந்திரங்கள் முழங்க யாகம் வளர்க்கப்பட்டு மாங்கல்ய தாரண நிகழ்ச்சி நடந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 13-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வள்ளி- முருகன் திருமணம் சிறப்பாக நடந்தது.

    இதனை முன்னிட்டு குறவள்ளி முருகனை சந்திப்பதும், அப்போது விநாயகர் பெருமான் யானை ரூபத்தில் வந்து வள்ளியை பயமுறுத்துவதும், பின் முருகனை வள்ளி அடைக்கலமாகி திருமண காட்சி நடைபெறுவதும் நடைபெற்றது.

    யானை அழைத்து வரப்பட்டு யானை பிளிருவதும் அதனை அடுத்து யானைக்கு பயந்து வள்ளி முருகனை சந்திப்பதும் அடியார்களால் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க யாகம் வளர்க்கப்பட்டு மாங்கல்யதாரணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதனை அடுத்து மாலை மாற்றும் வைபவம் நடைபெற்று, தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×