search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்
    X

    அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்.

    அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்

    • வடகிழக்கு பருவமழையால் விளக்கு தயாரிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
    • வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தாணிகோட்டகம் செட்டி புலம், செம்போடை ,பிராந்தியங்கரை உள்ளிட்ட பகுதிகளில் கார்த்திகை தீபத் திருவிழா ஒட்டி அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கார்த்திகை தீபத் திருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் நூற்றுக்கணக்கான மண் பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் ஆனால் வடகிழக்கு பருவ மழையால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன இதுவரை தயாரித்து உள்ள அகல்விளக்குகள்வீட்டின் உள்ளே காயவைத்து வருகின்றனர்.

    வரும் நாட்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கும் நிலையில் விளக்குகள் தயாரிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது மண்பாண்ட தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது

    எனவே தமிழ்நாடு அரசு மண்பாண்ட தொழிலாளர் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×