என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • புயல் கரையை கடக்கும்போது கடல் அலைகள் சீற்றமாக காணப்படும்.

    வேதாரண்யம்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக உருவாகும். எனவே, மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனை தொடர்ந்து, நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை, ஆறுக்காட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று 4-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. இதனால் 1,500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், புயல் கரையை கடக்கும்போது கடல் அலைகள் சீற்றமாக காணப்படும். அப்போது படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடையாமல் இருப்பதற்ககாக கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை டிராக்டர் மூலம் தொலைவில் பாதுகாப்பாக இழுத்து வைக்கும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மீன்பிடிவலைகள், உபகரணங்களையும் பாதுகாப்பாக வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    • புனிதநீர் 1008 சங்குகளில் நிரப்பப்பட்டு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது.
    • வண்ண மலர்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதார ண்யேஸ்வர சுவாமி திருக்கோவில் மூர்த்தி தளம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி தந்த இடம்.

    வேதங்கள் பூஜை செய்து மூடி கிடந்த கோவில் திருக்கதவை அப்பரும் சம்பந்தரும் தேவாரப் பதிகங்கள் பாடி கதவு திறந்த வரலாற்று சிறப்பு பெற்ற இடம் இந்த கோவிலில் கார்த்திகை 2-வது சோம வார்த்தை முன்னிட்டு நேற்று மாலை புனித நீர் அடங்கிய கலசங்கள் மற்றும் 1008 சங்குகள் புனித நீரால் நிரப்பப்பட்டு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது பின்பு புனித நீர் அடங்கிய குடங்கள் சங்குகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    வேதாரண்யம் விளக்கு அழகு என்ற பெருமைக்கேற்ப சாமி சன்னதியில் உள்ள தோரண விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளிமயமாக காட்சியளித்தது பின்பு வண்ண மலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர்.

    விழா ஏற்பாடுகளை உபயதாரர் மற்றும் கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தனர்.

    • சிங்காரவேலவர் வள்ளி- தெய்வானையுடன் வலம் வரும் நிகழ்வு நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிக்கல் சிங்கார வேலவர் ஆலயத்தில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு மகா தீபம் ஏற்றும் விழா நடைபெற்றது.

    சிங்காரவேலவருக்கு பதினாறு வகையான திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் தீபாரா தனையும் நடைபெற்றது.

    ஆலய உட்பிரகாரத்தில் சிங்காரவேலவர் வள்ளி-தெய்வானையுடனும், தியாகராஜர், பெருமாள் உட்பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து கோவில் வாசலில் சொக்கபனை தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • மாணிக்கவாசகருக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • கோவிலை சுற்றி 4 வீதிகளில் தேவாரங்கள் பாடிக்கொண்டு கிரிவலம் வந்தனர்.

    வேதாரண்யம்:

    கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு வேதாரண்யம் பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் உள்ள வனதுர்க்கை அம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை அம்மனுக்கு புனிதநீர் அடங்கிய கலசங்கள் வைத்து யாகம் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர், புனிதநீர் அடங்கிய குடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை காண்பி க்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    இதேபோல், வேதா ரண்யம் மேலவீதியில் அமைந்துள்ள மாணிக்க வாசகர் மடத்தில் உள்ள மாணிக்கவாசகருக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களை பாடி மாணிக்கவாசகரை வழிபட்டனர்.

    பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாணிக்கவாசகர் மடம் தர்மகர்த்தா, யாழ்ப்பாணம் வரணி ஆதீனம், செவந்திநாத பண்டார சன்னதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல், வேதாரண்யம் அடுத்த வேம்பதேவன்காடு தெற்கு பகுதியில் அமைந்துள்ள மவுன சித்தர் பீடத்தில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று.

    மகானுக்கு பிடித்த பலகாரங்கள், பொங்கல் வைத்து படையல் இடப்பட்டது. பின்னர், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சித்தர் பீடத்துக்கு வந்து தியானம் மேற்கொண்டு வழிபட்டனர்.

    பவுர்ணமியை முன்னிட்டு கடல் அன்னைக்கு தீப ஆரத்தி எடுத்து பக்தர்கள் வழிபட்டனர்.

    மேலும், பக்தர் ராஜேந்திரன் தலைமையில் ஏராளமான பக்தர்கள் கோவிலை சுற்றி 4 வீதிகளில் தேவாரங்கள் பாடிக்கொண்டு கிரிவலம் வந்தனர்.

    • 25 அடி உயரத்தில் சொக்கப்பனை கட்டி அதனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
    • ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது.

    வேதங்கள் பூசை செய்து மூடிக்கிடந்த கதவை அப்பரும் சம்பந்தரும் தேவார பதிகங்கள் பாடி திறந்ததாக வரலாற்று சிறப்புடைய கோயில் அகஸ்திய மாமுனிவருக்கு சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி தந்த இடம் ஆகும்.

    இந்த கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கல்யாணசுந்தரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்று கோவில் வளாகத்தில் பனை ஓலையால் 25 அடி உயரத்தில் சொக்கப்பனை கட்டி அதற்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்று சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • பாசஞ்சர் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும்.
    • நாகூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் தகவல் மையம் அமைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் தர்கா நிர்வாகம் சார்பில் திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்ட மேலாளர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாகூர் ஆண்டவர் பெரிய கந்தூரி விழா வருகிற 14-ந்தேதி தொடங்கி புனித கொடி ஏற்றத்துடன் தொடங்கி

    27. 12. 2023 தேதி புதன்கிழமை புனித கொடி இறக்கத்துடன் நிறைவடைய உள்ளது.

    இதில் முக்கிய நிகழ்வாக 23-ம் தேதி சனிக்கிழமை இரவு புனித சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு 24 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ரவுலாவஷரீபில் சந்தனம் பூசும் வைபவம் நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    ஆகவே ரெயில் மூலம் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் நாகூர், திருச்சி, சென்னை, பெங்களூர், கொல்லம், ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கவும், காரைக்கால் - சென்னை, காரைக்கால் - எர்ணாகுளம், மன்னார்குடி - சென்னை ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களும், நாகூர் வழியாக பெங்களூரு, திருச்சி மற்றும் தஞ்சாவூர் செல்லும் பாசஞ்சர் ரயில்களும் கூடுதலாக பெட்டி இணைக்க வேண்டும்.

    மேலும் ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக அதிக அளவில்கழிவறை வசதி குடிநீர் வசதி ஏற்படுத்திடவும் நாகூர் ரயில் நிலையத்தில் பயணிகள் தகவல் மையம் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • மூலவருக்கு மஞ்சள், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    கார்த்திகை தீபதிருநாளில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

    அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் முருகனின் ஆதிபடை வீடான நாகை மாவட்டம் எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

    முன்னதாக மூலவருக்கு மஞ்சள் பொடி பால் தயிர் 14 வகையான திரவிய பொடிகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது தொடர்ந்து தேரடியில் அருகே அமைத்திருந்த சொக்கப்பணைக்கு மஞ்சள் பொடி திரவிய பொடி பால் மற்றும் புனித கலச நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது தொடர்ந்து ஏற்றி வந்த பரணி தீபம் கொண்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து முருகப்பெ ருமானுக்கு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • நேற்று மதியம் திடீரென முனியப்பன் ஏரி அருகே விழுந்து கிடந்தது.
    • தகவலறிந்த டாக்டர்கள் உடனடியாக குதிரையை மீட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு வனவிலங்கு சரணாலயத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புள்ளிமான், குரங்குகள், மட்ட குதிரைகள் முயல், நரி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன.

    இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையோரமாக கால்முறிந்த நிலையில் ஒரு ஆண் மட்ட குதிரை ஒன்று கிடந்தது. இதுகுறித்து வனச்சரகர் அலுவலக அயூப்கானுக்கு தகவல் கிடைத்தது.

    அதனை தொடர்ந்து, அந்த குதிரை பிடிக்கப்பட்டு வனத்துறையினர், கால்நடை மருத்துவர் சிவசூரியன் மற்றும் மருத்துவ குழுவினர் குதிரைக்கு சிகிச்சை அளித்தனர். இந்த குதிரைக்கு ஒரு வாரம் சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து வனத்துறையினர் தொடர்ந்து மட்ட குதிரைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த குதிரை நேற்று மதியம் திடீரென முனியப்பன் ஏரி அருகே விழுந்து கிடந்தது.

    தகவலறிந்த டாக்டர்கள் உடனடியாக குதிரையை மீட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    • 100-க்கும் மேற்பட்ட நவதானிய உறை பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டு இருந்தது.
    • முடிவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் மேனகா நன்றி கூறினார்.

    வேதாரண்யம்:

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டத்தின் மூலம் வேதாரண்யம் வட்டாரத்தில் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா வட்டார இயக்க மேலாண்மை அலுவ லகத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு வட்டார இயக்க மேலாளர் அம்பு ரோஸ்மேரி தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் இந்திராணி, வேதாரண்யம் வர்த்தக சங்க பொருளாளர் சீனிவாசன், தோப்புத்துறை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தெட்சணமூர்த்தி மற்றும் நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தினர் கலந்து கொண்டனர். விழாவில் மகளிர் குழு உறுப்பினர்கள் தயாரித்த ஊட்டச்சத்து நிறைந்த 100-க்கும் மேற்பட்ட நவதானிய உறை பொருட்கள் காட்சிபடுத்தி வைத்திருந்தனர்.

    பின்பு, ஊட்டச்சத்து தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். முடிவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் மேனகா நன்றி கூறினார்.

    • முகாமில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
    • சஞ்சீவி பெட்டகம் 3 கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமம் அரசு தொடக்கப் பள்ளியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் விஜயகுமார் அறிவுறுத்தலின்படி கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார்.வட்டார மருத்துவ அலுவலர் மணிசுந்தரம் முன்னிலை வகித்தார். முகாமில் இரத்தப் பரிசோதனை, ஈசிஜி பரிசோதனை,

    ஸ்கேன்,பொது மருத்துவம்,கண் மருத்து வம்,பல் மருத்துவம்,சித்த மருத்துவம்,யோகா, பிசியோதெரபி, காது மூக்கு தொண்டை மருத்துவம், அறுவை சிகிச்சை,தோல் மருத்துவம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் கலந்துக் கொண்டனர். இதில் 1181 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    முகாமில் மாவட்ட நலக்கல்வியாளர் மணவா ளன்,வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம்,ஊராட்சி துணைத் தலைவர் ஷோபா பாரதி மோகன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாள ர்கள், கட்டுமாவடி -பு றாக் கிராமம் ஜமாத் நிர்வாகிகள்,பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் சித்த மருத்துவம் சார்பில் சஞ்சீவி பெட்டகம் 3 கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டது.

    • சுற்றுவட்டார பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணி நடந்தது.
    • பொதுமக்களுக்கு டெங்கு கொசு பற்றியும், அது பரவாமல் தடுக்கும் வழிமுறைகள் பற்றியும் தெரிவித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் பல்வேறு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    மரைக்கான்சாவடி, தைக்கால் தெரு, ஆற்றங்கரை தெரு, இந்திராநகர், ஆலங்கு டிச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அறிவுறுத்தலின் பேரில் டெங்கு கொசு ஒழிப்பு பணி நடைபெற்றது.

    இந்த பணிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திகா, செயல் அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், அலுவலக உதவியாளர் மாதவன் மற்றும் டெங்கு ஒழிப்பு களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று அங்குள்ள குப்பைகள், தேங்காய் மட்டைகள், டயர்கள், உடைந்த கண்ணாடி, பிளாஸ்டிக் மற்றும் கழிவுப் பொருட்களை அகற்றி கொசு மருந்துகளை தெளித்து பொதுமக்களுக்கு டெங்கு கொசு பற்றியும் அது பரவாமல் தடுக்கும் வழிமுறைகளையும் தெரிவித்தனர்.

    • 350-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பட்டன.
    • சிறந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் வடகரை கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    இம்முகாம் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் விஜயகுமார் உத்தரவின் பேரிலும், உதவி இயக்குனர் அசன் இப்ராஹிம் அறிவு றுத்தலின் பெயரிலும் நடைபெற்றது.

    முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மோகன் தலைமை தாங்கினார்.

    முகாமில் கால்நடை நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்கம், கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.

    இதில் 350-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பட்டன.

    முகாமில் சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் கால்நடை உதவி மருத்து வர்கள் சிவப்பிரியா, முத்துக்குமரன், ஊராட்சி செயலர் பிரகாஷ்குமார், கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஸ்ரீதர் மற்றும் கால்நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×