என் மலர்
நீங்கள் தேடியது "Subsidized price"
- ரூ.85 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்
- கலெக்டர் தகவல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட கலெக் டர் அமர் குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு வேளாண் மைப்பொறியியல் துறை மூலம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி 2021-22 திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் கிராமங்கள் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமங் களில் பவர் டில்லர் (விசை உழுவை எந்திரம்) மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
சிறு, குறு, மகளிர், ஆதிதிரா விடர், பழங்குடியினர் விவசா யிகளுக்கு 50 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீதமும் அதிகபட்சமாக ரூ.85 ஆயிரம் என்ற விதத்தில் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.
மேலும், ஆதிதிராவிடர் மற் றும் பழங்குடியினர் பிரிவு சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானிய தொகை ஒதுக்கீடு பெற்று அவர்களது வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படும்.
மேற்படி மானியம் பெற விரும்பும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-22 கிராமங்கள் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள், திருப்பத்தூர் சிவ சக்தி நகரில் புதுப்பேட்டை சாலையில் உள்ள வேளாண் மைப் பொறியியல் துறை அலு வலகத்தை அணுகி விண்ணப்பத்துடன் சிட்டா அடங்கல் சிறு, குறு விவசாயி சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் ஆவ ணங்களை இணைத்து சமர்ப் பிக்க வேண்டும். மேற்படி மானியம் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வேளாண்மை இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது
- 200 கிலோ என்ற அளவில் 50 சத மானியத்தில் 75 டன்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
கடலூர்:
மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பண்ருட்டி வட்டார விவசாயிகளுக்கு கடப்பாரை, மண்வெட்டி, களைக்கொத்தி, பாண்டுசட்டி போன்ற உபகரண ங்களுடன் வரப்பில் சாகுபடி செய்ய உளுந்து விதைகள், ஜிப்சம், ஜிங்க்சல்பேட், தார்ப்பாய்கள் போன்ற வேளாண்மை இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது என பண்ருட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், ளநடப்பு வருடத்தில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்ட வேளாண்மை துறைக்கான நிதிநிலை அறிக்கையில் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு வேளாண்மை இடுபொருட்கள் மானியத்தில் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பண்ருட்டி வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் கடப்பாரை, மண்வெட்டி, களைக் கொத்தி மற்றும் பாண்டு சட்டி உள்ளிட்ட வேளாண் கருவிகள் கொண்ட தொகுப்புகள் 357 விவசாய குடும்பங்களுக்கு ஒரு தொகுப்பு ரூ.1500 மானியத்தில் வழங்கப்படுகிறது.
மேலும் 622 ஏக்கர் நிலத்தில் வரப்பில் சாகுபடி செய்யக்கூடிய வகையில் உளுந்து விதைகள் மானியத்தில் வழங்கப்படுகிறது. ஜிப்சம் ஒரு ஏக்கருக்கு 200 கிலோ என்ற அளவில் 50 சத மானியத்தில் 75 டன்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 374 ஏக்கர் நிலப்பரப்பில் இடக்கூடிய வகையில் ஏக்கர் ஒன்றுக்கு பத்து கிலோ ஜிங்சல்பேட் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகிறது. 104 தார்பாய்கள் ஒரு தார்ப்பாய் ரூ.830 மானியத்துடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்து பராமரிக்க கூடிய வகையில் பண்ருட்டி வட்டத்தில் 30,000 மரக்கன்றுகள் ஒரு மரக்கன்று ரூ.15 வீதம் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
இதில் தேக்கு, மகாகனி,குமிழ் போன்ற மர வேலைக்கு தகுதியுடைய மரக்கன்றுகளும் வழங்கப்பட்டு வருகிறது. தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி உழவன் செயலில் பதிவு செய்து பண்ருட்டி வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய விலையில் பெற்று பயனடைய பண்ருட்டி வேளாண்மை உதவி இயக்குனர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.
- மத்திய, மாநில அரசுகள் சார்பில் பழ வகை சாகுபடிக்கு ஏராளமான மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
- மாம்பழம் காய்ப்புக்கு வரும் வரை ஊடுபயிராக காய்கறி பயிர்களை சாகுபடி செய்யலாம்.
மடத்துக்குளம்:
மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில் மா ஒட்டுச்செடிகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.இது குறித்து மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கூறியதாவது:-
முக்கனிகளில் முதலிடத்திலுள்ள மாம்பழம் உற்பத்தி 55 சதவீதம் இந்தியாவில் உற்பத்தியாகிறது. மத்திய, மாநில அரசுகள் சார்பில் பழ வகை சாகுபடிக்கு ஏராளமான மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.மா சாகுபடிக்கு நல்ல வடிகாலுடன் கூடிய செம்மண் ஏற்றதாகும். ஜூலை முதல் டிசம்பர் வரை மா சாகுபடிக்கு ஏற்ற பருவமாகும்.தமிழகத்தில் நீலம், பெங்களூரா, நடுச்சாலை, செந்தூரம், அல்போன்சா, ஹி மாயூதீன், மல்கோவா ஆகிய ரகங்கள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.
மா சாகுபடிக்கு முன் நிலத்தை நன்கு உழவு செய்து தலா ஒரு மீட்டர் நீளம், அகலம் மற்றும் ஆழம் தோண்டி குழி ஒன்றுக்கு 10 கிலோ தொழு உரம் மற்றும் மேல் மண் உரம் நன்கு கலந்து குழியின் முக்கால் பாகம் வரை மூடி ஒட்டுக்கட்டிய செடிகளை நட வேண்டும்.செடிக்கு செடி, 5 மீட்டர் முதல் 10 மீட்டர் வரை அடர் நடவு முறையில் அல்போன்சா, பங்கனபள்ளி மல்லிகா போன்ற ரகங்கள் நடலாம். மாம்பழம் காய்ப்புக்கு வரும் வரை ஊடுபயிராக காய்கறி பயிர்களை சாகுபடி செய்யலாம்.தழை, மணி சாம்பல் சத்து கொண்ட உரங்களை செப்டம்பர் , அக்டோபர் மாதங்களில் இட வேண்டும். மூன்று ஆண்டுக்கு ஒரு முறை கவாத்து செய்ய வேண்டும்.
மடத்துக்குளம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களிலுள்ள விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்தில் மா செடிகள் வழங்கப்படுகிறது.
சிட்டா, அடங்கல், உரிமைச் சான்று, ரேஷன் கார்டு நகல், ஆதார் நகல், வங்கி கணக்கு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2 ஆகியவற்றுடன் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.மேலும் விபரங்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலர்கள், தாமோதரன் 96598 38787; நித்யராஜ் 63821 29721 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்தார்.
- புதிய ரகமான விஜிடி 1 எனப்படும் வைகை டேம் 1 நெல் ரகமானது மிகுந்த சிறப்பு பெற்றது.
- அரவைத் திறன் 66 சதவீதம் உள்ளதால் இந்த ரகம் நெல் விவசாயிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
மடத்துக்குளம்:
மடத்துக்குளம் வட்டாரத்தில் நெல் பிரதான பயிராக பயிரிடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் சுமார் 7000 ஏக்கர் பரப்பில் நெல் அரிசிக்காகவும், விதைக்காகவும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நீண்ட காலங்களாக ஒரு போகம் மட்டுமே பயிரிடப்பட்டு வந்த நெல் கடந்த 3 வருடங்களாக குறுவை மற்றும் சம்பா உள்பட 3 பருவங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது. பொதுவாக நெல்லில் குறுகிய கால ரகங்கள் மற்றும் நடுத்தர வயது, நீண்ட கால வயதுடைய ரகங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. புதிய ரகமான விஜிடி 1 எனப்படும் வைகை டேம் 1 நெல் ரகமானது மிகுந்த சிறப்பு பெற்றது. ஏடிடி43 மற்றும் பிரியாணி அரிசி என அழைக்கப்படும் சீரக சம்பா ரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட இந்த நெல் ரகமானது 2019-ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் நெல் ஆராய்ச்சி நிலையம் (வைகை டேம்) ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
சுமார் 130 நாட்கள் வயதுடைய இந்த ரகமானது சம்பா மற்றும் பின் சம்பா பருவத்திற்கு மிகவும் ஏற்ற ரகமாகும். மகசூல் சராசரியாக ஏக்கருக்கு 2,350 கிலோ வரை கிடைக்கிறது. இந்த மகசூல் சீரக சம்பா ரகத்தை விட 33 சதவீதம் அதிகமாகும். அரவைத் திறன் 66 சதவீதம் உள்ளதால் இந்த ரகம் நெல் விவசாயிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ரகத்தின் அரிசி, பிரியாணி மற்றும் குஸ்கா செய்வதற்கு உகந்தது.
அத்துடன் இந்த ரகமானது இலைச்சுருட்டுப் புழு, குலை நோய் மற்றும் செம்புள்ளி நோய் ஆகியவற்றுக்கு மிதமான எதிர்ப்புத்திறன் உடையது. கடந்த குறுவை சாகுபடிக்காக சோழமாதேவி விவசாயிகள் மடத்துக்குளம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த விஜிடி 1 எனப்படும் இந்த ரக விதைகளைக் கொண்டு சாகுபடி செய்தனர். அந்த விவசாயிகள் இது சீரக சம்பா ரகத்திற்கு மாற்றாக இருப்பதாக தங்களது திருப்தியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர்.
மடத்துக்குளம் வட்டாரம் பாப்பான்குளத்தில் அமைந்துள்ள அரசு விதைப்பண்ணையில் விஜிடி1 ரக வல்லுனர் விதையைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட ஆதார நிலை 1 விதைகள் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே மடத்துக்குளம் வட்டாரத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த விதைகளைப்பெற்று பயன்பெறுமாறு மடத்துக்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.
- பயறு வகைகள் கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரையிலும் விலைக்கு வாங்க வேண்டியுள்ளது.
- நியாய விலைக் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்ட நிலம் ஒதுக்கீடு செய்து தரவேண்டும்.
திருப்பூர்:
திருப்பூா் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா்க்கும் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டத்துக்கு வருவாய் கோட்டாட்சியா் பண்டரிநாதன் தலைமை வகித்தாா்.இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஊத்துக்குளி வட்டாரச் செயலாளா் கொளந்தசாமி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- ஊத்துக்குளி, அவிநாசி வட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மானாவாரி சோளவிதைப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விதைப்புக்காக நிகழாண்டு தனியாா் விற்பனை நிலையங்களில் விதைசோளம் கிலோ ரூ.60 முதல் ரூ.85 வரையிலும், பயறு வகைகள் கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரையிலும் விலைக்கு வாங்க வேண்டியுள்ளது.தற்போது டீசல் விலை அதிகரித்துள்ளதால் டிராக்டா்களுக்கான வாடகை கட்டணமும் அதிகரித்து விவசாயிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனா்.ஆகவே, மானாவாரி விதைப்புக்காக வேளாண் துறை மூலமாக விதைசோளம், பயறு வகைகளை மானிய விலையில் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊத்துக்குளி பேரூராட்சி 7 -வது வாா்டு உறுப்பினா் கு.சரஸ்வதி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: -ஊத்துக்குளி டவுனில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலமாக இரு நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.இந்த இரு கடைகளும் ஊத்துக்குளி பேரூராட்சிக்கு சொந்தமான வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகின்றன.ஆகவே நியாய விலைக் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்ட நிலம் ஒதுக்கீடு செய்து தரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்கத்தின் சாா்பில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- பி.ஏ.பி., பாசனத் திட்டத்தில் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சுமாா் 4 லட்சம் ஏக்கா் விவசாய நிலங்களுக்கு ஒரு மடைவிட்டு ஒரு மடை தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
அதிலும் திருப்பூா், பல்லடம், காங்கயம் போன்ற பகுதிகளுக்கு தண்ணீா் முறையாக வருவதில்லை. இது தொடா்பாக அப்பகுதி விவசாயிகள் ஏராளமான மனுக்களை கொடுத்தும் பலனளிக்கவில்லை.இந்நிலையில், பிஏபி. திட்டத்தில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீா் கொண்டு செல்ல அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதனால் பி.ஏ.பி. பாசன விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.ஆகவே, விவசாயிகளின் நலன் கருதி இத்திட்டத்துக்கு போடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில், வட்டாட்சியா்கள், வருவாய்த் துறை அதிகாரிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.