என் மலர்
நாகப்பட்டினம்
- அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
- பிரசவ காலத்தில் மூச்சு பயிற்சியில் ஈடுபட்டால் உடலும், மனமும், குழந்தையும் ஆரோக்கியத்துடன் பிறக்க வழிவகை செய்யும்.
நாகப்பட்டினம்:
நாகையில் உடலும் மனமும் ஆரோக்கியம் பெற ஒரே நேரத்தில் 50 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி;
காய்கறி, கீரை, பழங்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துள்ள உணவு பொருட்களும் வழங்கப்பட்டது
நாகை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமில் ஒரே நேரத்தில் 50 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
பிரசவ காலத்தில் யோகா உள்ளிட்ட மூச்சு பயிற்சியில் ஈடுபட்டால் உடலும் மனமும் குழந்தையும் ஆரோக்கியத்துடன் பிறக்க வழிவகை செய்யும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து 52- கர்ப்பிணி தாய்மார்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு திருமருகல் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள் வழங்கப்பட்டது.
- மாணவ- மாணவிகளுக்கு ரூ. 3 கோடியே 75 லட்சம் மதிப்பிலான மிதிவண்டிகளை வழங்கினார்.
- ஏழைகள் இருக்கும் வரை கருணாநிதி கொண்டுவந்த இலவசங்கள் இருக்கும்.
நாகப்பட்டினம்:
நாகை மகளிர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 7381 மாணவ மாணவிகளுக்கு ரூ.3 கோடியே 75 லட்சம் மதிப்பிலான மிதி வண்டிகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து நாகை சாமந்தான் பேட்டை மீனவ கிராமத்தில், நிரந்தர வீட்டிற்கான பட்டாக்களை அமைச்சர் வழங்கினார்.
அப்போது பேசிய அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், ஏழைகள் இருக்கும் வரை கருணாநிதி கொண்டுவந்த இலவசங்கள் இருக்கும்.
அவர் கொண்டுவந்த இலவச கல்வியில் படித்துதான் நான் தற்போது அமைச்சராக இருக்கிறேன் என்றார்.
நிகழ்ச்சியில் நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தமிழக தாட்கோ தலைவர் மதிவாணன், எம்.எல்.ஏ.க்கள் ஷாநவாஸ், நாகை மாலி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- திடீரென திருப்பத்தில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக அருள்தாஸ் மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டி மீது மோதியது.
- அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு ெகாண்டு சென்றதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழையூர் நாடார் தெருவை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 55).
துணை ராணுவபடையில் போலீசாக வேலைபார்த்து ஓய்பெற்றவர்.
இவர் வீட்டில் இருந்து வேளாங்கண்ணிக்கு மோட்டார் சைக்கிளில் கிழக்குகடற்கரை சாலையில் சென்றபோது காரைநகர் பகுதியில் முன்னாள் ஸ்கூட்டியில் சென்றவர் திடீரென திருப்பத்தில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக அருள்தாஸ் மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டி மீது மோதியது.
இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி அருள்தாஸ் பரிதாபமாக உயரிழந்தார்.
இது குறித்து கீழையூர் போல் சார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- தங்கம் மற்றும் வெள்ளி மீன்களை சிவவாத்தியங்கள் முழங்க சிவனடியார்கள் ஊர்வலமாக கடற்கரைக்கு எடுத்து வந்தனர்.
- படகு மூலம் நடு கடலுக்கு சென்ற சிவ பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளி மீன்களை கடலில் விட்டு பிடித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார்நகர் மீனவ குலத்தில் பிறந்த அதிபத்த நாயனார் சிவபெருமானிடம் பக்தி கொண்டு தான் பிடிக்கும் மீனை தினமும் சுவாமிக்காக கடலில் விடுவது வழக்கம்.
இவரது பக்தியை சோதித்த சிவபெருமான் இவரது வலையில் தங்கமீன் ஒன்றை கிடைக்கும்படி செய்தார்.
அதிபத்தநாயனார் அம்மீனையும் சிவபெருமானுக்காக வேண்டிக்கொண்டு கடலில் விட்டார்.
அதிபத்தநாயனாரின் பக்தியை மெச்சிக்கும் விழா நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் நடைபெறுவது வழக்கம்.
தங்க மீன் படைக்கும் விழா நாகப்பட்டினம் நம்பியார் நகர் கடற்கரையில் நடைபெற்றது.
நம்பியார் நகர் புதிய ஒளி மாரியம்மன் ஆலயத்தில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி மீன்களை சிவவாத்தியங்கள் முழங்க சிவனடியார்கள் ஊர்வலமாக கடற்கரைக்கு எடுத்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து படகு மூலம் நடு கடலுக்கு சென்ற சிவ பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளி மீன்களை கடலில் விட்டு பிடித்தனர்.
மீன்களுடன் கரை திரும்பிய சிவனடியார்கள் கடற்கரையில் எழுந்தருளிய சிவபெருமானுக்கு அதிபத்தநாயனார் தங்கம் மற்றும் வெள்ளி மீன்களை வைத்து படையல் இடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சிவ வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது.
- மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
- அலங்கரிக்கப்பட்ட அய்யனாருக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டிணம் மாவட்டம் திருப்பூண்டியை அடுத்த மகிழி கிராமத்தில் பழமை வாய்ந்தரீ பூர்ணாம்பிகை புஷ்கலா அம்பிகை சமேத மகா காராள சேவுக அய்யனார் கோவில் அமைந்துள்ளது.
இக் கோவிலில் ஆவணி மாத, ஆண்டு திருவிழாவை முன்னிட்டு சிறப்பு மஹா ஹாமம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
யாகத்தில் உலக நன்மை வேண்டியும், உலக அமைதிக்காகவும், விவசாயம் செழிக்கவும் போதிய மழை பொழியவும் வேண்டி மஹா யாகம் நடைபெற்றது.
பெரிய யாக குண்டம் அமைத்து 108 மூலிகை பொருட்கள் மற்றும் காய்கள், பழங்கள், கொண்டு மஹா யாகம் நடைபெற்றது.
நிறைவாக யாகம் பூர்ணாகுதியுடன் முடிவடைந்தது. பின்னர் ஹோமத்தில் பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை ஏந்திய சிவாச்சாரியார்கள் வலம் வந்து மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட அய்யனாருக்கு மகாதீபாராதனை நடைபெற்றது.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
- கோவில்பத்து கிராமத்திலுள்ள நெல் சேமிப்பு கிடங்கில் சுமைதூக்கும் வேலை பார்த்து வந்தார்.
- வெள்ளப்பள்ளம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த மண்அள்ளும் எந்திரம் மோதி படுகாயமடைந்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா உம்பளச்சேரியை சேர்ந்தவர் சிவமணி (வயது30).
இவர் வேதாரண்யம் அடுத்த கோவில்பத்து கிராமத்தில் உள்ள நெல் சேமிப்பு கிடங்கில் சுமைதூக்கும்வேலை பார்த்து வந்தார்.
கடந்த 19ம் தேதி பணி முடித்து வெள்ளப் பள்ளம் அருகே இரு சக்கர வாகனத்தில்சென்றபோது எதிரே வந்த மண் அள்ளும் எந்திரம் மோதி படுகாயம் அடைந்தார்.
அவரை மீட்டு நாகை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்பு மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்கசை பெற்று வந்த சிவமணி கடந்த 23ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புகாரின் போரில் வேட்டைக்காரனிருப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவசேனாதிபதி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- சுமார் 5 ஆயிரம் பேர் சுற்று வட்டார பகுதி மக்கள் ஆயக்காரன்புலம் கடைத்தெருவிற்கு வந்து செல்கின்றனர்.
- இந்த 4 ஊராட்சிகளையும் இணைத்து பேரூராட்சியாக ஆயக்காரன்புலத்தை தரம் உயர்த்த வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் ஒன்றியத்தில் ஆயக்காரன்புலம். நிர்வாக வசதிக்காக ஆயக்காரன புலம் முதல் சேத்தி, இரண்டாம் சேத்தி, மூன்றாம்சேத்தி, நான்காம் சேத்தி என 4 ஊராட்சிகளாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இங்கு 20000 மக்கள்தொகை உள்ளது. இங்கு ஆண்கள், பெண்கள் என இரண்டுமேல் நிலைப்பள்ளிகள், 2 உயர்நிலைப்பள்ளிகள், 4 நடுநிலைப்பள்ளிகள், 10 தொடக்கப் பள்ளிகள். ஒரு தனியார்மேல்நிலைப்பள்ளி, களில் 15,000 மாணவர்கள் படிக்கிறார்கள்.
ஒரு கிளை நூலகம், ஒரு கால்நடை மருத்துவமனை, ஒரு கிளை அஞ்சலகம், ஒரு ஆரம்ப சுகாதார நிலையம்.
ஒரு மத்திய கூட்டுறவு வங்கி, ஒரு அரசுடைமை வங்கி, ஒரு வேளாண், தொடக்கநிலை சங்கம்.
புகழ்பெற்ற அய்யனார் கோயில் உள்ளது.
நாள்தோறும் சுமார் 5 ஆயிரம் பேர் சுற்று வட்டார பகுதி மக்கள் ஆயக்காரன்புலம் கடைத்தெருவிற்கு வந்து செல்கின்றனர்.
அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நிறைந்த பகுதியாகும் வேதாரண்யம் தாலுகாவின் வலுவான பொருளாதரத்தையும் பெற்ற இந்த 4 ஊராட்சிகளையும் இணைத்து பேரூராட்சியாக ஆயக்காரன்புலத்தை தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா வரும் 29-ந் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.
- வேளாங்கண்ணி திருவிழாவிற்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து அதிகளவிலான வாகனங்களில் மக்கள் வருவார்கள்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளாங்க ண்ணியில் உலக புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர்இதனால் வேளாங்கண்ணியில் எந்த நேரமும் கூட்டம் அதிகரித்து காணப்படும்.
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வருவாய்த்துறை சார்பில் வட்டாட்சியர் அமுதவிஜய ரங்கன் தலைமையில், வேளாங்கண்ணி பேரூராட்சி செயலர் பொன்னுசாமி முன்னிலையில் காவல்துறை யினர், பேரூராட்சி ஊழியர்கள் உள்ளிட்டோர் உதவியுடன் வேளாங்கண்ணி ஆர்ச் மற்றும் கடற்கரைச் சாலை, கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கொட்டகை உள்ளிட்டவை களை எந்திரம் உதவியுடன் அகற்றினர்.
வேளாங்கண்ணி திருவிழாவிற்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து அதிக அளவிலான வாகனங்களில் மக்கள் வருவார்கள். இதனால் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- நூற்றுக்கணக்கான லாரிகளில் நாள்தோறும் நெல் ஏற்றி இறக்கும் பணி நடைபெறுகிறது.
- லாரிகளிலிருந்து 6 பேட்டரிகள், ஒரு தார்ப்பாய் உள்ளிட்ட ரூ.58 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு.
வேதாரண்யம்:
வேதாரண்யம்தாலுகா கோவில்பத்தில் ஆசியாவில்இரண்டாவது மிகப்பெரியநெல் சேமிப்பு கிடங்கு உள்ளது இங்கிருந்து நூற்றுக்கணக்கான லாரிகளில் நாள்தோறும் நெல் ஏற்றி இறக்கும் பணி நடைபெறுகிறது.
இந்நிலையில் நெல் ஏற்ற வந்தலாரிகள் நெல் சேமிப்பு கிடங்கு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
சம்பவத்தன்று தாதன்தி ருவாசல் பகுதியைச் சேர்ந்த நிதிஷ்குமார் (22), பிரதீப்ராஜ்(18) மற்றும் 2 சிறுவர்கள் என 4 பேரும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 லாரிகளிலிருந்து 6 பேட்டரிகள், ஒரு தார்ப்பாய் உள்ளிட்ட ரூ.58 ஆயிரம்மதிப்புள்ள பொருட்களைதிருடிச் சென்றுள்ளனர்.
புகாரின் போரில் வேட்டைக்காரனிருப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவசேனாதிபதி வழக்கு பதிவு செய்து தாதன் திருவாசல்ப பகுதியைச் சேர்ந்த 4 பேரையும் கைது செய்தனர்.
- தனியார் பள்ளிக்கு நிகராக மாணவர்களுக்கு பெல்ட், சூ, டைரி, ஐடி கார்டு உள்ளிட்ட அனைத்தும் செயல்பட்டு வருகின்றன.
- ஆங்கில எழுத்துக்களை தனித்தன்மையாக எழுதும் பயிற்சியும், கராத்தே பயிற்சியும், பரதநாட்டியம் உள்ளிட்ட பன்முக திறன் வகுப்புகளும் நடத்தப்படுகிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
இப்பள்ளியில் 185 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இப்பள்ளி 1895ம் ஆண்டு துவங்கப்பட்டு 121 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு அனைத்து வசதிகளுடன் இயங்கி வருகிறது.
இப்பள்ளியில் 3 கட்டிடங்களில் வகுப்பறைகள் ஸ்மார்ட் கிளாஸ் வசதியுடனும் இயங்கி வருகிறது.
மேலும் தனியார் பள்ளிக்கு நிகராக மாணவர்களுக்கு பெல்ட், சூ, டைரி, ஐடி கார்டு உள்ளிட்ட அனைத்தும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டு மிடுக்கான தோற்றத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
பள்ளியில் மாணவர்களுக்கு தொலைக்காட்சி வசதியுடன் மொழிப்பாடம், ஆங்கில பேசும் திறன் ஆகியவை கற்பிக்கப்படுகிறது.
மேலும் இப்பள்ளியில் ஆங்கில எழுத்துக்களை தனித்தன்மையாக எழுதும் பயிற்சியும், கராத்தே பயிற்சியும், பரதநாட்டியம் உள்ளிட்ட பன்முக திறன் வகுப்புகளும் நடத்தப்படுகிறது.
இப்பள்ளியில் கழிவறை, குடிநீர் வசதி, கலையரங்கம் என அனைத்து வசதிகளும் மிகச் சிறப்பாக உள்ளன 50 மாணவர்களுடன் இயங்கி வந்த இப்பள்ளியை தற்போது 89 மாணவர்களும், 96 மாணவிகளுடன் 18பேர் படிக்கின்றனர்.தனி நூலகம் உள்ளது.
மாணவர்கள் வெறும் புத்தகப் புழுவாக இருக்காமல் பொது அறிவையும் தெரிந்து கொள்ளும் அளவில் இந்த நூலகம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளி தூய்மைக்கான பள்ளி விருது, மாவட்டத்தில் சிறந்த பள்ளி விருது, சிறந்த பள்ளி மேலாண்மை குழு மற்றும் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது
இப்பள்ளியில் கணினி சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக தட்சிணாமூர்த்தி என்பவர் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கி உள்ளது.இப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பெல்ட், ஷூ, டைரி, அடையாள அட்டை வழங்கும் விழா பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நாகூரான், துணைத்தலைவர் வீரராசு, ஆசிரியைகள் அனிதா, சந்தானமேரி, சத்துணவு பணியாளர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பள்ளி மேலாண்மை குழுவினர் கலந்து கொண்டனர்.
தனியார் பள்ளியை மிஞ்சும் அளவிற்கு அரசு பள்ளி செயல்பாட்டை பாராட்டி சமூக வலைதளங்களில் இப்பள்ளியின் செயல்பாடுகள் வைரலாகி பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
- விழாவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
- பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பூசலாங்குடியில் உள்ள மகாசக்தி மாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
மதியம் அம்மனுக்கு கஞ்சி வார்த்தல், அன்னதானம், அபிஷேகம் நடைபெற்றது. அம்மன் வீதியுலா நடைபெற்றது.
தொடர்ந்து அக்னி கப்பரை வீதிஉலா நடைபெற்றது.
- இந்த திருவிழா அடுத்த மாதம்(செப்டம்பர்) 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
- விழாவில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயமும் ஒன்று.
தமிழகத்தில் மிகச்சிறந்த ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்கும் இந்த பேராலயத்துக்கு தினமும் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனர்.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா வருகிற 29-ந் தேதி(தி்ங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம்(செப்டம்பர்) 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் பங்கேற்பு இன்றி கொடியேற்றம் மிக எளிமையாக நடந்தது. இந்த ஆண்டு வழக்கம்போல் பக்தர்கள் பங்கேற்புடன் விழா சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து விழா முன்னேற்பாடுகளை நாகை மாவட்ட நிர்வாகம், ஆலய நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பல்வேறு அரசுத்துறை நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
விழாவையொட்டி பேராலய வளாகம் மற்றும் சுற்றுச்சுவர் பகுதி முழுவதும் வர்ணம் பூசப்பட்டு பேராலயம் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. மேலும் பேராலயத்தில் வண்ண விளக்குகள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.






