என் மலர்
நாகப்பட்டினம்
- பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்க ண்ணிக்கு பாதயாத்தி ரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
- 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா நாளை (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந்தேதி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவி ழாவாக கொண்டா டப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா நாளை 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்தவிழா அடுத்த மாதம் 8-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
நாளை மாலை 5.45 மணிக்கு கொடி கடற்கரை சாலை ஆரியநாட்டு தெரு வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
பின்னர் கொடியை தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து வைத்து கொடியேற்றி வைக்கிறார்.
இதை தொடர்ந்து பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
விழா நாட்களில் தமிழ், மராத்தி, மலையாளம், ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, கொங்கனி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வருகிற 7-ந்தேதி நடக்கிறது. 8-ந்தேதி ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.
இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
திருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி மாதா பேராலயம் மின்விள க்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.
மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு பாதயாத்தி ரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகமும், பேரூராட்சியும், பேராலய நிர்வாகமும் இணைந்து செய்து வருகிறது.
விழா முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- மாணவர்கள் இப்பதவிக்கான போட்டித் தேர்வு க்கு விண்ணப்பிக்க தகுதி யற்றவர்களாக ஆகியுள்ளார்கள்.
- தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வு அறிவிப்பாணைகளை வெளியிட வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியன், எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த 29.7.22 அன்று அறிவித்த விளம்பர எண்.622, அறிவிப்பு எண்.18/2022-ன் படி, தமிழ்நாடு அரசுத் துறைகளில் 1089 சர்வேயர் பணியிடங்களுக்கான விளம்பரம் வெளியி டப்பட்டது.அந்த விளம்பரத்தில் கல்வித் தகுதியாக, இந்திய அரசின் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழை பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்தேர்வா ணையம் அறிவிப்பு வெளியிட்டு ள்ளது.
அந்த அறிவிப்பால், தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பயின்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் இப்பதவி க்கான போட்டித் தேர்வு க்கு விண்ணப்பிக்க தகுதி யற்றவர்களாக ஆகியுள்ளா ர்கள்.
தமிழ் நாட்டிலேயே படித்து, அரசின் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழை பெற்றிருக்கின்ற தமிழக இளைஞர்களை, மேற்கண்ட வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்களாக ஆக்கியுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இந்த அறிவிக்கை.
எனவே, சர்வேயர் பணியிட ங்களுக்காக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பி ல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பிக்கும் கால அளவை நீட்டிப்பு செய்தும் தமிழக அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயின்று சான்றிதழ் பெற்ற அனைத்து தமிழக மாணவர்களையும் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்களாக திருத்தம் செய்தும், புதிய அறிவிப்பினை வெளியிடுவதற்கு தி.மு.க அரசு உரிய ஆலோசனையை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திற்கு வழங்க வேண்டும்.
லட்சக்கணக்கான தமிழக மாணவர்கள் வேலைக்காக ஏங்கித் தவிக்கின்ற இன்றைய காலச் சூழ்நிலையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் இனிவரும் காலங்களில் நடத்துகின்ற தேர்வுகளை மிகுந்த கவனத்தோடு, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வு அறிவிப்பாணைகளை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தூய்மை பணியில் சிறப்பாக ஈடுபட்ட நகராட்சி பணியாளர்கள் வர்த்தகர்கள் சேவை சங்கங்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
- விழிப்புணர்வு பேரணியில் போதை எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சியின் சார்பில்ராஜாஜி பூங்காவில் தூய்மை பணிக்கான சான்று வழங்கும் விழா நடைபெற்றது
விழாவிற்கு நகர மன்ற தலைவர் புகழேந்தி தலைமை வகித்து தூய்மை பணியில் சிறப்பாக ஈடுபட்ட நகராட்சி பணியாளர்கள் வர்த்தகர்கள் சேவை சங்கங்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார் நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஹேமலதா பொறியாளர் முகமது இப்ராகிம் துணைத் தலைவர் மங்களநாயகிநகர மன்ற உறுப்பினர்கள் உமா, நடராஜன், மயில்வாகனம் ,அனிஸ்பாத்திமா.பிரியும் அறக்கட்டளை பிரபு வர்த்தக சங்க பொருளாளர் சீனிவாசன் ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில் தொழிலதிபர் ஆறுமுகம்மற்றும் நகராட்சி பணியாளர்கள் குருகுலம் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சியில் வேதாரண்ய த்தை சேர்ந்த தேவி பாலுவின் மகள் எழிலரசி குளத்தில் விழுந்த இரு சிறுவர்களை காப்பாற்றியதற்காக தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது பெற்றுள்ளார். இவருக்கு நகராட்சியின் சார்பில் நகர மன்ற தலைவர் புகழேந்தி சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்
நிகழ்ச்சி முடிவில் என் குப்பை என் பொறுப்பு என்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் பின்பு ராஜாஜி பூங்காவில் இருந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி புறப்பட்டு மேல வீதி வடக்கு வீதி வழியாக நகராட்சி சென்றடைந்தது விழிப்புணர்வு பேரணியில் போதை எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
- வேதாரண்யத்தில் வேளாண் பொறியியல் துறையின் அலுவலகம் தொடங்கி அந்த துறை சார்ந்த நலத் திட்டங்கள் கிடைத்திட வேண்டும்.
- புகையிலைக்கான மாற்றுப் பயிர் சாகுபடிக்கு வழிகாட்ட வேண்டும்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் வருவாய்க் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டம் நடந்தது.
வேதாரண்யம் வட்டா ட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு கோட்டாட்சியர் ஜெய ராஜ பெளலின் தலைமை வகித்தர். வட்டாட்சியர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் பெரும்பா லான விவசாயிகள் முள்ளியாறு, மானங்கொ ண்டானாறு, போக்கு வாய்க்கால் நீர் நிலைகளில் அடர்ந்து வளர்ந்துள்ள வெங்காயத் தாமரைச் செடிகளை காலத்தில் அகற்ற வலியுறுத்தினர்.
வேதாரண்யத்தில் வேளாண் பொறியியல் துறையின் அலுவலகம் தொடங்கி அந்த துறை சார்ந்த நலத் திட்டங்கள் கிடைத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மின் இறைவைப் பாசனத் திட்டம், நீர் நிலைகள் பராமரிப்பு குறித்தும் விவசாயிகள் பேசினர்.விவசாயி காளிதாசன் கூறுகையில் தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டவர்களுக்கும் குறுவை தொகுப்பு முழுமையாகக் கிடைக்கவில்லை.
நெல் அறுவடைக் காலத்தில் அறுவடை எந்திரத்துக்கான வாடகையை அதிகமாக பெறுவதை தடுக்க காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ஒளிச்சத்திரன்: எள் சாகுபடிக்கான இழப்பீடு இதுவரை கிடைக்கவில்லை. புகையிலைக்கான மாற்றுப் பயிர் சாகுபடிக்கு வழிகாட்ட வேண்டும்.
பாலகிருஷ்ணன்: காந்திநகர் பகுதியில் மழைக்காலத்தில் வெள்ளம் தேங்குவதை தடுக்க வேண்டும்.குழந்தைவேலு: திருத்துறைப்பூண்டி - வாய்மேடு, தென்னடார், ஆயக்காரன்புலம், ஆதனூர் - வேதாரண்யம் வழித் தடத்தில் அரசு பேருந்து இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.கூட்டத்தில், மேகநாதன், காளிதாஸ், அகிலன், ஒளிச்சந்திரன், சிவஞானம் உள்ளிட்டோர் பேசினர்.
- மலேசியாவில் சம்பாதித்த பணம் ரூ2.40 லட்சத்தை கரியாபட்டினத்தில் உள்ள அரசு வங்கியில் டெபாசிட் செய்ய வந்துள்ளார்.
- வங்கில் இருந்து பணத்துடன் செல்வதை 2 பைக்கில் வந்த 4 பேர் தெரிந்து கொண்டு பின் தொடர்ந்து வந்து வாசலில் இருந்த பணத்தை திருடி சென்று உள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா மணக்காட்டை சேர்ந்தவர் நடேசன் (38).
இவர் மலேசியா நாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிவந்து உள்ளார்.
மலேசியாவில் சம்பாதித்த பணம் ரூ2.40 லட்சத்தை கரியாபட்டினத்தில் உள்ள அரசு வங்கியில் டெபாசிட் செய்ய வந்துள்ளார்.
வங்கியில் நடேசன் கணக்கு செயல்பாடு இல்லாமல் இருந்த காரணத்தால் பணத்தை டெபாசிட் செய்ய முடியாமல் வீட்டிற்கு திரும்பிவந்து வீட்டு வாசலில் பையுடன் பணத்தை வைத்து விட்டு அருகில் வீடு கட்டும் பணியை பார்க்க சென்று உள்ளார்.
நடேசன் வங்கில் இருந்து பணத்துடன் செல்வதை 2 பைக்கில் வந்த 4 பேர் தெரிந்து கொண்டு பின் தொடர்ந்து வந்து வாசலில் இருந்த பணத்தை திருடி சென்று உள்ளனர் இது குறித்து நடேசன் கரியாபட்டினம் போலீசில் புகார் செய்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் அருகில் உள்ள சி.சி.டி கேமராக்களை வைத்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் சென்றவாரம் இந்த வங்கியில் இதே பாணியில் ரூபாய் 20 ஆயிரம் கொள்ளைபோன சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடதக்கது.
மேலும் வேதாரண்யம் சரக பகுதியில் கள்ளி மேடு, தலைஞாயிறு, வேதாரண்யம் ஆகிய பகுதிகளிலும் தொடர்ந்து வங்கியில் பணம் எடுப்பவர்களை குறிவைத்து பணம் கொள்ளையடி க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
- மாநாட்டில் மின்சார திருத்த சட்ட மசோதா ஒன்றிய அரசு தாக்கல் செய்ததற்கு கண்டனம்.
- தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விவசாய நிலங்களில் பல்வேறு பணிகள் நடைபெறுகிறது.
நாகப்பட்டினம்:
ஒன்றிய அரசைகண்டித்து 50 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்கும் 30 ஆவது மாநில மாநாடு ; செப்டம்பர் 17,18,19 ஆகிய 3 தினங்கள் நாகையில் நடைபெற உள்ளதாக தமிழ்நாடுவிவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார்.
நாகை மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில மாநாட்டின் லோகோவை நாகை மாலி எம்.எல்.ஏ வெளியிட விவசாய சங்க தலைவர்கள் பெற்று க்கொண்டனர். அதனை தொடர்ந்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில பொது ச்செயலாளர் சண்முகம் கூறுகையில் ;
ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் 30வது மாநில மாநாடு செப்டம்பர் 17,18,19 ஆகிய 3 தினங்கள் நாகையில் நடைபெறுகிறது.
மாநிலம் முழுவதுமுள்ள 50 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.
கேரளா மாநில நிதித்துறை அமைச்சர் பால கோபால் மற்றும் விவசாய சங்க தலைவர்கள், தொழிற் சங்கங்கள்பங்கேற்க உள்ளனர்.
மாநாட்டில் மின்சார திருத்த சட்ட மசோதா ஒன்றிய அரசு தாக்கல் செய்ததற்கு கண்டனம், மின்சார திருத்த சட்டம் வந்தால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார திட்டங்கள் நிறுத்தப்படும், போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அறிவித்தார்கள்.
குறிப்பாக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 2500 ரூபாய் மற்றும் கரும்புக்கு டன்னுக்கு 4000 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விவசாய நிலங்களில் பல்வேறு பணிகள் நடைபெறுகிறது.
அதனை தமிழக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும். ஊஎனவே இறால் பண்ணை களை மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
- அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
- பிரசவ காலத்தில் மூச்சு பயிற்சியில் ஈடுபட்டால் உடலும், மனமும், குழந்தையும் ஆரோக்கியத்துடன் பிறக்க வழிவகை செய்யும்.
நாகப்பட்டினம்:
நாகையில் உடலும் மனமும் ஆரோக்கியம் பெற ஒரே நேரத்தில் 50 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி;
காய்கறி, கீரை, பழங்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துள்ள உணவு பொருட்களும் வழங்கப்பட்டது
நாகை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமில் ஒரே நேரத்தில் 50 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
பிரசவ காலத்தில் யோகா உள்ளிட்ட மூச்சு பயிற்சியில் ஈடுபட்டால் உடலும் மனமும் குழந்தையும் ஆரோக்கியத்துடன் பிறக்க வழிவகை செய்யும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து 52- கர்ப்பிணி தாய்மார்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு திருமருகல் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள் வழங்கப்பட்டது.
- மாணவ- மாணவிகளுக்கு ரூ. 3 கோடியே 75 லட்சம் மதிப்பிலான மிதிவண்டிகளை வழங்கினார்.
- ஏழைகள் இருக்கும் வரை கருணாநிதி கொண்டுவந்த இலவசங்கள் இருக்கும்.
நாகப்பட்டினம்:
நாகை மகளிர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 7381 மாணவ மாணவிகளுக்கு ரூ.3 கோடியே 75 லட்சம் மதிப்பிலான மிதி வண்டிகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து நாகை சாமந்தான் பேட்டை மீனவ கிராமத்தில், நிரந்தர வீட்டிற்கான பட்டாக்களை அமைச்சர் வழங்கினார்.
அப்போது பேசிய அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், ஏழைகள் இருக்கும் வரை கருணாநிதி கொண்டுவந்த இலவசங்கள் இருக்கும்.
அவர் கொண்டுவந்த இலவச கல்வியில் படித்துதான் நான் தற்போது அமைச்சராக இருக்கிறேன் என்றார்.
நிகழ்ச்சியில் நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தமிழக தாட்கோ தலைவர் மதிவாணன், எம்.எல்.ஏ.க்கள் ஷாநவாஸ், நாகை மாலி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- திடீரென திருப்பத்தில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக அருள்தாஸ் மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டி மீது மோதியது.
- அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு ெகாண்டு சென்றதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழையூர் நாடார் தெருவை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 55).
துணை ராணுவபடையில் போலீசாக வேலைபார்த்து ஓய்பெற்றவர்.
இவர் வீட்டில் இருந்து வேளாங்கண்ணிக்கு மோட்டார் சைக்கிளில் கிழக்குகடற்கரை சாலையில் சென்றபோது காரைநகர் பகுதியில் முன்னாள் ஸ்கூட்டியில் சென்றவர் திடீரென திருப்பத்தில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக அருள்தாஸ் மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டி மீது மோதியது.
இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி அருள்தாஸ் பரிதாபமாக உயரிழந்தார்.
இது குறித்து கீழையூர் போல் சார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- தங்கம் மற்றும் வெள்ளி மீன்களை சிவவாத்தியங்கள் முழங்க சிவனடியார்கள் ஊர்வலமாக கடற்கரைக்கு எடுத்து வந்தனர்.
- படகு மூலம் நடு கடலுக்கு சென்ற சிவ பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளி மீன்களை கடலில் விட்டு பிடித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார்நகர் மீனவ குலத்தில் பிறந்த அதிபத்த நாயனார் சிவபெருமானிடம் பக்தி கொண்டு தான் பிடிக்கும் மீனை தினமும் சுவாமிக்காக கடலில் விடுவது வழக்கம்.
இவரது பக்தியை சோதித்த சிவபெருமான் இவரது வலையில் தங்கமீன் ஒன்றை கிடைக்கும்படி செய்தார்.
அதிபத்தநாயனார் அம்மீனையும் சிவபெருமானுக்காக வேண்டிக்கொண்டு கடலில் விட்டார்.
அதிபத்தநாயனாரின் பக்தியை மெச்சிக்கும் விழா நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் நடைபெறுவது வழக்கம்.
தங்க மீன் படைக்கும் விழா நாகப்பட்டினம் நம்பியார் நகர் கடற்கரையில் நடைபெற்றது.
நம்பியார் நகர் புதிய ஒளி மாரியம்மன் ஆலயத்தில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி மீன்களை சிவவாத்தியங்கள் முழங்க சிவனடியார்கள் ஊர்வலமாக கடற்கரைக்கு எடுத்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து படகு மூலம் நடு கடலுக்கு சென்ற சிவ பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளி மீன்களை கடலில் விட்டு பிடித்தனர்.
மீன்களுடன் கரை திரும்பிய சிவனடியார்கள் கடற்கரையில் எழுந்தருளிய சிவபெருமானுக்கு அதிபத்தநாயனார் தங்கம் மற்றும் வெள்ளி மீன்களை வைத்து படையல் இடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சிவ வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது.
- மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
- அலங்கரிக்கப்பட்ட அய்யனாருக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டிணம் மாவட்டம் திருப்பூண்டியை அடுத்த மகிழி கிராமத்தில் பழமை வாய்ந்தரீ பூர்ணாம்பிகை புஷ்கலா அம்பிகை சமேத மகா காராள சேவுக அய்யனார் கோவில் அமைந்துள்ளது.
இக் கோவிலில் ஆவணி மாத, ஆண்டு திருவிழாவை முன்னிட்டு சிறப்பு மஹா ஹாமம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
யாகத்தில் உலக நன்மை வேண்டியும், உலக அமைதிக்காகவும், விவசாயம் செழிக்கவும் போதிய மழை பொழியவும் வேண்டி மஹா யாகம் நடைபெற்றது.
பெரிய யாக குண்டம் அமைத்து 108 மூலிகை பொருட்கள் மற்றும் காய்கள், பழங்கள், கொண்டு மஹா யாகம் நடைபெற்றது.
நிறைவாக யாகம் பூர்ணாகுதியுடன் முடிவடைந்தது. பின்னர் ஹோமத்தில் பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை ஏந்திய சிவாச்சாரியார்கள் வலம் வந்து மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட அய்யனாருக்கு மகாதீபாராதனை நடைபெற்றது.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
- கோவில்பத்து கிராமத்திலுள்ள நெல் சேமிப்பு கிடங்கில் சுமைதூக்கும் வேலை பார்த்து வந்தார்.
- வெள்ளப்பள்ளம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த மண்அள்ளும் எந்திரம் மோதி படுகாயமடைந்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா உம்பளச்சேரியை சேர்ந்தவர் சிவமணி (வயது30).
இவர் வேதாரண்யம் அடுத்த கோவில்பத்து கிராமத்தில் உள்ள நெல் சேமிப்பு கிடங்கில் சுமைதூக்கும்வேலை பார்த்து வந்தார்.
கடந்த 19ம் தேதி பணி முடித்து வெள்ளப் பள்ளம் அருகே இரு சக்கர வாகனத்தில்சென்றபோது எதிரே வந்த மண் அள்ளும் எந்திரம் மோதி படுகாயம் அடைந்தார்.
அவரை மீட்டு நாகை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்பு மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்கசை பெற்று வந்த சிவமணி கடந்த 23ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புகாரின் போரில் வேட்டைக்காரனிருப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவசேனாதிபதி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.






