search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோட்டக்குடி வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை
    X

    தோட்டக்குடி வாய்க்கால்.

    தோட்டக்குடி வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை

    • தரைப்பாலம் முழுவதும் இடிக்கப்பட்டு புதிய பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று முடிந்தது.
    • பாலம் அமைக்கப்பட்ட இடத்தில் கொள்ளிடம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பு கலூரில் நாகை-நன்னிலம் நெடுஞ்சாலையின் குறுக்கே தோட்டக்குடி பாசன வாய்க்கால் அமைந்துள்ளது.

    இந்த பாசன வாய்க்கால் மூலம் தாமரைக்குளம், பூவாளி தெரு, பட்டக்கால் தெரு உள்ளிட்ட 3 கிராமங்களுக்கு உட்பட்ட சுமார் 250 ஏக்கர் விளைநிலங்களுக்கு முக்கிய பாசன வாய்க்காலாக தோட்டக்குடி வாய்க்கால் உள்ளது.

    இந்த வாய்க்காலில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தரைப்பாலம் ஒன்று இருந்தது.

    கடந்த சில ஆண்டுக்கு முன்னர் தரைப்பாலத்தில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் தரைப்பாலம் முழுவதும் இடிக்கப்பட்டு புதிய பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று முடிந்தது.

    இந்த நிலையில் முடிகொண்டான் ஆற்றில் காவிரி பாசன நீர் வந்து சேர்ந்துள்ளது.

    இந்த பாசன நீர் தோட்டக்குடி வாய்க்கால் வழியாக விளை நிலங்களில் உட்புகாமல் மண்ணை வைத்து அடைக்கப்பட்டுள்ளது.

    இதனால் மேற்கண்ட கிராம பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் குருவைப் பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் சேதம் அடையும் அபாய நிலையில் உள்ளது.

    மேலும் பாலம் அமைக்கப்பட்டுள்ள இடத்தின் வழியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் செல்கிறது.

    இந்த குடிநீர் நாகூர், நாகப்ப ட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதும க்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பாலம் அமைக்கப்பட்ட இடத்தில் கொள்ளிடம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் அதிக அளவில் வெளியேறி முடிகொண்டானாற்றில் கலந்து வீணாகிறது.

    இந்த குடிநீர் குழாய் உடைப்புகள் சரி செய்யப்படாமல் உள்ளது.

    கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரை பயன்படுத்தும் நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதா ரண்யம் உள்ளிட்ட பகுதி களை சேர்ந்த 50,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

    இது குறித்து சம்பந்த ப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைப்பை சரி செய்து தோட்டக்குடி வாய்க்கால் பாசன பெரும் விவசாய பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து எதிர்பார்த்துள்ளனர்.

    Next Story
    ×