என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டு வாசலில் பையில் வைத்திருந்த ரூ.2.40 லட்சம் திருட்டு
    X

    வீட்டு வாசலில் பையில் வைத்திருந்த ரூ.2.40 லட்சம் திருட்டு

    • மலேசியாவில் சம்பாதித்த பணம் ரூ2.40 லட்சத்தை கரியாபட்டினத்தில் உள்ள அரசு வங்கியில் டெபாசிட் செய்ய வந்துள்ளார்.
    • வங்கில் இருந்து பணத்துடன் செல்வதை 2 பைக்கில் வந்த 4 பேர் தெரிந்து கொண்டு பின் தொடர்ந்து வந்து வாசலில் இருந்த பணத்தை திருடி சென்று உள்ளனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா மணக்காட்டை சேர்ந்தவர் நடேசன் (38).

    இவர் மலேசியா நாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிவந்து உள்ளார்.

    மலேசியாவில் சம்பாதித்த பணம் ரூ2.40 லட்சத்தை கரியாபட்டினத்தில் உள்ள அரசு வங்கியில் டெபாசிட் செய்ய வந்துள்ளார்.

    வங்கியில் நடேசன் கணக்கு செயல்பாடு இல்லாமல் இருந்த காரணத்தால் பணத்தை டெபாசிட் செய்ய முடியாமல் வீட்டிற்கு திரும்பிவந்து வீட்டு வாசலில் பையுடன் பணத்தை வைத்து விட்டு அருகில் வீடு கட்டும் பணியை பார்க்க சென்று உள்ளார்.

    நடேசன் வங்கில் இருந்து பணத்துடன் செல்வதை 2 பைக்கில் வந்த 4 பேர் தெரிந்து கொண்டு பின் தொடர்ந்து வந்து வாசலில் இருந்த பணத்தை திருடி சென்று உள்ளனர் இது குறித்து நடேசன் கரியாபட்டினம் போலீசில் புகார் செய்துள்ளார்.

    புகாரின் பேரில் போலீசார் அருகில் உள்ள சி.சி.டி கேமராக்களை வைத்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல் சென்றவாரம் இந்த வங்கியில் இதே பாணியில் ரூபாய் 20 ஆயிரம் கொள்ளைபோன சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடதக்கது.

    மேலும் வேதாரண்யம் சரக பகுதியில் கள்ளி மேடு, தலைஞாயிறு, வேதாரண்யம் ஆகிய பகுதிகளிலும் தொடர்ந்து வங்கியில் பணம் எடுப்பவர்களை குறிவைத்து பணம் கொள்ளையடி க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×