என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • பல லட்சம் செலவில் சுமார் 30 அடி நீளத்தில் பர்மா தேக்கிலான கொடி மரத்தை வாங்கி உபயோகமாக அளித்துள்ளார்.
    • மரம் கோவிலின் உள் பிரகாரத்தில் மழையிலும், வெயிலிலும் நனைந்து வீணாகிக் கொண்டிருக்கிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதார ண்யேஸ்ரர் ்கோவிலுடன் இணைந்த தோப்புத்துறை அபீஷ்ட வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவில் வேத நாராயணன் அபீஷ்ட வரதராஜ பெருமாள்என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    ராமர் இலங்கைக்கு செல்வதற்கு முன்னர் தோப்புத் துறையில் உள்ள திருமாலை வழிபட்டதாகவும் கோவிலின் முகப்பில் அவர் பெயரால் ஒரு தீர்த்தம் அமைத்ததாகவும் கூறப்படுகிறது. ்இக்கோவிலில் கடந்த 2005ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அப்பொழுது கொடி மரத்தை புதிதாக புதுப்பிக்க பக்தர் ஒருவர் பல லட்ச ரூபாய் செலவில் சுமார் 30 அடி நீளத்தில் பர்மா தேக்கிலான கொடி மரத்தை வாங்கி உபயோகமாக அளித்துள்ளார்

    4 ஆண்டுகளாக மரம் கோவிலின் உள் பிரகாரத்தில்மழை வெயில் நனைந்து வீணாகிக் கொண்டிருக்கிறது. அறநிலைய துறையின் அனுமதி பெற்று அமைக்க வேண்டும் என்ற காரணத்தால் 4 ஆண்டுகளாக அப்படியே கிடக்கிறது. கொடிமரம் அமைக்க அறநிலையத்துறை அனுமதி அளிக்காமல் இழுத்தடித்து வருகின்றனர்

    உபயதாரர்கள் செய்ய முன்வந்தும் அறநிலைய த்துறையின் அலட்சியப் போக்கால் பல லட்ச ரூபாய் மரம்தற்போது வீணாகும் நிலையில் உள்ளது முன்பு இங்கு அமைக்கப்பட்டிருந்த சிறிய கொடி மரமும் மழையில் முறிந்து விழுந்து விட்டது.

    இதனால் ஆண்டு பெருவிழாவிற்கு தற்போது புதிதாக சிறிய அளவில் ஆர்எஸ்பதி மரத்தில் கொடிமரம் நட்டு அதில் கொடியேற்றம் நடைபெற்று உள்ளது எனவே உடனடியாக கொடிமரம் அமைக்க அறநிலைய துறை அனுமதி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • தொடர்ந்து பெய்துவரும் மழையால் வேதாரண்யத்தில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பி வருகிறது.
    • மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் உப்பு ஏற்றுமதி பணியும் அடியோடு பாதிக்கபட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம்வே தாரண்யம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்தது.

    இதனால் வயல்களில் ஒரு அடி தண்ணீர் தேங்கி உள்ளது.

    இதனால் மானாவாரி பகுதி விவசாயிகள் கோடை உழவு செய்ய முடியமாலும், நேரடி நெல் விதைப்பு செய்ய முடியாமல் உள்ளனர்.

    தொடர்ந்து பெய்துவரும் மழையால் வேதாரண்யத்தில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பி வருகிறது.

    அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு,கடிநெல்வயல், பகுதியில் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் உப்பு ஏற்றுமதி பணியும் அடியோடு பாதிக்கபட்டுள்ளது.

    மழையால்சுமார் 10 க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குசெல்லவில்லை.

    தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்படுகிறது விட்டுவிட்டு மழை பெய்ததால்வியாபாரம் பாதிக்கப்பட்டு கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    • இந்தியாவிலேயே முதல்முறையாக அத்தி மரத்தில் செய்யப்பட்ட அத்தி விநாயகர் ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
    • கண்கவர் கலை நிகழ்ச்சிகள் அங்கிருந்தவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

    நாகப்பட்டினம்:

    நாகையில் ஒவ்வொரு ஆண்டும் 32 அடியில் அட்டையினால் செய்யப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுவது வழக்கம்.

    35 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து இந்த ஆண்டு விஸ்வரூப விநாயகர் குழு சார்பாக 32 அடியில் இந்தியாவிலேயே முதல்முறையாக அத்தி மரத்தில் செய்யப்பட்ட அத்தி விநாயகர் ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

    திருச்சியில் 17 லட்சம் ரூபாய் மதிப்பில் 12 டன் எடையில் பிரத்யேகமாக செய்யப்பட்ட வாகனத்தில், 3200 கன அடி அத்தி மரத்தில் 4 டன் எடையில் செய்யப்பட்ட அத்தி விநாயகர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டார். நாகை நீலாய தாட்சி அம்மன் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட அத்தி விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    விநாயகர் ஊர்வலத்தில் மங்கள வாத்தியங்கள், தப்பாட்டம், மயிலாட்டம், காளியாட்டம், செண்டை மேளம், கேரளத்து கதகளி, பேண்டு வாத்தியங்கள் என கண்கவர் கலை நிகழ்ச்சிகள் அங்கிருந்தவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. நாகையில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக விடியற்காலை நாகூர் வந்தடைந்ததை அடுத்து, நாகூர் வெட்டாறில் பிரதிஷ்டை செய்யப்பட்ட களிமண் விநாயகர் கரைக்கப்பட உள்ளது.

    32 அடி அத்தி விநாயகர் மற்றும் நாகை மாவட்டத்தில் 290 விநாயகர் ஊர்வலம் நடைபெறுவதால் எஸ்.பி ஜவஹர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று தீபாரதனை நடைபெற்றது.
    • இந்து முஸ்லிம் கிறிஸ்வர் உள்ளிட்ட மும்மதத்தினர் கலந்து கொண்ட விநாயகர் ஊர்வலம் ஆலயத்தில் இருந்து புறப்பட்டது.

     வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கருப்பம்பலத்தில் அமைந்துள்ள காசிவிஸ்வநாத திருசிற்றம்பல விநாயகர் ஆலயத்தில்மத நல்லிணக்க விநாயக ஊர்வலம் நடைபெற்றது

    முன்னதாக கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று தீபாரதனை நடைபெற்றது பின்பு இந்து முஸ்லிம் கிறிஸ்வர் உள்ளிட்ட மும்மதத்தினர் கலந்து கொண்ட விநாயகர் ஊர்வலம் ஆலயத்தில் இருந்து புறப்பட்டது

    நிகழ்ச்சிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிவி ராஜேந்திரன் தலைமை வகித்தார் குருகுல நிர்வாகி வேதரத்தினம் முன்னிலை வகித்தார் விநாயகர் ஊர்வலத்தை புனித அந்தோனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் நித்திய அஜய்ராஜ்தோப்புத்துறை ஜமாத்தைச் சேர்ந்த அமீர் சுல்தான், அப்சல் உசேன், மெய்யாரபிக், தாணிக் கோட்டகம் ஆரோபால்ராஜ் மற்றும் வேதாரண்யம் தொழிலதிபர் விஜயபாலன், வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கமம் கோவிந்தராஜ், நகர காங்கிரஸ் தலைவர் அர்ஜுனன், காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் கனகராஜ் உள்ளிட்ட ஏராளமான இந்து, முஸ்லிம் கிறிஸ்வர்கள் கலந்து கொண்டு தேங்காய் உடைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.

    விநாயகர் ஊர்வலம் ஐந்து கிலோமீட்டர் தூரம் சென்று சம்பலம் ஏரியில் விசர்ஜனம் செய்யப்பட்டது இதேபோல்வி நாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேதாரண்யம் பகுதியில் 30 இடங்களில் விநாயகர் சிலைகள் மூன்று அடிமுதல் 12 அடி உயர விநாயகர் சிலைகள் வைக்கபட்டு உலக நன்மை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் பூஜை செய்துவந்தனர் இந்த நிலையில் இன்று புஷ்பவனம், செம்போடை,தோப்புத்துறை வேதாரண்யம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட விநாயகர் ஊர்வலம் புறப்பட்டது இதில் ஏரளமான பக்தர்கள் கலந்துகொண்டு அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டனர்.

    • வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பின்பு கோவிலில் உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தோப்புதுறையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அபிஷ்ட வரதராஜபெருமாள் கோவில் உள்ளது.

    இந்த ஆலயத்தில் ஆண்டு திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

    முன்னதாக வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பின்பு கோவிலில் உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது .

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வரதராஜ பெருமாளை வழிபட்டனர். 10 நாட்கள் நடைபெறும் இந்த ஆண்டு திருவிழா நாள்தோறும் சாமி வீதியுலா காட்சியும் திங்கட்கிழமை திருகல்யாணமும்நடைபெறுகிறது.

    • வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் இலவசமாக வழங்கும் விழா நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.
    • காய்கறி பழங்கள் விற்பனை செய்பவர்களுக்கும், பூ வியாபாரம் செய்பவர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் சாலை ஓர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் இலவசமாக வழங்கும் விழா நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு நகர மன்ற தலைவர் புகழேந்தி தலைமையில் வகித்தார் நிகழ்ச்சியில் ரூ. 22.50 லட்சம் மதிப்புள்ள 21 காய்கறி பழங்கள் விற்பனை செய்பவர்களுக்கும், .10 பூ வியாபாரம் செய்பவர்களுக்கும் சேர்த்து 31 வண்டிகளை நகர மன்ற தலைவர் புகழேந்தி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஹேமலதா ஒன்றிய பொறியாளர் முகமது இப்ராஹிம் துணை தலைவர் மங்களநாயகி மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீமதி தொடர்பான வழக்குகளை நடத்தி வரும் வழக்கறிஞர்கள் மேல்முறையீட்டிற்காக உச்சநீதிமன்றம் சென்று இருக்கிறார்கள் எனவே அந்த நீதிபதிகளாவது நல்ல ஒரு தீர்வை வழங்க வேண்டும்.
    • நிபுணர் குழுவினர் கருத்தைக் கேட்டு தவறாக நீதி வழங்குவது பொதுமக்கள் மத்தியில் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை குறைந்துவிடும்.

    நாகப்பட்டினம்:

    முக்குலத்து புலிகள் அமைப்பின் நிறுவன தலைவர் ஆறு.சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது,

    கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் பள்ளியில் படித்த ஸ்ரீமதி மரணம், தற்கொலை எனவும் கொலையோ அல்லது பாலியல் துன்புறுத்தலோ இல்லை என உயர் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

    நீதிமன்றத்தை தான் மக்கள் நம்பி இருக்கிறார்கள்.

    நீதிமன்றங்கள் இப்படி தவறுதலான ஒரு நீதியை வழங்கினால் மக்கள் நீதிமன்றங்கள் மீது உள்ள நம்பிக்கை இல்லாமல் போய் விடும்.

    நிபுணர் குழுவினர் கருத்தைக் கேட்டு தவறாக நீதி வழங்குவது பொதுமக்கள் மத்தியில் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை குறைந்துவிடும்.

    தமிழக முதல்வர் ஸ்ரீமதி உயிரிழப்புக்கு உரிய நீதியையும் நிவாரணம் வழங்குவதற்கான முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

    அதே போல ஸ்ரீமதி தொடர்பான வழக்குகளை நடத்தி வரும் வழக்கறிஞர்கள் மேல்முறையீட்டிற்காக உச்சநீதிமன்றம் சென்று இருக்கிறார்கள்.

    அந்த நீதிபதிகளாவது நல்ல ஒரு தீர்வை வழங்க வேண்டும்.

    தொடர்ச்சியாக தென் மாவட்டங்களில் ஒண்டிவீரன் விழாவிற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    அதேபோல புலித்தேவன், மருது பாண்டியன் மற்றும் ஆக.30 நடைபெற்ற பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும், சுதந்திரத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த மன்னர்கள் மற்றும் மாவீரர்களின் புகழை பரப்புவதற்கு எல்லா மக்களும் நேரில் சென்று பார்த்து வழிபட வேண்டும்.

    ஆனால் அவர்கள் வழிபடாத அளவிற்கு தமிழக அரசு 144 உத்தரவை பிறப்பிப்பதாகவும், அதிமுக அரசு தொடர்ச்சியாக இந்த 144 தடை உத்தரவை செய்திருந்தது.

    திமுக அரசு 144 தடை உத்தரவை அகற்ற வேண்டும் என்றார்.

    புலித்தேவனின் 307வது பிறந்தநாள்

    நெல்லை சீமையை ஆண்டு வெள்ளையரை எதிர்த்து போரிட்ட முதல் சுதந்திரப் போராட்ட மாமன்னர் பூலித்தேவனின் 307வது பிறந்தநாளை ஒட்டி நாகை மாவட்டம் காமேஸ்வரத்தில் முக்குலத்துப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் பூலித்தேவனின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து சிறப்புரை ஆற்றினார்.

    இந்த கூட்டத்தில், இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட மாவீரன் பூலித்தேவனுக்கு அரசின் சார்பில், சென்னை தலைநகரில் உருவச்சிலை அமைக்க வேண்டும்.

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பூலித்தேவன் விழாவுக்கு போடப்படும் 144 தடையை நீக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • சரிவர பணிக்கு செல்வதில்லை என எழுந்த குற்றச்சாட்டு காரணமாக அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
    • மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள கூரத்தாங்குடி ஊராட்சி மேலநாகலூர் காலனித் தெருவைச் சேர்ந்தவர் மாசிலாமணி (வயது44).

    இவர் கூரத்தாங்குடி ஊராட்சி செயலராக பணியில் இருந்த நிலையில், சரிவர பணிக்கு செல்வதில்லை என எழுந்த குற்றச்சாட்டு காரணமாக கீழ்வேளூர் வட்டார வளர்ச்சி அலுவலரால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

    இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்நிலையில் வெளியூர் சென்றிருந்த அவரது மனைவி வீட்டிற்கு திரும்பி வந்தபோது மாசிலாமணி தூக்கு மாட்டி

    இறந்திருப்பது கண்டு அலறினார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாசிலாமணி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து அவரது மனைவி ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் வலிவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 100 நாள் வேலை திட்டத்திற்கு நிலுவையில் உள்ள ஊதிய தொகையை உடனே வழங்க வேண்டும்.
    • புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் கல்வியை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை கைவிட வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலமரத்தடி பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.

    ஒன்றிய செயலாளர் ஸ்டாலின்பாபு தலைமை தாங்கினார்.

    மாநில குழு உறுப்பினர் நாகை மாலி எம்.எல்.ஏ பிரச்சார இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் 100 நாள் வேலை திட்டத்திற்கு நிலுவையில் உள்ள ஊதிய தொகையை உடனே வழங்க வேண்டும், பெட்ரோல்- டீசல், சமையல் எரிவாயு விலை வியர்வை குறைக்க வேண்டும், அக்னிபாத் திட்டத்தின் மூலம் பலவீனப்படுத்தும் முயற்சியை நிறுத்த வேண்டும், புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் கல்வியை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.

    இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் லெனின், கஸ்தூரி, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் மார்க்ஸ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாரதி, முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் ஜெயபால், ஜனநாயக வாலிபர் சங்கம் ஒன்றிய செயலாளர் பாலு, ஒன்றிய தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்று கடைகள், வீடுகளில் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

    • வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
    • சிறப்பு தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே இருக்கை ஊராட்சியில் உள்ள அபிராமி அம்பாள் உடனுறை பீமேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 27-ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.‌ தொடர்ந்து வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    நேற்று காலை யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது.பின்னர், சிறப்பு தீபாராதனைக்கு பிறகு கோவில் ராஜகோபுர கலசம் மற்றும் மூலவர் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து புனித நீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் இருக்கை, பெருந்தலைக்குடி கிராமமக்கள், விழா குழுவினர், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நகர்மன்ற தலைவர் புகழேந்தி தலைமை வகித்து முகாமை தொடக்கி வைத்தார்.
    • சக்கரை நோய் மற்றும் பொதுமருத்துவ பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கினார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் நகராட்சி சார்பில் பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது. முகாமை நகர்மன்ற தலைவர் புகழேந்தி தலைமை வகித்து தொடக்கி வைத்தார். மருத்துவர் ராஜசேகர் தலைமையில் மருத்துவ குழுவினர், நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு இரத்த பரிசோதனை, சக்கரை நோய் மற்றும் பொதுமருத்துவ பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராகிம், துணைத்தலைவர் மங்களநாயகி, நகர்மன்ற உறுப்பினர்கள் உமா நடராஜன், மயில்வாகனம், அனிஸ் பாத்திமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது நெல்மணிகள் மற்றும் புனித நீர் தெளிக்கப்பட்டது.
    • 16 வகையான பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன், பெத்தார்ண சாமி கோவில் கும்பாபிஷேம் நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் யாக சாலை பூஜைகள், மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, பெரியநாயகி மூலமந்திர பிரயோக ஹோமம், கோபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன.

    பின்னர் மஹா பூர்ணாஹதி கடம் புறப்பாடு நடந்தது. இதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் மேளதாளங்கள் முழங்க கோவில் வளாகத்தை சுற்றி வந்தனர். பின்னர் மூலவர் விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோவில் கோபுர கலசத்திற்கு வஸ்திரம் சாத்தப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது நெல்மணிகள் மற்றும் புனித நீர் தெளிக்கப்பட்டது.

    இதையடுத்து பெரிய நாயகி அம்மன், பெத்தார்ண சாமி ஆகிய சுவாமிகளுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கோதண்டராஜபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

    ×