search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் பள்ளியை மிஞ்சி செயல்படும் அரசு பள்ளி
    X

     அரசு பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

    தனியார் பள்ளியை மிஞ்சி செயல்படும் அரசு பள்ளி

    • தனியார் பள்ளிக்கு நிகராக மாணவர்களுக்கு பெல்ட், சூ, டைரி, ஐடி கார்டு உள்ளிட்ட அனைத்தும் செயல்பட்டு வருகின்றன.
    • ஆங்கில எழுத்துக்களை தனித்தன்மையாக எழுதும் பயிற்சியும், கராத்தே பயிற்சியும், பரதநாட்டியம் உள்ளிட்ட பன்முக திறன் வகுப்புகளும் நடத்தப்படுகிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.

    இப்பள்ளியில் 185 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியில் 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இப்பள்ளி 1895ம் ஆண்டு துவங்கப்பட்டு 121 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு அனைத்து வசதிகளுடன் இயங்கி வருகிறது.

    இப்பள்ளியில் 3 கட்டிடங்களில் வகுப்பறைகள் ஸ்மார்ட் கிளாஸ் வசதியுடனும் இயங்கி வருகிறது.

    மேலும் தனியார் பள்ளிக்கு நிகராக மாணவர்களுக்கு பெல்ட், சூ, டைரி, ஐடி கார்டு உள்ளிட்ட அனைத்தும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டு மிடுக்கான தோற்றத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

    பள்ளியில் மாணவர்களுக்கு தொலைக்காட்சி வசதியுடன் மொழிப்பாடம், ஆங்கில பேசும் திறன் ஆகியவை கற்பிக்கப்படுகிறது.

    மேலும் இப்பள்ளியில் ஆங்கில எழுத்துக்களை தனித்தன்மையாக எழுதும் பயிற்சியும், கராத்தே பயிற்சியும், பரதநாட்டியம் உள்ளிட்ட பன்முக திறன் வகுப்புகளும் நடத்தப்படுகிறது.

    இப்பள்ளியில் கழிவறை, குடிநீர் வசதி, கலையரங்கம் என அனைத்து வசதிகளும் மிகச் சிறப்பாக உள்ளன 50 மாணவர்களுடன் இயங்கி வந்த இப்பள்ளியை தற்போது 89 மாணவர்களும், 96 மாணவிகளுடன் 18பேர் படிக்கின்றனர்.தனி நூலகம் உள்ளது.

    மாணவர்கள் வெறும் புத்தகப் புழுவாக இருக்காமல் பொது அறிவையும் தெரிந்து கொள்ளும் அளவில் இந்த நூலகம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இப்பள்ளி தூய்மைக்கான பள்ளி விருது, மாவட்டத்தில் சிறந்த பள்ளி விருது, சிறந்த பள்ளி மேலாண்மை குழு மற்றும் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது

    இப்பள்ளியில் கணினி சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக தட்சிணாமூர்த்தி என்பவர் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கி உள்ளது.இப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பெல்ட், ஷூ, டைரி, அடையாள அட்டை வழங்கும் விழா பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நாகூரான், துணைத்தலைவர் வீரராசு, ஆசிரியைகள் அனிதா, சந்தானமேரி, சத்துணவு பணியாளர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பள்ளி மேலாண்மை குழுவினர் கலந்து கொண்டனர்.

    தனியார் பள்ளியை மிஞ்சும் அளவிற்கு அரசு பள்ளி செயல்பாட்டை பாராட்டி சமூக வலைதளங்களில் இப்பள்ளியின் செயல்பாடுகள் வைரலாகி பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    Next Story
    ×