என் மலர்
மதுரை
- விக்கிரமங்கலத்தில் கோவில் பாலாலயம் நடந்தது.
- சுவாமிகளை மாற்று இடத்தில் பிரதிஷ்டை செய்து அபிஷேகம், ஆராதனை நடந்தது.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கோவில் பட்டியில் 12-ம் நூற்றாண்டைச் சார்ந்த பழமையான சிவனேசவல்லி சமேத மதுரோதைய ஈஸ்வரமுடையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராம கிருஷ்ணா மடாதிபதி நியமானந்த தலைமையில் பாலாலய வழிபாடு நடந்தது.
கோவிலின் புனரமைப்பு பணிகளை தொடங்கு வதற்காக சிவாச்சாரியார் கார்த்திக் வீரபாகு தலைமையில் யாக பூஜைகள் செய்யப்பட்டு, சுவாமிகளை மாற்று இடத்தில் பிரதிஷ்டை செய்து அபிஷேகம், ஆராதனை நடந்தது. சரக ஆய்வர் (பொறுப்பு) தியாகு, தக்கார் சுதா, கணக்கர் முரளிதரன், பூசாரி கருத்தப்பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருப்பணிக்குழு முயற்சி யாளர்கள் பால சுப்பிரமணி, பழனிவேல், கண்ணன், முத்துராம லிங்கம், மகாமுனி, வீரசிங்கம், சாமி, பூர்வ லிங்கம், தங்கதுரை, தன பாண்டி, காட்டு ராஜா, சக்திவேல், ஜோதி, சிவா, செல்வம், அன்பழகன், ஜெகதீசன், பிச்சைமணி, பாண்டிகுமார் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- மாரியப்பன் தலைமை தாங்கினார்.
திருமங்கலம்
கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தில் சமீபத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவின் போது இருசமூகத்தின ரிடையே மோதல் ஏற்பட்டது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேற்கு ஒன்றிய செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் எல்லாளன், தெற்கு மாவட்ட செயலாளர் இன்குலாப், மாநில துணை பொதுசெயலாளர் ஆற்றலரசு ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பேசினர். மாவட்ட துணை செயலாளர் செல்லப்பாண்டி, தொகுதி செயலாளர் தமிழ்செல்வன், துணை செயலாளர் சிந்தனைவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பாலமேடு அருகே உள்ள தொட்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- அன்னதானம் வழங்கப்பட்டது.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள 66.மேட்டுப்பட்டி உட்கடை பள்ளபட்டி கிராமத்தில் உள்ள தொட்டிச்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி யாகசாலை பூஜைகள், கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கருப்பையா பூசாரி, ஒய்யன் பங்காளிகள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
- மத்திய அரசு ரெயில்வே துறை, மின்சாரத்துறை போன்ற அரசு பொதுத்துறைகளை தனியாருக்கு தாரைவாக்கும் நோக்கில் செயல்படுகிறது.
- தமிழக அரசு இரண்டு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை ஒடிசா மாநிலத்திற்கு அனுப்பி வைத்து நிலைமையை கண்டறிந்து உதவிகள் செய்திருக்கிறது.
மதுரை:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒடிசா ரெயில் விபத்து மிகவும் வருத்தத்திற்குறியது. வேதனை அளிக்கிறது. இந்த விபத்துக்கு காரணம் அதிநவீன பாதுகாப்பு கருவிகள் சரியாக இயங்காதது தான். இது இந்தியாவிற்கு பெரும் தலைகுனிவு.
இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும். அப்படி விசாரிக்கும் போது தற்போதைய ரெயில்வே அமைச்சர் பதவியில் இருந்தால் அந்த விசாரணைக்கு இடையூறாக இருக்கும். எனவே இந்த விபத்திற்கு தார்மீக பொறுப்பேற்று ரெயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்.
மத்திய அரசு ரெயில்வே துறை, விமானத்துறை, மின்சாரத்துறை போன்ற அரசு பொதுத்துறைகளை தனியாருக்கு தாரைவாக்கும் நோக்கில் செயல்படுகிறது. அதனால் தான் சரியான முறையில் அதிநவீன பாதுகாப்பு கருவிகளை பராமரிக்கவில்லை.
இந்த ரெயில் விபத்து நடைபெற்ற உடனே தமிழக அரசு இரண்டு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை ஒடிசா மாநிலத்திற்கு அனுப்பி வைத்து நிலைமையை கண்டறிந்து உதவிகள் செய்திருக்கிறது. மேலும் தமிழக முதல்வர் இந்த நாளை துக்க நாளாக அனுசரித்து அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து இருக்கிறார்.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு சென்று நிலைமைகளை நேரில் ஆய்வு செய்திருக்கிறார். இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி பாராட்டுகிறது.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே உயர் நீதிமன்றம் உறுதி செய்து இருக்கிறது. இந்த வழக்கில் அனைத்து சாட்சிகளும் பிறழ் சாட்சிகளாக மாறிய நிலையிலும், அதிநவீன தகவல் தொழில்நுட்பத்தை வைத்து, அதில் உள்ள தகவல்களை வைத்து வாதாடி உரிய நீதி பெற்று தந்த வழக்கறிஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற ஆணவ படுகொலைகளை தடுக்க தமிழக அரசு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் கோவில் திருவிழாவில் தலித் மக்கள் தாக்கப்பட்டதை கண்டிக்கிறோம். மதுரை சுற்றுப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தலித் மக்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள்.
அதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த தாக்குதல்களை கண்டித்து வருகிற 12-ந் தேதி மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர்.
- தேடப்பட்டு வந்தவர்களில் 12 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். அவர்களிடம் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மதுரை:
மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூரில் 108 திவ்ய தேசயங்களில் ஒன்றான காளமேக பெருமாள் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் மாலையில் சுவாமி-அம்பாள சட்டத்தேரில் பவனிவந்தனர். அதனை தொடர்ந்து கோவிலின் முன்புள்ள கலையரங்கில் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது இருதரப்பினருக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அது சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இருதரப்பினரையும் எச்சரித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த நிலையில் மோதல் சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினர் வசிக்கும் பகுதிக்குள் பயங்கர ஆயுதங்களுடன் நேற்று முன்தினம் நள்ளிரவு புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர்.
அதனை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தடுத்தனர். அவர்களில் செந்தில்குமார், செல்வகுமார் உள்ளிட்ட 2 பேரை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சரமாரியாக தாக்கினர். மேலும் பலருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
ஒரு தரப்பினர் நடத்திய இந்த தாக்குதலால் திருமோகூரில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. தாக்குதலில் 30-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், ஒரு கார் சேதமானது. தாக்குதலில் காயம் அடைந்த 3 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்த மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், துணை போலீஸ் சூப்பிரண்டு சீத்தாராமன், ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் ஏராளமானோர் வலியுறுத்தினர். அவர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். தாக்குதல் சம்பவம் குறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்கு பதிந்தனர்.
மனோஜ்பிரபாகரன், பிரபு, முகேஷ், ஆகாஷ், நேரு, மாதேஷ், சூரிய பிரகாஷ், அருண், ஸ்ரீகாந்த், வைரபிரகாஷ், அர்ஜூன், சாந்தகுமார், சிவா, ராேஜந்திரபாண்டியன், சந்துரு உள்ளிட்ட 24 பேர் மீது 9 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அவர்கள் அனைவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தேடப்பட்டு வந்தவர்களில் 12 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். அவர்களிடம் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மேலும் 12 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
- இன்ஸ்பெக்டர் குபேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள முள்ளிபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைபாண்டி. இவரது மகன் நாகபாண்டி (வயது 21). இவர் நகரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நாகபாண்டி அடிக்கடி செல்போன் பயன்படுத்தியதை குடும்பத்தினர் கண்டித்தனர். இதில்விரக்தி அடைந்த நாகபாண்டி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காடுப்பட்டி சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குபேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- முதியவர் உள்பட 3 பேரிடம் பணம்-செல்போன் பறிக்கப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து சுராஜ்குமாரை கைது செய்தனர்.
மதுரை
மதுரை சத்தியசாய் நகர் குறிஞ்சி தெருவை சேர்ந்தவர் சின்னமணி (வயது 29).இவர் சம்பவத்தன்று ெஜய்ஹிந்த்புரம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் சின்னமணியை தாக்கி செல்போன்,ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றனர்.
எம்.கே.புரம் முத்துத்தேவர் தெருவை சேர்ந்தவர் பைசல் பாபா (28). இவர் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு மின்வாரியம் அருகே நடந்து சென்றபோது, 17 வயதுடைய நபர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றான். அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவனை கைது செய்தனர்.
எஸ்.எஸ்.காலனி காளிமுத்து நேதாஜி தெருவை சேர்ந்தவர் பாண்டி (68). இவர் பை-பாஸ் ரோட்டில் நடந்து சென்றபோது ஜார்க்கண்ட் மாநிலத்ைத சேர்ந்த சுராஜ்குமார் (21) உள்பட 2 பேர் செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுராஜ்குமாரை கைது செய்தனர். தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.
- திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
ஈரோடு மாவட்டம் கந்தசாமி பாளையத்ைத சேர்ந்தவர் சிவசக்திவேல் (வயது 22), மில் தொழிலாளி. இவர் திருமங்கலம் அருகே திரளி கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவில் பங்கேற்க வந்திருந்தார். சம்பவத்தன்று அந்த கிராமத்தை சேர்ந்த தன்னுடன் வேலை பார்க்கும் ரஞ்சித்குமார் என்பவருடன் சிவசக்திவேல் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். டி.புதுப்பட்டி ரோட்டில் சென்றபோது மோட்டார் சைக்கிள் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாது. இதில் படுகாயம் அடைந்த சிவசக்திவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார். ரஞ்சித்குமார் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கூடலழகர் பெருமாள் கோவில் தேரோட்டம் விமரிசையாக நடந்தது.
- நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மதுரை
மதுரை மத்தியில் அமைந்துள்ள 108 வைணவ தலங்களில் ஒன்றான கூடலழகர்பெருமாள் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்து டன் தொடங்கியது. அன்றைய நாளில் இருந்து சுவாமி-அம்பாள் காலையில் பல்லக்கிலும், இரவில் யானை, கருடன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 8-ம் நாள் திருவிழாவான நேற்று பெருமாள் குதிரை வாக னத்தில் வீதிஉலா வந்தார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.இதையொட்டி தெற்குமாசி வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டிருந்த அலங்கரிக்கப்பட்ட தேரில் இன்று காலை 6 மணிக்கு வியூக சுந்தரராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து சிறப்பு பூைஜகள் நடைபெற்றன.
கோவிந்தா கோஷங்கள் முழங்க 6.30 மணி அளவில் ேதரோட்டம் தொடங்கியது. பெண்கள், இளைஞர்கள் உள்பட நூற்றுக்கணக்கா னோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.பாண்டிய வேளாளர் தெரு, தெற்கு மாரட் வீதி, திரு ப்பரங்குன்றம்சாலை, நேதாஜி ரோடு, மேலமாசி வீதி வழியாக தேர் பக்தர்கள் வெள்ளத்தில் ஆடியசையந்து வந்து கண்கொள்ளா காட்சி யாக இருந்து. வழிநெடுகிலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். காலை 9 மணிக்குள் தேர் நிலையை வந்தடைந்தது. தேேராட்டத்தை முன்னிட்டு பெரியார் பஸ் நிலையம், கிரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இன்று இரவு தங்க சிவிகையில் பெருமாள் எழுந்தருளி அருள்பாலிக்கி றார். நாளை மாலை திருத்தேர் தடம் பார்த்தல் நிகழ்ச்சிநடக்கிறது. 5-ந்தேதி கோவிலில் இருந்து குதிரை வாகனத்தில் புறப்படும் பெருமாள் அன்று இரவு வைகை ஆற்றாங்கரையில் உள்ள ராமராயர் மண்ட பத்தில் எழுந்தருளுகிறார். அதனை தொடர்ந்து விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது.
மறுநாள் 6-ந்தேதி கருட வாகனத்தில் புறப்படும் பெருமாள் வெங்கலக்கடை தெருவில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் சத்தி ரத்தில் எழுந்தருளுகிறார். அன்று மாலை திருமஞ்சன மாகி குதிரை வாகனத்தில் பெருமாள் கோவிலை வந்தடைகிறார். 8-ந்தேதி உற்சவ சாந்தியுடன் விழா நிறைவுபெறுகிறது.
- வீடு புகுந்து 5 பவுன் நகை திருடப்பட்டது.
- கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் கள்ளிக்குடி அருகே உள்ள கள்ளிக்குடி சத்திரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 67), ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டார். இதை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் நகை, 6 வெள்ளி குத்துவிளக்கு, ஒரு வெள்ளி விநாயகர் சிலை ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.
இதுகுறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
- ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது இருதரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
- தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 3 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
மேலூர்:
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே திருமோகூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான காலமேக பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 10 நாட்களாக வைகாசி பெருந்திருவிழா நடந்து வருகிறது.
நேற்று மாலை சுவாமி-அம்பாள் சட்டதேரில் பவனி வந்தனர். அதனை தொடர்ந்து கோவில் முன்பு மெயின்ரோட்டில் உள்ள கலையரங்கத்தில் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது அங்கு திரண்டிருந்த இருதரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அது சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. இருதரப்பினர் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
அப்போது அங்கிருந்த போலீசார் இருதரப்பினரையும் எச்சரித்து அப்புறப்படுத்தினர். ஆனால் இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் மற்றொரு தரப்பினர் வசிக்கும் காலனிக்கு நேற்று நள்ளிரவு கம்பு, கல் போன்ற ஆயுதங்களுடன் கும்பலாக புகுந்தனர்.
அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்த வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதில் 30-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் சேதமானது.
இதனை தடுக்க வந்த அந்த பகுதியை சேர்ந்த செந்தில்குமார், செல்வகுமார் உள்பட 3 பேர் மீது அந்த கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து அவர்கள் அப்பகுதியை சேர்ந்த சிலருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பினர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 3 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நள்ளிரவில் நடந்த இந்த தாக்குதலால் திருமோகூரில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சீதா ராமன், ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் புகழேந்தி, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
மேலும் பொதுமக்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். தாக்குதலில் ஈடுபட்டவர்களில் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். தாக்குதலில் யாரெல்லாம் ஈடுபட்டார்கள் என்று போலீசார் விசாரணை நடத்தினர்.
தாக்குதல் தொடர்பாக 23 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கோவில் திருவிழாவில் நடந்த இந்த மோதல் சம்பவம் காரணமாக திருமோகூரில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- தி.மு.க. தீர்மானக்குழு நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
- ரூ.3,233 கோடிகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தகள் போட்ட நமது முதல்வருக்கு பாராட்டுகளும், வாழ்த்து களும் தெரிவிக்கப்பட்டது.
மதுரை
தி.மு.க. தலைமை தீர்மானக்குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அலுவலகத்தில் நேற்று நடந்தது. தீர்மானக் குழு தலைவர் கவிஞர் தமிழ்தாசன் தலைமை தாங்கினார். தீர்மானக்குழு செயலாளர்கள் வைத்திய லிங்கம், எம்.எஸ். விஸ்வ நாதன், அக்ரி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் பார் இளங்கோ, சத்தியமூர்த்தி, டாக்டர் மாசிலாமணி, நாச்சிமுத்து, ஜெயகுமார், வேங்கடபதி, மிசா ராமநாதன், சேது நாதன், ஆதி சங்கர், ரெஜினால்டு, வெற்றிச் செல்வன், சரவணன், செஞ்சி சிவா, செல்வராஜ், வீர கோபால், காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீரமானங்கள் வருமாறு:-
உயர்நிலை செயல் திட்டகுழு கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மா னங்களின் அடப்படையில் நிர்வாகிகள் செயல்பட வேண்டும். ஜூன் 20-ந் தேதி திருவாரூரில் நடக்கும் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் கலந்து கொள்வது. தீர்மானக்குழு சார்பாக சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டுவிழா பட்டிமன்றம் , கருத்தரங்கம் அல்லது கவியரங்கம் மிகப்பெரிய அளவில் கழக தலைவர் தலைமையில் நடத்த வேண்டும்.புதிய உறுப்பினர்கள் சேர்க்கையில் முழுமையாக அனைவரும் ஈடுபட வேண்டும்.
மேலும் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்று ரூ.3,233 கோடி களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தகள் போட்ட நமது முதல்வருக்கு இக்கூட்டம் பாராட்டுகளும், வாழ்த்து களும் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை உச்சநீதி மன்றம் வரை சென்று வெற்றி பெற்று தந்த தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி ெதரிவிக்கப்பட்டது.
முடிவில் செஞ்சி சிவா நன்றி கூறினார்.






