விக்கிரமங்கலத்தில் கோவில் பாலாலயம்

விக்கிரமங்கலத்தில் கோவில் பாலாலயம் நடந்தது. சுவாமிகளை மாற்று இடத்தில் பிரதிஷ்டை செய்து அபிஷேகம், ஆராதனை நடந்தது.
விக்கிரமங்கலத்தில் கோவில் பாலாலயம்
Published on

சோழவந்தான்

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கோவில் பட்டியில் 12-ம் நூற்றாண்டைச் சார்ந்த பழமையான சிவனேசவல்லி சமேத மதுரோதைய ஈஸ்வரமுடையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராம கிருஷ்ணா மடாதிபதி நியமானந்த தலைமையில் பாலாலய வழிபாடு நடந்தது.

கோவிலின் புனரமைப்பு பணிகளை தொடங்கு வதற்காக சிவாச்சாரியார் கார்த்திக் வீரபாகு தலைமையில் யாக பூஜைகள் செய்யப்பட்டு, சுவாமிகளை மாற்று இடத்தில் பிரதிஷ்டை செய்து அபிஷேகம், ஆராதனை நடந்தது. சரக ஆய்வர் (பொறுப்பு) தியாகு, தக்கார் சுதா, கணக்கர் முரளிதரன், பூசாரி கருத்தப்பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருப்பணிக்குழு முயற்சி யாளர்கள் பால சுப்பிரமணி, பழனிவேல், கண்ணன், முத்துராம லிங்கம், மகாமுனி, வீரசிங்கம், சாமி, பூர்வ லிங்கம், தங்கதுரை, தன பாண்டி, காட்டு ராஜா, சக்திவேல், ஜோதி, சிவா, செல்வம், அன்பழகன், ஜெகதீசன், பிச்சைமணி, பாண்டிகுமார் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com